உச்சத்தை தொட்ட தக்காளியின் விலை: மத்திய அரசு புதிய தகவல்!

தங்கத்தை போல் தக்காளியின் விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தக்காளி, வெங்காயம் இல்லாமல் சமைக்கவே முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. மழை காலங்களில் தக்காளி விலை தாறுமாறாக உயர்வது வாடிக்கையாகிவிட்டது. விளைச்சல் பாதிக்கப்படுவதால் இந்த விலை வீழ்ச்சி என்றாலும் இல்லத்தரசிகள் மற்றும் உணவகம் நடத்தி வருபவர்களின் நிலை திண்டாட்டமாகிவிடுகிறது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் அந்தந்த மாநிலங்களில் நியாயவிலைக் கடைகளில் தக்காளியை பொதுமக்கள் வரிசையில் நின்று வாங்கி வருகின்றனர். இந்நிலையில் தக்காளி விலை குறித்து […]
தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட முதல்வர்!

தமிழகத்தில் முன்கூட்டியே வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், தேங்கிய மழைநீரை துரிதமாக தூய்மைப் பணியாளர்கள் அகற்றினார்கள். அதன்படி சென்னையில் நேற்று முன்தினம் யானைக்கவுனி, புளியந்தோப்பு உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் அகற்றும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். மேலும் வெற்றிகரமாக ஆங்காங்கே தேங்கியிருந்த மழைநீர் அகற்றப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்நிலையில் சென்னை கொளத்தூர் […]
சத்தமே இல்லாமல் கடந்து சென்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

எந்த பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை கடந்து சென்றுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் முன்கூட்டியே வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமுதல் அதிகமழை கொட்டித் தீர்த்தது. நேற்று (அக்.16) கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ரெட் […]
அடுத்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா இவர் தானுங்க….

தற்போது தலைமை நீதிபதியாக இருக்கும் சந்திரசூட் வரும் நவம்பர் 10-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், நடைமுறையின்படி, அவருக்குப் பின் அவருடைய பதவிக்கு வருபவர் பெயரைக் குறிப்பிடுமாறு அரசாங்கம் அவருக்கு கடந்த வாரம் கடிதம் எழுதியிருந்தது. அதன் படி உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான சஞ்சீவ் கண்ணாவை தனக்குப் பின் தலைமை நீதிபதியாக நியமிக்குமாறு இந்திய தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் மத்திய சட்ட அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். யார் இந்த சஞ்சீவ் கண்ணா? நீதிபதி […]
ஜக்கியின் ஈஷா மையத்தின் மீது இத்தனை வழக்குகளா..? புடுச்சி உள்ளே போடுங்க

கோவை ஈஷா மையத்துக்கு ஒரு பிரச்னை என்றால் உச்ச நீதிமன்றமே ஓடோடி வந்து அவசர வழக்காக விசாரிக்கும். அந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றுள்ள ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று தமிழ்நாடு காவல்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இத்தனை வழக்குகள் இருந்தும் உத்தமர் போன்று ஈஷா காட்சியளிப்பது தான் மேலிடத்து ஆசிர்வாதம். ஈஷா மைத்திலிருந்து காணாமல் போனவர்கள் தொடர்பாக 6 வழக்குகள் பதியப்பட்டுள்ளது, அதில் 5 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. […]
சாம்சங் போராட்டம் தோல்விகரமான வெற்றி..? பருத்தி மூட்டை குடோனிலே இருந்திருக்கலாம்

கடந்த 38 நாட்களாக நடந்துவந்த சாம்சங் தொழிலாளர் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, இன்று முதல் வேலைக்குத் திரும்புகிறார்கள். ஒன்பது முறைகளுக்கு மேல் நீடித்த பேச்சுவார்த்தைகள், நள்ளிரவுக் கைதுகள், தொடர் வழக்குகள், கூட்டணிக் கட்சிகளின் அழுத்தம், அமைச்சர்களின் தலையீடு ஆகியவற்றைக் கடந்து வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்திருக்கிறது. சங்கத்திற்கு இன்னமும் சாம்சங் அனுமதி கொடுக்கப்படாத நிலையில் போராட்டம் முடிவுக்கு வந்திருப்பது உண்மையான வெற்றியா என்ற கேள்வி எழுந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் சுமார் […]
4 ஆயிரம் கோடிக்கு கணக்கு காட்டாமல் உதயநிதி எஸ்கேப்..? வெள்ளை அறிக்கை வில்லங்கம்

ஒரே ஒரு நாள் 6 செ.மீ. மழைக்கே தண்ணீர் வெள்ளமாக நிற்கிறது என்பதால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெள்ளை அறிக்கை கேட்டார். அதற்கு துணை முதல்வர் உதயநிதி, ‘’மழை நீர் எங்கேயும் தேங்கவில்லை என்பதே வெள்ளை அறிக்கை’ என்று கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் கணக்கு காட்டாமல் உதயநிதி எஸ்கேப் ஆகிறார் என்ற வில்லங்கம் எழுந்துள்ளது. இது குறித்துப் பேசும் அ.தி.மு.க.வினர், ‘’மழை நீர் தேங்காத வகையில் 4000 கோடிக்கு திட்டங்களை வகுத்த அரசு, அதை முறையாக […]
விஜய் மாநாட்டில் தந்தை சந்திரசேகருக்கு மறுப்பு. சங்கீதா இல்லைன்னா கீர்த்தி சுரேஷ் ஆஜர்

நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு தந்தை சந்திரசேகருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதுடன், எந்தக் காரணம் காட்டியும் அங்கே வந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கை கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்பதற்காக மாநாடு நடைபெற இருக்கும் விக்கிரவாண்டியில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தீவிரம் காட்டி வருகிறார். மழை வந்தாலும் பாதிக்கப்படாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கவேண்டிய […]
சென்னையில் இனிமே யாரும் வீடு கட்டக் கூடாதா? மாஜி அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை

சென்னையில் மழை நின்று போனாலும் வெள்ளம் வடிவதாக இல்லை. அரசு இயந்திரம் இரவு பகலாக வேலை செய்தாலும் உடனடி தீர்வு எட்டப்படவில்லை. இந்த நிலையில் சென்னையில் கட்டுமானத்தை உடனடியாக தடுத்து நிறுத்துவதே தீர்வு என்று சுற்றுச்சூழல் எச்சரிக்கை செய்கிறார் சமீபத்தில் பதவி பறிக்கப்பட்ட மாஜி அமைச்சர் மனோ தங்கராஜ். அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட பிறகும் தினமும் அறிக்கை போர் நடத்திவருகிறார். ஸ்டாலினுடன் நேரடியாக மோதவில்லை என்றாலும் சிக்கலான விஷயங்களை நுட்பமாக சுட்டிக் காட்டுகிறார். இந்த நிலையில் இன்றைய […]
ஏரிக்குள் வீடு… பாலத்தில் கார்கள். கடையெல்லாம் காலி… சென்னைக்கு என்ன தான் தீர்வு..?

சென்னையின் இயற்கை வடிகால்களான கூவம், கொசஸ்தலை, அடையாறு ஆகிய மூன்று நதிகளையும் பக்கிங்காம் கால்வாயையும் விழுங்கி வீடுகள், பேருந்துநிலையம் என கட்டியிருக்கிறார்கள் மக்கள். இதனால் ஒவ்வொரு மழை நேரத்திலும் தண்ணீர் தேங்கி நிற்பது தடுக்க முடியாமல் போகிறது. இதையொட்டி பாலங்களில் எல்லாம் கார்களை பாதுகாப்பு கருதி மக்கள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு ஒட்டுமொத்த சென்னையும் ஸ்தம்பிக்கும் சூழல் நிலவுகிறது. இது குறித்துப் பேசும் பொதுநலச் சங்கத்தினர், ‘’சின்ன மழை பெய்தாலே தங்கள் காரைக் கொண்டுவந்து பாலத்தில் […]

