News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

விவசாயிகளுக்கு ஆப்பு வைச்சிட்டாங்க… என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?

மெட்ரோ விவகாரத்தில் மத்திய அரசு மீது திமுகவினர் குற்றம் சாட்டிவரும் நிலையில், அடுத்த ஒரு பஞ்சாயத்து பெரிதாக மாறியிருக்கிறது. விவசாயிகளுக்கு பிரதமர் துரோகம் இழைத்துவிட்டார் என்று குற்றம் சாட்டியிருக்கிறார். இதுகுறித்து ஸ்டாலின், ‘’உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்! கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி மாண்புமிகு பிரதமர் வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை […]

மெட்ரோ போராட்டத்துக்கு திமுக ரெடி…. மோடி வாயைத் திறக்கவே இல்லையே

கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டமுன்மொழிவுகளை மத்திய அரசு திருப்பி அனுப்பிய விவகாரம் படு சர்ச்சையாக மாறியிருக்கிறது.தமிழகத்தைப் புறக்கணிப்பு செய்த பாஜகவுக்கு எதிராக திமுக போராட்டம் அறிவித்திருக்கும்நிலையில், திட்டமிட்டு பொய்யாக அறிக்கை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று கோவைக்கு வந்த பிரதமர் மோடி மெட்ரோ ரயில் கோவைக்குக்கொண்டுவருவதாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் வாயைத் திறக்கவேஇல்லை.  இதுகுறித்து பாஜகவினர், ‘’மதுரை, கோயம்புத்தூர் மேட்ரோவுக்கானவிரிவான திட்ட அறிக்கை எனப்படும் டிபிஆர் மத்திய அரசுக்கு […]

மெட்ரோ மிரட்டலுக்கு அமலாக்கத்துறை ரெய்டு… அச்சத்தில் திமுக புள்ளிகள்

கோவைக்கு வந்திருக்கும் பிரதமர் மோடிக்கு சிக்கல் உருவாக்கும் வகையில் மெட்ரோ திட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதாவது மதுரை, கோவை மெட்ரோ திட்டத்தை பாஜக திட்டமிட்டு தடுத்து நிறுத்தியதாக  அறிக்கை விட்டு அதிரடி கிளப்பியிருக்கிறார். இதுகுறித்து ஸ்டாலின், ‘’அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க-வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் […]

மோடி மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி..? கோ பேக் குழப்பத்தில் திமுக

பீகார் தேர்தலை வெற்றிகரமாக ஜெயித்திருக்கும் மோடி அடுத்தகட்டமாக தமிழகத்தைத் தேர்வு செய்திருக்கிறார். முதல் கட்டமாக விவசாயிகளை கவர் செய்வதற்கு இன்று சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மதியம் கோவைக்கு வரும் பிரதமர் மோடி கொடிசியா அரங்கில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அப்போது 9 கோடி விவசாயிகளுக்கு பயனளிக்கும், பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி திட்டத்தின் 21-வது தவணையாக ரூ.18,000 கோடியை விடுவிக்கிறார். இந்த மாநாட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, […]

அன்பில் மகேஸ்க்கு இம்புட்டு அறிவா..? முனைவர் பட்டம் சர்ச்சை

அமைச்சர் என்றால் எக்கச்சக்க வேலைப்பளு இருக்கும், அரசியல் தவிர்த்து வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாது என்று சொல்லப்படும் நிலையில், முனைவர் பட்டம் பெற்றுள்ள அமைச்சர் அன்பில் மகேஸ்க்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன. முனைவர் பட்டம் வாங்குவது இத்தனை எளிதா..? யார் உங்களுக்கு உதவியது என்று கேள்வி எழுப்பிவருகிறார்கள். கல்வித்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “Physical Activity for Skill Development Through Machine Learning” என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு, அதன் வாய்மொழித் தேர்வில் […]

தி.மு.க.வுக்கு தோல்வி உறுதி…? அதிகரிக்கும் ஆன்லன் போலி வாக்காளர்கள்

தேர்தல் கமிஷன் அவசரம் அவசரமாக. கொண்டுவந்திருக்கும் எஸ்.ஐ.ஆர். திருத்தத்தை உன்னிப்பாகக் கவனித்து படிவங்களைக் கொடுப்பதால் மட்டும் எல்லாம் சரியாக நடந்துவிடும் என்று திமுகவினர் நினைக்கிறார்கள். ஆனால், தேர்தல் கமிஷன் நினைத்தால் எதுவும் செய்யமுடியும் என்று எச்சரிக்கை செய்கிறார்கள். இதுகுறித்து பேசுபவர்கள், ‘’சிறப்பான BLA க்கள் மூலம் ஓட்டு திருட்டை தடுத்து விடலாம் என்ற நம்பிக்கையை அனைவருக்கும் ஏற்படுத்துவது SIR இன் முக்கியமான சூழ்ச்சி. ஆனால் BLA க்கள் போலி வாக்காளர்களை நீக்க எந்த வழிமுறையும் SIR இல் […]

ராகுல் காந்தியால் பீகார் தோல்வி..? ஸ்வீட் கொண்டாட்டத்தில் திமுக

பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகிவருகின்றன. பாஜகவும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் இருக்கின்றன. அதேநேரம், காங்கிரஸ் கட்சி மிகவும் மோசமாக பின் தங்கியிருப்பதுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக இப்போது குற்றம் சாட்டப்படுகிறது. பீகாரில் மாநில கட்சியாக இருக்கும் லோக் ஜன் சக்தி கட்சியை விட மோசமான இடத்தில் உள்ளது காங்கிரஸ் கட்சி லோக்ஜன் சக்தி கட்சி 10 இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியால் ஐந்து இடங்களில் கூட முன்னிலை […]

மேகதாதில் ஸ்டாலினை காட்டிக் கொடுத்த சிவக்குமார்… கொந்தளிக்கும் விவசாயிகள்

மேகதாது அணை கட்டுவதற்கு ஆட்சேபனை இல்லை என்று தமிழக அரசு தெரிவித்ததாக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பேசியிருக்கும் விவகாரம் தமிழக விவசாயிகளை கொந்தளிக்க வைத்திருக்கிறது. நீதிமன்றத்தில் திட்ட அறிக்கை தயாரிப்புக்கு எதிராக சரியான வாதங்களை முன்வைப்பதற்கு ஸ்டாலின் அரசு முன்வரவில்லை, அதனாலே இப்படியொரு தீர்ப்பு வந்திருக்கிறது. அதாவது, மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அனுமதி வழங்கிவிட்டது. அதேநேரம் தமிழ்நாடு அரசின் கருத்தைக் கேட்காமல், […]

காங்கிரஸ் கட்சியுடன் தவெக பேச்சுவார்த்தை..? அலட்சியம் காட்டும் திமுக

தேர்தல் நேரத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு திடீர் ரோஷம் வரும். அதிக சீட், ஆட்சியில் பங்கு என்று கொதிப்பார்கள். கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும்போது, டெல்லியில் இருந்து உத்தரவு வந்ததும் கப்சிப் என்று மாறிவிடுவார்கள். ஆனால், இந்த முறை அப்படி நடக்காது, விஜய்யுடன் கூட்டணி உறுதி என்று காங்கிரஸ் கட்சியினர் தீவிரம் காட்டிவருகிறார்கள். இதுகுறித்து பேசும் காங்கிரஸ் தலைவர்கள், ‘’தவெக – காங்கிரஸ் கூட்டணியை இயற்கை கூட்டணியாக பார்க்கிறார்கள். ராகுல் காந்தியும் விஜய் அவர்களும். தமிழ்நாட்டில் மட்டுமில்ல […]

ராகுல் காந்தியின் வாக்குத்திருட்டு ஆதாரங்கள்… ஜனநாயகத்தை புதைச்சுட்டாங்க

வாக்குத் திருடர்கள் என்று மோடி, அமித்ஷாவையும் தேர்தல் கமிஷனையும் ராகுல் காந்தி தொடர்ந்து வறுத்தெடுத்து வருகிறார். மேடைகளில் ஓட்டுத் திருட்டு பற்றி கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கிறார். ஆனால், இவை எல்லாவற்றையும் புறம்தள்ளிவிடுகிறது தேர்தல் கமிஷன். நேற்று ஹரியானா தேர்தல் குறித்து பேசினார் ராகுல். ‘’வாக்கு திருட்டு மாநில அளவிலும், தேசிய அளவிலும் நடைபெற்று வருகிறது. பல மாநிலங்களில் இதை நாங்கள் அனுபவித்திருக்கிறோம், எனவே, ஹரியானாவில் ஆழமாக ஆராய முடிவு செய்தோம். அனைத்து கருத்துக் கணிப்புகளும் காங்கிரஸ் வெற்றியை […]