Share via:

நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் வழியில் சாட்டை துரைமுருகன்
வெளியேற்றப்பட்டிருக்கும் விவகராம் தம்பிகளிடம் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.
காளியம்மாள் வெளியேறிய நேரத்தில், ‘’நாம் தமிழர் கட்சி என்பது ஒரு சனநாயக கட்சி.. விரும்பியவர்கள்
இணைந்து செயல்ப்படலாம். விருப்பம் இல்லாதவர்கள் விலகி செல்லலாம்.. சென்றவர் போக நின்றவர்
முன்னேறுக.’’ என்றார் சீமான்.
கட்சியில் தனக்குப் போட்டியாக யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே
சாட்டைக்கும் சீமான் டாட்டா காட்டிவிட்டார் என்றே சொல்லப்படுகிறது. கட்சியில் காளியம்மாளுக்கு
ஆதரவு பெருகியதும் அவரை பிசிறு என்று பேசி வெளியே அனுப்பினார் சீமான். சாட்டை துரைமுருகன்
ஏற்கெனவே மூன்று முறை கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு, திரும்பவும் சேர்த்துக்கொள்ளப்பட்டவர்.
ஆனால், இந்த முறை விஷயமே வேறு என்கிறார்கள். இது குறித்து பேசும்
நாம் தமிழர் கட்சியினர், ‘’சமீபத்தில் மூன்று வில்லங்கமான வீடியோக்களை சாட்டை துரைமுருகன்
வெளியிட்டார். நித்தியானந்தா விவகாரத்தில் கட்சிக்காரர்களிடம் கடும் எதிர்ப்பு வந்தது.
அடுத்து பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வீடியோ போட்டார். அதில், “நயினார்
நாகேந்திரன் மீது சங்கி முத்திரை குத்த முடியாது. வைரமுத்து விவகாரத்தில் மட்டும் ஒரு
controversial statement கொடுத்திருந்தாரு. மற்றபடி அவர் controversy ஆக பேசியது கிடையாது.
அவர் டீசண்ட்டான politician” என்று பேசியிருந்தார். அவர் மீது கோடிக்கணக்கில்
ஊழல் குற்றச்சாட்டு இருப்பது, இந்துக்களுக்கு எதிராகப் பேசினால் தலையை வெட்டுவேன் என்று
பேசியதை எல்லாம் அவர் பதிவு செய்யவில்லை. அதேநேரம், சீமானும் மாமா என்று நயினாருக்கு
ஆதரவு கொடுத்திருந்தார் என்றாலும், இந்த அளவுக்கு இறங்கிச் சென்று பாராட்ட வேண்டுமா
என்ற கேள்வி எழுந்தது.
இவை இரண்டையும் விட சிக்கலான விவகாரம் என்னவென்றால் வைகுண்டராஜன்
குறித்து சாட்டை துரைமுருகன் போட்ட வீடியோ தான். சசிகலா ஆதரவுடன் தாதுமணற்கொள்ளை வளர்ந்த
விதம், சசிகலா துரத்தப்பட்டபோது ஜெயா நேரடியாக வைகுண்டராஜனை டீல் செய்ததில் வந்த சண்டை.,
அதைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட தடை; தடைக்காலத்திலும் சட்டவிரோதமாக மணல் கடத்தப்பட்ட
விதம் போன்றவைகளை அம்பலப்படுத்தியிருந்தார்.
வைகுண்டராஜனுக்கும் சீமானுக்கும் உள்ள தொடர்பு சாட்டை துரைமுருகனுக்கு
நன்றாகவே தெரியும். அப்படி தெரிந்தும் வேண்டுமென்றே வீடியோ போட்டதை சீமானால் தாங்கிக்கொள்ள
முடியவில்லை. இருவருக்கும் பொதுவான ரகசியங்கள் நிறைய இருக்கிறது என்றாலும், இனி இவர்கள்
ஒன்று சேர வாய்ப்பே இல்லை. காளியம்மாள் போன்று அவரே வெளியேறட்டும் என்று சீமான் காத்திருக்கிறார்’’
என்றார்கள்.
சாட்டை துரைமுருகனும் இந்த விஷயத்தை லேசில் விடுவதாக இல்லை. எக்ஸ்
தளத்தில் தனது முகப்பு படத்தில் நாதக கொள்கை பரப்பு செயலாளர் என்று குறிப்பிட்டிருந்ததை
நீக்கிவிட்டார். ஆனால், சாட்டை துரைமுருகன் கட்சியில் இருந்து விலக மாட்டார். சீமான்
கண்டிப்பாக வந்து சேர்த்துக்கொள்வார் என்கிறார்கள். தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு தலையாக
வெளியேறிக்கொண்டிருந்தால் எப்படி என்று தம்பிகள் தடுமாறுகிறார்கள்.