Share via:

வரும் 2026 தேர்தலை எதிர்கொள்வதற்கு தேர்தல் ஆலோசகர்கள், பென்
டீம், ஐ.டி. விங் என ஆளுக்கொரு ஏரியாவைப் பிரித்து தீவிரமாக தி.மு.க. செயலாற்றி வருகிறது.
இந்த நிலையில் தேர்தலை எதிர்கொள்வதற்காக தமிழகத்தை எட்டு பகுதிகளாகப் பிரித்து ஆளுக்கொரு
ஏரியாவைக் கொடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
அதன்படி 2026 தேர்தலை சந்திக்க எட்டு மண்டல பொறுப்பாளர்கள் தேர்வு
செய்யப்பட்டுள்ளார்கள். அதாவது கே.என்.நேரு, எ.வ.வேலு, மூர்த்தி, கனிமொழி, தங்கம் தென்னரசு,
செந்தில் பாலாஜி, அர.சக்கரபாணி, சேகர் பாபு என பொறுப்பு கொடுக்க இருக்கிறார்கள்.
இதுவரை தேர்தல் பொறுப்பில் முக்கிய பங்கு வகித்த துரைமுருகன்,
பொன்முடி, ஐ.பெரியசாமி ஆகியோர் முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளனர். தற்போது நேரு ஒருவர்
மட்டுமே சீனியர் என்ற ரீதியில் இந்த தேர்தல் டீமில் இருக்கிறார். இதற்கு ஒப்புக்கொண்டால்
மட்டுமே துரைமுருகன், பொன்முடி, ஐ.பெரியசாமி ஆகியோருக்கு தேர்தலில் சீட் வழங்கப்படுமாம்.
ஏமாற்றத்தை வெளிப்படையாகக் காட்டினால் கட்சி பதவி பறிக்கவும் ஸ்டாலின் ரெடி என்கிறார்கள்.
இந்த பட்டியலில் உதயநிதிக்கு இடம் இல்லை. அவர் ஒட்டுமொத்தமாக தேர்தல்
பிரசாரம் மட்டுமே மேற்கொள்வாராம். விஜய் பேசுவதற்கு இடம் கொடுக்காமல் உதயநிதி இந்த
தேர்தலில் அடக்கியே வாசிப்பார் என்கிறார்கள். பார்க்கலாம்.