Share via:
கவர்னர் பதவியில்
இருந்துகொண்டு ஆளும் தி.மு.க.வை கடுமையாக தொடர்ந்து விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார்
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னராக இருக்கும் தமிழிச்சை செளந்தரராஜன்.
இன்று சென்னை
விமானநிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்த நேரத்தில் அவரது மகன் சுகந்தன் தீடிரென,
‘பா.ஜ.க. ஒழிக’ என்று சத்தம் போட்டு குரல்
எழுப்பினர்.
உடனே அவரை
பாதுகாப்புடன் அனுப்பிவைத்த தமிழிசை, என் மகனுக்கு உடல் நிலை சரியில்லை, அதனால் இப்படி
பேசுகிறான் என்று சமாளித்தார். உடல் நிலை சரியில்லாத ஒருவர் இப்படித்தான் பேசுவாரா
என்று டாக்டர் தமிழிசைதான் சொல்ல வேண்டும்.
அவரது தந்தை
குமரி அனந்தன் காங்கிரஸில் இருந்த காரணத்தால் இருவருக்கும் உறவு கிடையாது. அதேபோல்
இப்போது மகனுடனும் அவருக்கு உறவு சரியில்லை என்பது தெரியவந்திருக்கிறது. இதனால் முதலில்
குடும்பத்தை சீர் செய்துவிட்டு அரசியல் பேசுங்க மேடம் என்று தி.மு.க. ஐ.டி. விங் தொடர்ந்து
தமிழிசைக்கு அறிவுரை கொடுத்து வருகிறார்கள்.
முதலில் மகனின்
உடல் நிலையிலும் மன நிலையிலும் கவனம் செலுத்துங்கள்.