Share via:
நடிகர் விஜய்க்கும் அவரது கட்சி நிர்வாகிகள், ரசிகர்களுக்கு
மட்டுமின்றி குடும்பத்தினருக்கும் இடையில் நந்தி போன்று நிற்பவர் புஸ்ஸி ஆனந்த். யார்
இந்த புஸ்ஸி ஆனந்த் என்று விசாரித்தால் எக்கச்சக்க வில்லங்க விவகாரங்கள் வந்து கொட்டுகின்றன.
முதலில் அவர் பெயருக்கு முன்னே இருக்கும் புஸ்ஸி பற்றி பார்க்கலாம்.
புதுவையில் சுமார் 5,000 ஓட்டுகள் உள்ள சிறிய சட்டமன்றத் தொகுதி தான் ‘புஸ்ஸி தெரு’.
இந்த தொகுதியில் புதுச்சேரி கண்ணன் தொடங்கிய புதுவை மாநில காங்கிரஸ் சார்பில்,
2006-ம் ஆண்டு தேர்தலில் நின்று 2,500 ஓட்டுகள் வாங்கி ஜெயித்தவர். அதன் பிறகு அந்த
தொகுதியின் பெயர் மாற்றப்பட்டு விட்டாலும், அதை தனது அடையாளமாக வைத்துக்கொண்டவரே இந்த
புஸ்ஸி ஆனந்த்.
புதுச்சேரியில் சாதாரண விறகுக்கடை வியாபாரம் செய்து வந்தவர்
புஸ்ஸி ஆனந்த். முன்னாள் எம்.எல்.ஏ என்ற அந்தஸ்தில் விஜய் ரசிகர் மன்றத்தின் சாதாரண
கிளை தலைவராக இருந்து வந்த இவரை, தமிழக விஜய் ரசிகர் மன்றத் தலைவராக பதவி கொடுத்தவர்
நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர். ஆனால், ஒரு கட்டத்தில் நடிகர் விஜய்க்கும்
சந்திரசேகருக்கும் இடையில் பிரச்னையை உருவாக்கி பிரித்தவரும் புஸ்ஸியே தான்.
கேரளா மந்திரவாதிகளை வைத்து விஜய்யை எங்களிடம் இருந்து புஸ்ஸி
ஆனந்த் பிரித்து விட்டார் என விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரும் அம்மா ஷோபாவும் இப்போதும்
புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும், தன்னுடைய பெற்றோரை விட இவரையே விஜய் அதிகம்
நம்புவதைப் பார்க்கும்போதும், வசியத்தின் மீது நம்பிக்கை வைக்கவே தோன்றுகிறது.
புஸ்ஸி ஆனந்த் பணம் சம்பாதித்த விவகாரமும் வில்லங்க வழியில்தான்.
புதுச்சேரி புஸ்ஸி தெருவில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் வாசலில் படுத்திருந்த ரிக்சாக்காரர்
ஒருவர் இறந்து விட,அவரது பிணத்தை வங்கி கட்டிடத்திற்குள் போட்ட புஸ்ஸி ஆனந்த், இதை
வைத்து பெரும் பிரச்சனை செய்ய, அந்த கட்டிட உரிமையாளர் புஸ்ஸி ஆனந்துக்கே அந்த சொத்தை
குறைந்த விலையில் விற்று விட்டார்.
இதுபோல, புதுச்சேரி முழுவதும் குடியிருக்கும் பிரான்ஸ் நாட்டவர்களின்
வில்லங்கமான சொத்துக்களை அபகரிப்பதுதான் புஸ்ஸி ஆனந்தின் முழுநேர தொழில். இவர் மீது
இதுபோன்று பல வில்லங்கமான புகார்கள் உள்ளன. நடிகர் விஜய்யின் சித்தப்பா, புதுவை எல்லப்பிள்ளை
சாவடி பகுதியில் வசித்து வருகிறார்.
நடிகர் விஜய் அடிக்கடி வேளாங்கண்ணி கோயிலுக்கு போகும்போது அவரது
சித்தப்பாவை சந்திக்க வருவார். அப்போது தான் விஜய்யுடன் பழக்கமானார் இந்த புஸ்ஸி ஆனந்த்.
பாண்டிச்சேரி எஸ்.பி.-யாக இருந்த விஜயகுமார், புஸ்ஸி ஆனந்தின் மாமா ஆவார். விஜயகுமாருக்கு,
புதுச்சேரி பாஜக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் நமச்சிவாயம் மிகவும் நெருக்கமானவர்.
தனது மாமா மூலம் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் புதுச்சேரி முதல்வர்
ரெங்கசாமியுடன் நெருக்கமாகிறார் புஸ்ஸி ஆனந்த். பாஜக அமைச்சர் நமச்சிவாயம் மூலம் அமித்ஷாவுக்கு
அறிமுகமாகிறார் புஸ்ஸி ஆனந்த். அமித் ஷா போட்ட பிளான் படியே காரியங்கள் செய்துவருகிறார்
புஸ்ஸி ஆனந்த்.
விஜய் ரசிகர் மன்ற தலைவர், ரியல் எஸ்டேட், ஃபைனான்ஸ் என பிஸியாக
இருக்கும் புஸ்ஸி ஆனந்த் விஜய்க்கு ஜாதகத்தைக் காட்டி அரசியலில் குதிக்க வைத்திருக்கிறார்.
பெற்றோர் அருகில் இருந்தால் விஜய்க்கு வெற்றி கிடைக்காது என்று
பிரித்தது மட்டுமின்றி, ஜாதகப்படி 2026ம் ஆண்டு ராஜயோகம் வருகிறது, இதை தவறவிடக் கூடாது
என்று சொல்லிச்சொல்லி கட்சி ஆரம்பிக்கத் தூண்டிவிட்டார்.
புஸ்ஸி ஆனந்த் முயற்சியால், புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி பலமுறை
விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில், சிறுபான்மையினர் ஓட்டுகளை
பிரித்து திமுகவுக்கு சிக்கலை உருவாக்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க. கொடுத்திருக்கும்
அசைன்மென்ட்.
எது உண்மை, யார் உண்மையான நபர் என்றெல்லாம் தெரியாமல் களத்தில்
கால் வைத்துவிட்டார் விஜய். அவரிடம், ‘நீங்கள் தமிழக முதல்வராக இருங்கள், நான் புதுவைக்கு
முதல்வர் ஆகிறேன். தமிழக அரசியலில் தலையிட மாட்டேன்’ என்று நல்லபிள்ளை போன்று சொல்லி
அவரை ஆட்டிவைத்து வருகிறார்.
பெத்தவங்க சொல்றதைக் கேட்காம மத்தவங்க பேச்சுக்கு ஆடுற பிள்ளை
உருப்படுமா என்பதை விஜய் தான் சொல்ல வேண்டும். அதனால்தான் அவரது தமிழக வெற்றிக் கழகத்தை
தந்தையை வெறுப்போர் கழகம் என்று கிண்டல் செய்கிறார்கள்.
புஸ்ஸியை வெளியே விரட்டாவிட்டால் விஜய்க்கு சிக்கலோ சிக்கல்
தான்.