News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தமிழர்கள் எல்லாம் திருடர்கள், கொடுமைக்காரர்கள்… மோடியின் தேர்தல் வன்மம்

ஒரிசா தேர்தல் சமயத்தில் தமிழ் நாடு மக்களை திருடர்கள் என்று குற்றம் சாட்டிய பிரதமர் நரேந்திர மோடி இப்போது பீகார் மாநிலத் தேர்தலில் கொடுமைக்காரர்கள் என்று பேசியிருக்கிறார்.   தமிழ்நாட்டுக்கு வந்தால் திருவள்ளுவரைப் பிடிக்கும், தமிழை, தமிழர்களை பிடிக்கும் என வேடம் போடும் மோடி பீகார் தேர்தல் பிரசாரத்தில், இங்கிருந்து தமிழகத்துக்கு வேலைக்குச் செல்லும் மக்களை தமிழர்கள் கொடுமைப்படுத்துவதாகக் கூறியிருக்கிறார். பீகார் மக்களுக்கு போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுத்திருந்தால் அவர்கள் எதற்கு மாநிலம் மாநிலமாக செல்ல வேண்டிய […]

செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கம்..? ஓபிஎஸ்ஸுடன் ஒரே காரில் பயணம்

அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று குரல் எழுப்பிய செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. அதன்பிறகு நான் கெடு விதிக்கவில்லை என்று கூறியதால் அவரது உறுப்பினர் அட்டை தப்பியது. இந்நிலையில் தேவர் ஜெயந்தியன்று ஓபிஎஸ்சுடன் பயணம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் செங்கோட்டையன். அதிமுக தலைமைக்கு கெடு விதித்த நிலையில் கட்சிக்கு எதிராக தனது நடவடிக்கைகளை கே .ஏ .செங்கோட்டையன் தொடங்கி விட்டாரா என்ற கேள்வி எழுகிறது. மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு ஒரே காரில் ஓ. பன்னீர்செல்வத்துடன் புறப்பட்டார் […]

வாக்காளர் தீவிர சிறப்பு திருத்தம்… ஸ்டாலினுக்குத் தலைவலி..?

வரும் 2026 தேர்தலில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் அடிப்படையில் தேர்தல் நடப்பது உறுதியாகியுள்ள நிலையில், ஆட்சியைப் பிடிக்க பாஜக பின்வாசலில் நுழைவதாக திமுகவினர் கொதிக்கிறார்கள். இதுகுறித்து பேசும் திமுகவினர், ‘’வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கோரியுள்ளோம். பீகாரை போன்று தமிழகத்தில் வாக்காளர் பெயர்களை நீக்கப்படும் என்ற அச்சம் உள்ளது. வாக்காளர் பட்டியல் […]

விஜய் கூட்டணிக்கு அமித்ஷா உத்தரவு..? டெல்லி வைரல்

கரூர் மக்களை சந்தித்த பிறகு விஜய் அரசியல் நகர்வுகள் மீண்டும் சூடு பிடித்துள்ளன. நிர்வாகக் குழு கூட்டத்தை அடுத்து விஜய்யின் ஹாட்டான அறிக்கை வெளியானது. இந்த நிலையில் விஜய்யுடன் கூட்டணி குறித்து அமித்ஷா பேசியிருக்கும் விவகாரம் வைரலாகிஆது.   நேற்று கட்சியின் தினசரிப் பணிகளை ஒருங்கிணைக்க 28 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழுவை தவெக தலைவர் விஜய் சந்தித்துப் பேசினார். பொதுச் செயலாளர் என். ஆனந்த் தலைமை வகித்தார். தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பிரிவு பொதுச் […]

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

கரூர் நெரிசல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துவிட்ட விஜய் ஒரு வழியாக கடும் நெருக்கடியில் இருந்து வெளியே வந்துவிட்டார். அதன் பிறகு அவரது நடவடிக்கைகள் எல்லாமே செம வேகமாக இருக்கிறது. கரூர் மக்கள் சந்திப்பு நிறைவடைந்ததும் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிரடியாக அறிக்கை வெளியிட்டார். அதில், “கடந்த சில நாட்களாக பெய்த மழையால், நெல்மணிகள் நனைந்து வீணாகியதற்கும், அதை விளைவித்த விவசாயிகளின் வேதனைகளுக்கும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?’’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். […]

ஜெயிலுக்குப் போகிறாரா அமைச்சர் நேரு..? வேலை மோசடி

முதல்வர் ஸ்டாலினால் கடந்த ஆகஸ்ட் மாதம் வழங்கப்பட்ட 2,538 பணி நியமன ஆணைகளில் சிலருக்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு வேலை கொடுத்தற்கான ஆதாரம் இருப்பதாக தமிழக காவல்துறைக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியுள்ளது. இதன் அடிப்படையில் அமைச்சர் நேருக்கு சிக்கல் ஆரம்பமாகியுள்ளது. தேர்தல் நேரத்தில் அமைச்சர் நேரு சிறைக்குப் போவார் என்று சொல்லப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் புதிதாக 2,538 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி பணி நியமன ஆணைகளை […]

பாஜக ஆட்டம் தமிழகத்தில் எடுபடுமா..? ஸ்டாலின் ஆல் பார்ட்டி மீட்டிங்

தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநில, யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை இன்றுமுதல் மேற்கொள்ளப்பட இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில் அதிமுக ஆதரவு தெரிவிப்பது நிலவரத்தை சூடாக்கியுள்ளது பீகாரில் எஸ்.ஐ.ஆர். எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்றபோது, லட்சக்கணக்கிலான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக கடும் எதிர்ப்பை எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. இந்நிலையில், தமிழ்நாடு உள்பட 12 மாநில, […]