News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அய்யா பாமக என்கிற ஆயா பாமக உதயம்.? அன்புமணி வெறித்தனம்

பாமகவில் தந்தை, மகன் அதிகார மோதலை தொடர்ந்து ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும், அன்புமணி தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது. இந்த இரு அணியினரும் போட்டி கூட்டங்களை நடத்தி தங்களது ஆதரவாளர்களை திரட்டி வருகின்றனர். மாம்பழம் சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என இரு அணியினரும் தனித்தனியாக தேர்தல் கமிஷனுக்கு மனு அளித்துள்ளனர்.பாஜக மற்றும் தேர்தல் கமிஷன் ஆதரவுடன் அன்புமணிக்கு மாம்பழம் சின்னம் கிடைப்பது உறுதி என்பது டாக்டர் ராமதாஸ்க்குத் தெரிந்துவிட்டது. அதனால், புதிய கட்சி […]

தொழிலாளர்களுக்கு மோடி நெருக்கடி.  12 மணி நேர வேலை சட்டம்

பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்திருக்கும் புதிய சட்டம் வாரத்திற்கு 48 மணி நேரம் தான் சொல்கிறது, ஆனால் ஒரு நாளில் 12 மணி வேலை செய்யலாம் என்று கூறியிருப்பதால் தொழிலாளர்களுக்கு பெரும் அச்சத்தைக் கொடுத்துள்ளது. இது குறித்து மோடி, ‘’இன்று, நமது அரசாங்கம் நான்கு தொழிலாளர் குறியீடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. இது சுதந்திரத்திற்குப் பிறகு மிகவும் விரிவான மற்றும் முற்போக்கான தொழிலாளர் சார்ந்த சீர்திருத்தங்களில் ஒன்றாகும். இது நமது தொழிலாளர்களுக்கு பெரிதும் அதிகாரம் அளிக்கிறது. இது இணக்கத்தை […]

விஜய்க்கு சோதனை மேல் சோதனை… அடுத்து எப்போ வரப்போகிறார்..?

விறுவிறுப்பாக சனிக்கிழமை தோறும் நடந்துவந்த விஜய் தேர்தல் பிரசாரம் கரூர் சம்பவத்தை அடுத்து இழுத்து மூடப்பட்டுவிட்டது. டிசம்பர் மாதமாவது தொடங்கி ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று ஆசைப்பட்ட விஜய்க்கு மீண்டும் காவல் துறை மூலம் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் தலைமையிலான வழக்கறிஞர் அணியை சேர்ந்தவர்கள், சேலம் மாநகர காவல் ஆணையாளரிடம் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரி மனு அளித்தனர். அந்த மனுவில், ‘வரும் டிசம்பர் 4ம் […]

ஆளுநருக்கு காலக்கெடு இல்லை..? மீண்டும் ஸ்டாலின் போர்க்கொடி

ஆளுநருக்கு மசோதாவை கிடப்பில் போட்டுவைப்பதற்கு சட்டரீதியாக எந்த உரிமையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும், காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது என்று கூறிவிட்டது. இதையடுத்து இது பாஜகவுக்குக் கிடைத்த வெற்றி என்று கொண்டாடி வருகிறார்கள். இந்த விஷயத்தை விடப்போவதில்லை என்று முதல்வர் ஸ்டாலின் மீண்டும் ஆவேசம் காட்டியிருக்கிறார். இதுகுறித்து ஸ்டாலின், ‘’சட்டமுன்வடிவுகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் வரை நாம் ஓயமாட்டோம்! குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் அளித்துள்ள […]

விவசாயிகளுக்கு ஆப்பு வைச்சிட்டாங்க… என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?

மெட்ரோ விவகாரத்தில் மத்திய அரசு மீது திமுகவினர் குற்றம் சாட்டிவரும் நிலையில், அடுத்த ஒரு பஞ்சாயத்து பெரிதாக மாறியிருக்கிறது. விவசாயிகளுக்கு பிரதமர் துரோகம் இழைத்துவிட்டார் என்று குற்றம் சாட்டியிருக்கிறார். இதுகுறித்து ஸ்டாலின், ‘’உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்! கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி மாண்புமிகு பிரதமர் வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை […]

மெட்ரோ போராட்டத்துக்கு திமுக ரெடி…. மோடி வாயைத் திறக்கவே இல்லையே

கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டமுன்மொழிவுகளை மத்திய அரசு திருப்பி அனுப்பிய விவகாரம் படு சர்ச்சையாக மாறியிருக்கிறது.தமிழகத்தைப் புறக்கணிப்பு செய்த பாஜகவுக்கு எதிராக திமுக போராட்டம் அறிவித்திருக்கும்நிலையில், திட்டமிட்டு பொய்யாக அறிக்கை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று கோவைக்கு வந்த பிரதமர் மோடி மெட்ரோ ரயில் கோவைக்குக்கொண்டுவருவதாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் வாயைத் திறக்கவேஇல்லை.  இதுகுறித்து பாஜகவினர், ‘’மதுரை, கோயம்புத்தூர் மேட்ரோவுக்கானவிரிவான திட்ட அறிக்கை எனப்படும் டிபிஆர் மத்திய அரசுக்கு […]

மெட்ரோ மிரட்டலுக்கு அமலாக்கத்துறை ரெய்டு… அச்சத்தில் திமுக புள்ளிகள்

கோவைக்கு வந்திருக்கும் பிரதமர் மோடிக்கு சிக்கல் உருவாக்கும் வகையில் மெட்ரோ திட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதாவது மதுரை, கோவை மெட்ரோ திட்டத்தை பாஜக திட்டமிட்டு தடுத்து நிறுத்தியதாக  அறிக்கை விட்டு அதிரடி கிளப்பியிருக்கிறார். இதுகுறித்து ஸ்டாலின், ‘’அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க-வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் […]

மோடி மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி..? கோ பேக் குழப்பத்தில் திமுக

பீகார் தேர்தலை வெற்றிகரமாக ஜெயித்திருக்கும் மோடி அடுத்தகட்டமாக தமிழகத்தைத் தேர்வு செய்திருக்கிறார். முதல் கட்டமாக விவசாயிகளை கவர் செய்வதற்கு இன்று சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மதியம் கோவைக்கு வரும் பிரதமர் மோடி கொடிசியா அரங்கில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அப்போது 9 கோடி விவசாயிகளுக்கு பயனளிக்கும், பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி திட்டத்தின் 21-வது தவணையாக ரூ.18,000 கோடியை விடுவிக்கிறார். இந்த மாநாட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, […]

வைகோவுக்கு எக்கச்சக்க சொத்து… மதுபான தொழிற்சாலை? மல்லை சத்யா பகீர்

துரை வைகோ கட்சிக்குள் வந்ததில் இருந்தே மல்லை சத்யாவுடன் பஞ்சாயத்து இருந்துவந்தது. இதனை சரிசெய்வதற்கு வைகோ எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டும் அது முடியவே இல்லை. எனவே, கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். விரைவில் தனிக்கட்சி தொடங்கும் முடிவில் இருக்கும் மல்லை சத்யா நேற்றைய தினம் முதன்முறையாக வைகோ பற்றிய ரகசியங்களை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் ரூ.250 கோடிக்கு வைகோ குடும்பத்துக்கு சொத்து இருக்கிறது. அவரது உறவினர்கள் நடத்தும் மதுபான ஆலைகளால், அவருக்கு கோடிக்கணக்கில் […]

விஜய்யுடன் ராகுல்காந்தி பேச்சுவார்த்தை.. திமுக கூட்டணிக்கு ஆபத்து..?

கரூர் நெரிசல் சம்பவம் தருணத்தில் நடிகர் விஜய்யுடன் ராகுல்காந்தி பேசியதாக சொல்லப்பட்டது. இதை ராகுல்காந்தி, விஜய் ஆகிய இருவரும் மறுக்கவும் இல்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை. இந்நிலையில் மீண்டும் ராகுல்காந்தி கூட்டணி குறித்து விஜய்யுடன் பேசி முடித்துவிட்டார் என்று சொல்லப்படுவது திமுக கூட்டணியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து பேசும் காங்கிரஸ் கட்சியினர், ‘’ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்காத திமுகவுடன் இனியும் இருந்தால் காங்கிரஸ் கட்சியை வளர்க்க முடியாது என்பதால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்கும் தவெகவுடன் கூட்டணி […]