News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அமைச்சர் ரோஜா ஆபாச படத்தில் நடித்ததாக எழுந்த சர்ச்சை குறித்து தெலுங்கு தேசம் கட்சியின் மாநில மகிளரணி தலைவி வாங்கலபடி அனிதா பதிலடி கொடுத்துள்ளார்.

ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா ஆபாச படத்தில் நடித்ததாக தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்தியநாராயணா மூர்த்தி சமூத்தில் பேசினார். இது சர்ச்சையான நிலையில் அமைச்சர் ரோஜா தனது திருப்பதி வீட்டில் செய்தியாளர்களுக்கு கண்ணீர் மல்க பேட்டி கொடுத்து பண்டாரு சத்தியநாராயணமூர்த்தி மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன் என்று தெரிவித்தார். மேலும் தெலுங்கு தேசம் கட்சியின் பெண்களுக்கு மரியாதையோ பாதுகாப்போ இல்லை என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் மாநில மகளிரணி தலைவியான வாங்கலபடி அனிதா கூறும்போது, ‘‘தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி மற்றும் அவர்களது மருமகள் பிராமணியை அமைச்சர் ரோஜா தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததற்கு ஏன் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் மட்டும் பெண்கள் இல்லையா? அமைச்சர்கள் மட்டும்தான் பெண்களா? என கேள்வி எழுப்பினார்.

மேலும் பண்டாரு சத்தியநாராயணா மூர்த்தி பேசியதை மறைக்கவே ரோஜா கண்ணீர் விட்டு அழுது நாடகமாடுகிறார் என்று தெரிவித்தார். ரோஜாவை யாரும் பெண்ணாக கருதவில்லை என்றும் ஓய்.எஸ்.ஆர். காங்கிரசில் உள்ளவர்கள் அமைச்சர் ரோஜாவை வெறுக்கிறார்கள் என்று கூறிய அவர், அமைச்சர் ரோஜா பெண்களிடம் அனுதாபம் பெறவே அழுது நாடகமாடுகிறார் என்று குற்றம்சாட்டி பேசினார்.

அமைச்சர் ரோஜா டிரெய்லர் மட்டும்தான் தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது. விரைவில் ஒரிஜினல் படத்தை வெளியிடுவோம் என்று ஆபாச படம் குறித்து தெலுங்கு தேசம் மகளிர் அணி தலைவி பேசியது துற்போது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதற்கு அமைச்சர் ரோஜா என்ன பதிலடி கொடுப்பார் என்று ஆந்திர மாநில மக்கள் கவனித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link