News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

 

‘’நான் முழுத் தேங்காய்க்கு போராடியவன் தோழர் தமிழரசன் தேங்காய் சில்லுக்காக போராடியவர்’’ என்று சீமான் பேசியிருப்பது தமிழ் உணர்வாளர்க்ளிடம் மிகப்பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.   

இது வரை சீமானுக்கும் மே 17 இயக்கம் திருமுருகன் காந்திக்கும் இடையில் உள்ளூர நடந்துகொண்டிருந்த மோதல் இந்த விவகாரத்தில் வெளிப்படையாக வெடித்திருக்கிறது.

சீமானின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் திருமுருகன் காந்தி, ‘’இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்களாக இருந்தபோதிலும், மேதகு பிரபாகரன் தமிழர்களின் தாயகமாக வடக்கு-கிழக்கை இணைத்த தமிழீழத்தையே தமிழ்த்தேசமென அறிவித்து, போர் புரிந்தார்.

‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து’ (தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம்:1-3) எனும் நிலப்பரப்பே தமிழ்த்தேசமென அறியப்பட்டு தோழர்.தமிழரசனால் விடுதலை போராட்டம் நடத்தப்பட்டது. மொழிவழி தேசிய இனவிடுதலை என்பது நிலப்பரப்பு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல,

‘வரலாற்று-பண்பாட்டு-பொருளாதார ரீதியாக இணைக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை’ எனும் புரிதல் இல்லாதவர்கள் பேசுவது தமிழ்த்தேசியமல்ல. நல்லவேளை, தோழர்.தமிழரசன் உடும்புக்கறி செய்துகொடுத்தார் என கதையளக்கவில்லை என்பதளவில் தோழர்.தமிழரசனின் வரலாறு தப்பித்தது. வசனகர்த்தாவிடம் வரலாறு கேட்டால், வாய்ஜாலம் தான் கிடைக்கும், விடுதலை கிடைக்காது.

இந்தியா எனும் தேங்காய்க்குள் இருக்கும் ‘தேங்காய்-துண்டு’ அல்ல தமிழ்நாடு. இந்தியா என்பது செயற்கையாக உருவாக்கப்பட்ட தேசம், தமிழ்நாடு இயற்கையாக உருவான தேசம்..’ என்பதுதான் தோழர்.தமிழரசன் முன்வைத்த ஆய்வு.

தமிழரசன் ஒட்டுமொத்த இந்தியாவையே தமிழர்களின் தேசம் என்று சொல்லவில்லை. ‘இந்தியா’ எனும் பார்ப்பன-மார்வாடி தேசத்திலிருந்து தமிழர்கள் விடுதலை பெறவேண்டுமென்று மேதகு பிரபாகரனை போல ஆயுதபடையை கட்டினார் தோழர்.தமிழரசன் என்பது அழிக்க இயலாத வரலாறு.

தமிழரசனின் தியாகத்தின் நியாயத்தை சொல்வதற்குகூட துணிச்சல் இல்லாத கோழைகள் தோழர்.தமிழரசனை பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்வது நல்லது. ஈழ விடுதலை போராட்டத்தை ‘முனியாண்டி விலாஸ்’ போல பேசித்திரிந்து சிதைத்ததை போல, தமிழரசனின் அரசியலையும் சிதைக்க முயலுவது இந்திய கைக்கூலித்தன வேலை செய்வதாகும்தோழர்.தமிழரசனின் ‘தமிழ்நாடு விடுதலை படை’யில் களம் கண்டவர்கள் இன்றும் தமிழ்நாட்டின் அரசியலில் முற்போக்கு அரசியலை மேற்கொண்டு வருகிறார்கள். ஆகவே திரிபுவாதிகள் பொய் கதைகளை நிறுத்திக்கொள்வது நல்லது’’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.

கார் ரேஸ் பிரச்னை முடிந்ததும் சீமான் தம்பிகளுக்கு அடுத்த வேலை வந்தாச்சு. திருமுருகன் காந்தியிடம் மல்லுக்கட்டுகிறார்கள்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link