உதயநிதிக்கு இம்புட்டு அறிவா..? நோபல் பரிசு கொடுங்கப்பா…

முதல்வர் முக ஸ்டாலினை பாராட்டுவதற்காக அவ்வப்போது திமுகவினர் விழா நடத்தி ஜால்ரா போடுவார்கள். அந்த வழியில் உதயநிதிக்கும் ஜால்ரா மேடையை தொடங்கிவிட்டார்கள். அமைச்சர்களின் ஜால்ரா காது கிழிகிறது. திமுக அறிவுத் திருவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், “ இந்த அறிவுத் திருவிழா நிகழ்ச்சிக்காக கடந்த ஒருமாத காலமாக மும்முரமாக ஈடுபட்ட துணை முதல்வர் உதயநிதிக்கு பாராட்டுக்கள். நான் நினைத்ததைவிடச் சிறப்பாகவே ஏற்பாடு செய்திருக்கிறார். உதயநிதியின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, “மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்” […]
திமுகவை திணற திணற மிரட்டும் கூட்டணிகள்… இடியாப்பச் சிக்கலில் ஸ்டாலின்

சென்னை, திருமண விழாவில் பேசிய ஸ்டாலின், ‘’திமுகவை அழித்து விடலாம் என்று நிறைய பேர் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். எந்தக் கொம்பனாலும் இந்த இயக்கத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாது…’ என்று வீரவசனம் பேசி வருகிறார். ஆனால், அவரது கூட்டணிக்குள் எக்கச்சக்க குடைச்சல் ஆரம்பமாகியுள்ளது. முதல் பஞ்சாயத்து திருமாவளவன். இந்த தேர்தலில் எப்படியும் இரட்டை இலக்கத்தில் இடம் வாங்கிவிட வேண்டும் என்று துடிக்கிறார். இதுவரை வாயில்லாத பூச்சி போல் கப்சிப் என்று இருந்த காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து அதிக […]
சன் டி.வி.க்குக் குடுக்காதீங்க… ரசிகர்கள் வேண்டுகோளை ஏற்பாரா விஜய்..?

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் தொலைக்காட்சி உரிமம் சன் டிவிக்கு 55 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், ஓடிடி உரிமம் அமேசான் ப்ரைமுக்கு 120 கோடிக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய்யின் திமுக எதிர்ப்பு அரசியல் சூடு பிடித்திருக்கும் நேரத்தில் ஜனநாயகன் டிவி உரிமத்தை சன் டி.வி.க்குக் கொடுத்திருப்பது விஜய் ரசிகர்களை அதிர வைத்திருக்கிறது. எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், கெளதம் மேனன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் […]
பாண்டே சர்வேயில் அதிமுக, விஜய் அசத்தல்… நாம் தமிழருக்கு என்னாச்சு..?

ரங்கராஜ் பாண்டே நடத்திவரும் சாணக்கியா சேனலில் ஒரு கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி அதிமுக முன்பு பெற்ற வாக்குகளும் பாஜக கூட்டணியின் வாக்குகளும் அதிமுகவுக்குக் கிடைப்பதால் 39% வாக்குகள் அள்ளும் என்று குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் திமுகவின் வாக்குகளை விஜய் பிரிப்பதால் அந்த கூட்டணி வாக்கு விகிதம் 46%ல் இருந்து 36% ஆகிவிடும் என்பதால் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார். அதாவது சாணக்யா கருத்து கணிப்பு படி, 2024 நாடாளுமன்ற தேர்தலோடு ஒப்பிடுகையில், திமுக 2026 இல் கிட்டத்தட்ட […]
திமுக, அதிமுக பூத் கமிட்டி சீர்திருத்தம்… பெண்களை களத்தில் இறக்கும் இபிஎஸ்

எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு தீவிரத் திருத்தம் காரணமாக வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுகவின் அடிப்படை வாக்குகளுக்கு ஆபத்து வரும் என்று கூறப்படுகிறது. வட மாநிலத்தவரை திணிக்கும் இந்த திட்டத்தை எப்படி தடுப்பது என்று இன்றைய தினம் திமுக, அதிமுக கட்சித் தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். திமுகவினர் ஏற்கெனவே பூத் கமிட்டிக்கு ஆள் நியமித்து பாக முகவர்கள் நியமனம் செய்திருக்கும் நிலையில் இன்று ஐ.டி. விங் கூட்டத்தை நடத்தி புதிய திட்டத்தை அறிமுகம் செய்கிறார் எடப்பாடி […]
விஜய் பாதுகாப்புக்கு தொண்டர் படை… ஸ்டாலின் கூட்டத்துக்கு நோ

கரூர் சம்பவத்திற்குப் பிறகு தான் வெளியே செல்கையில் எவ்விதமான அசம்பாவிதங்களும் நடைபெறக்கூடாது என்பதில் நடிகர் விஜய் தெளிவாக இருக்கிறார். இதற்காக தொண்டர் படை அமைக்கப்படுகிறது. இதனை நிர்வகிக்கும் பொதுப்புஓய்வு பெற்ற ஐஜி ரவிகுமாருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ரவிகுமார் தலைமையில் 15 ஓய்வுபெற்ற காவல்துறை டிஎஸ்பிக்கள் இருப்பார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கட்சி பொது செயலாளர் என்.ஆனந்த் அவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். தொண்டர் படையை வழிநடத்தவும் தொண்டர்களுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் வடிவமைக்கவும் ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் பிரிவு தொடங்கப்படுகிறது. […]
மோடிக்கு எதிராக போஸ்டர்கள்…. அடித்து விளையாடும் திமுக

தமிழ்நாட்டில் பீகாரிகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற பிரதமர் மோடியின் பேச்சை தமிழகம் முழுக்க கொண்டுபோகும் வகையில் திமுகவினர் தீவிரமாக செயல்பட்டுவருகிறார்கள். திமுகவினர் தொடர்ந்து மோடிக்கு எதிராக பரப்புரை செய்துவரும் நிலையில், நாம் தமிழர் சீமானும் கொதித்து எழுந்துள்ளார். அவர், ‘’தமிழ்நாட்டில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்கள் அடித்துத் துன்புறுத்தப்படுகின்றனர் என, பீகார் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி பச்சைப் பொய்யைப் பரப்பரை செய்வது தமிழர்கள் மீதான வன்மத்தின் வெளிப்பாடாகும். அற்ப அரசியல் இலாபத்திற்காக பிரதமர் மோடி தமிழர்கள் மீது […]
விஜய்யை குற்றம் சாட்டும் அஜித்..? பேட்டி சலசலப்பு

மீடியாக்களில் பேட்டி கொடுக்காத விரும்பாத அஜித் ஆங்கில ஊடகத்தில் கரூர் கொடூரத்தை பற்றி பேசி இருப்பது சர்ச்சையாகியுள்ளது. கரூர் மரணத்துக்கு விஜய்யும் ஒரு காரணம் என்பதையே அழுத்திச் சொல்லியிருக்கிறார், அதற்காகவே இந்த பேட்டி என்கிறார்கள். அந்த பேட்டியில் அஜித், ‘’கரூர் சம்பவத்திற்கு நாம் அனைவரும் தான் பொறுப்பு. ஒரு பிரபலம் வந்தால் அவரை காண மக்கள் கூட தான் செய்வார்கள் குடும்பத்தை மறந்து, நேரம், தூக்கம் இன்றி படப்பிடிப்புகளில் பங்கேற்கிறோம். அனைத்து உழைப்பும் எங்கள் மீது வைத்துள்ள […]
செங்கோட்டையனுக்கு ஆப்பு. முக்குலத்தோர் வாக்குக்கு எடப்பாடி புதிய வியூகம்

அதிமுகவின் மூத்த தலைவர் என்பதற்காக கட்சிப் பொறுப்புகளில் இருந்து மட்டும் நீக்கப்பட்டிருந்த செங்கோட்டையன், முழுமையாக வெளியே தள்ளப்பட்டிருக்கிறார். தேவர் ஜெயந்தி அன்று நடைபெற்ற திடீர் கூட்டணியின் எதிரொலியாக இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பாஜக கூட்டணியுடன் அதிமுக இந்த முறை ஆட்சிக்கு வந்துவிடும், சீனியர் என்பதால் எனக்குத்தான் முதல்வர் பதவி என்று சீன் போட்ட செங்கோட்டையனுக்கு ஆப்பு வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், முக்குலத்தோர் வாக்குகளைப் பெறவும் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டிவருகிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலம்தொட்டு தென் மாவட்டங்களில் […]
கனிமொழியை சிக்கவைக்கும் ஸ்டாலின்..? உதயநிதியைக் காப்பாற்றும் தேர்தல் நாடகம்.?

கனிமொழியை டெல்லி தாண்டி வேறு எங்கேயும் அரசியல் செய்யவிடாமல் கார்னர் செய்த ஸ்டாலின் இப்போது, வலிந்து ஆதரவு கொடுப்பது திமுகவினரின் புருவத்தை உயரச் செய்திருக்கிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போதுதான் அறிவாலாத்தில் கனிமொழிக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதோடு தென் மாவட்டங்களின் தேர்தல் பொறுப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இதைவிட ஆச்சர்யமாக எங்கெங்கு ஸ்டாலின் செல்வது என்றாலும் கனிமொழியையும் அழைத்துச்செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த மாற்றங்களைக் கண்டு திமுகவினரே ஆச்சர்யப்படுகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று சீனியர்களிடம் விசாரிக்கையில், ‘’வரும் […]

