News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மும்பை சென்றுள்ள தெலுங்கு நடிகர் ராம்சரண் அங்குள்ள சித்தி விநாயகரை வழிபட்ட உடனே இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ்.தோனியை சந்தித்துள்ளார்.


தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான ராம்சரண், ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தைத் தொடர்ந்து கோலிவுட் இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். தில்ராஜூ தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.


பிரமாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் ஷங்கர் இத்திரைப்படத்தின் பாடல் காட்சிகளுக்காக மட்டும் ரூ.90 கோடி அளவுக்கு செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.


இந்நிலையில் மும்பைக்கு சென்ற நடிகர் ராம்சரண் அங்குள்ள சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து உடனடியாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டனான எம்.எஸ்.தோனியையும் நேரில் சந்தித்தார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வருகிறது.


எம்.எஸ்.தோனி தயாரிப்பு நிறுவனத்தில் கோலிவுட்டில் எல்.ஜி.எம். திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து இந்த சந்திப்பின் நோக்கம் தெலுங்கில் எம்.எஸ்.தோனி ஏதேனும் திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறாரோ என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link