Share via:
’மன்னர்களின் அந்தப்புரப்
பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான் தெலுங்கர்கள் என்று நடிகை கஸ்தூரி பேசியிருப்பது
பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. கஸ்தூரிக்கு எதிராக தெலுங்கர்கள் கடும் எதிர்ப்பு
தெரிவிக்கும் நிலையில், நீதிமன்றத்துக்கும் இழுக்கிறார்கள்.
சென்னையில் பிராமணர்கள்
பாதுகாப்பு கேட்டும் பிசிஆர் சட்டம் போல பிராமணர்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை
எடுக்க வகை செய்யும் தனி சட்டம் கொண்டு வர வலியுறுத்தியும் சென்னை, ராஜரத்தினம் ஸ்டேடியத்தில்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடிகை கஸ்தூரி, ‘’தெரியாமத்தான் கேட்கிறேன்..
300 வருஷம் முன்னாடி ஒரு ராஜா கூட சேர்த்துகிட்ட அந்தப்புர மகளருக்கு சேவைகள் செய்ய
வந்தவர்கள் எல்லாம், தெலுங்கு பேசுகிறவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் இனம்
அப்படின்னு சொல்லும்போது, எப்பவோ வந்த பிராமணர்களை நீங்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல
நீங்கள் யார்?
இதைக் கேட்டா திராவிடியா
கும்பல் தேசிடியான்னு பேசுவாங்க. அப்படியே இருந்தாலும் நான் என் உடல் கொண்டு உழைக்கிறேன்’’
என்று பேசியிருந்தார். இதற்கு கடுமையாக எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. தமிழகத்தில்
தமிழ் பேசுபவர்களையும் தெலுங்கு பேசுபவர்களையும் திட்டமிட்டு மோத வைத்து வேடிக்கை பார்க்கும்
வகையில் பேசியிருக்கிறார் கஸ்தூரி. எனவே, நடிகை மீது அவதூறு வழக்கு பதிவு செய்யுங்கள்.
மான நஷ்ட ஈடாக ஆயிரம் கோடியை கேளுங்கள் மனது புண்பட்டு விட்டது என்று அனைவரும் ஒன்று
சேர்ந்து மாவட்டம் வாரியாக வழக்கை பதிவு செய்து அலைய விடுங்கள் என்று தெலுங்கு பேசுவோர்
கொந்தளிக்கிறார்கள்.
மேலும் பிசிஆர் போல்
எங்களுக்கும் ஒரு சட்டம் வேண்டும் என்று கேட்பதும் கடும் கண்டனம் எழுப்பியிருக்கிறது.
பட்டியலின மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளும் பார்ப்பனர்கள் விமர்சனமும் ஒன்றா.?
ஏற்கெனவே இடஓதுக்கீடு மூலம் ஏகப்பட்ட உரிமைகள் பெற்றுவரும் இந்த சமூகத்தின் வாலை ஒட்ட
நறுக்க வேண்டும் என்று திராவிடர்கள் கொதித்து எழுந்திருக்கிறார்கள்.
அதேநேரம், கஸ்தூரியின்
பேச்சு தெலுங்கு தேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அங்கிருந்தும் கண்டனக்
குரல்கள் எழுந்துள்ளன. வழக்கம் போல் கஸ்தூரி மன்னிப்பு கேட்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.