சகாயத்தை முதல்வர் ஆக்குவாரா விஜய்.? ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்..?

விஜய் மாநாட்டு மேடையில் யாரெல்லாம் இருக்கப்போகிறார்கள் என்று பலரும் கணித்துவருகிறார்கள். அந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் சகாயம் ஐ.ஏ.எஸ். தொடர்ந்து விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்திவரும் சகாயத்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. இது குறித்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ‘’விஜய் அரசியலை புதுமையாக செய்ய நினைக்கிறார் என்பதற்கு அவர் மாநாடு குறித்து வெளியாகியிருக்கும் அறிக்கையே சாட்சி. எப்படியாவது குடும்பத்தோடு மாநாட்டுக்கு வாங்க என்று அத்தனை கட்சிகளும் அழைக்கும் […]
கவர்னர் ஆர்.என்.ரவிக்குப் பதிலாக வி.கே.சிங்..? தி.மு.க.வுக்குப் பணியுமா பா.ஜ.க..?

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் ஏற்கெனவே முடிவடைந்துவிட்டது. ஆகவே, அவருக்கு ஓய்வு அளிக்கும் எண்ணத்தில் பா.ஜ.க. இருந்துவருகிறது. இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஒட்டுமொத்த கட்சிகளின் கோபத்துக்கு ஆர்.என்.ரவி ஆளாகிவிட்டார். ஆகவே, அவருக்குப் பதிலாக வி.கே.சிங் நியமனம் செய்யப்படுவதாக செய்திகள் வருகின்றன. இது குறித்து பா.ஜ.க.வினரிடம் கேட்டபோது, ‘’ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை முடிந்த தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைவில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படுவதற்கு வாய்ப்பு உண்டு. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நாகாலாந்து ஆளுநராக முதலில் […]
மோடியிடம் 100 கோடி ரூபாய்க்கு விலை போனாரா திருமாவளவன்..? மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு

எந்த குழப்பமும் இல்லாத தெளிவான அரசியல்வாதியாக இருந்த திருமாவளவன் இப்போது ஒரே தேர்தலில் மோடிக்கும் ராகுல் காந்திக்கும் ஆதரவு தெரிவிக்கும் தில்லுமுல்லு அரசியல் செய்யத் தொடங்கியிருக்கிறார். 100 கோடி ரூபாய் பேரத்திற்கு திருமாவளவன் விலை போய்விட்டார் என்று அவர்கள் கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. மகாராஷ்டிராவில் கடந்த தேர்தலில் உச்சகட்ட ஜனநாயகப் படுகொலை நடந்தது. மீண்டும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத திருப்பமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பத்து தொகுதிகளிலும் ராஷ்ட்ரிய ஜனதா […]
கவர்னருக்கு சீமான் எதற்கு முட்டுக் கொடுக்கிறார்..? அதிர்ச்சியில் நாம் தமிழர்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விவகாரத்தில் கவர்னருக்கு எதிராக ஆளும் தி.மு.க., எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான பா.ம.க. உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் கவர்னரை எதிர்த்து ஒன்றுகூடி போராடும் நேரத்தில் நாம் தமிழர் சீமான் மட்டும் கவர்னருக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பது அவர்களுடைய கட்சிக்குள்ளே முணுமுணுப்பை உருவாக்கியிருக்கிறது. கடந்த வாரமே நந்தன் திரைப்பட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது சீமானுக்காக அந்த பாடலில், “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரிகள் விடப்பட்டன. ஆனால், […]
’’ஒருத்தர் தப்பா பாடலாம், நாலு பேருமா அப்படி பாடுவாங்க…’’ ஸ்டேஷனுக்குக் கூப்பிட்டு மாவுக்கட்டு போடுங்க

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் திராவிடம் என்பது கவர்னரின் உத்தரவுப்படி திட்டமிட்டுத் திருத்தப்பட்டது என்பது தான் தி.மு.க.வின் குற்றச்சாட்டு. ஆனால், இதன கவனக்குறைவு என்கிறது டிடி தமிழ். இதையடுத்து, கவனக்குறைவு என்றால் யாராவது ஒருவர்தானே திராவிடம் என்பதை தவறவிட முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பேசும் தி.மு.க.வினர், ‘’கவர்னர் திட்டமிட்டு திராவிடத்தை தவிர்க்கச் சொல்லியிருக்கிறார் என்பது அந்த பாடல் பாடப்படும் நேரத்தில் அவரது உடல்மொழி மூலம் அறிய முடிகிறது. டிடி தமிழ் சொல்வது போன்று கவனக்குறைவு […]
தமிழகத்தில் 304 ஏழை ஜோடிகளுக்கு திருமணம்! எங்கு எப்போது தெரியுமா?

வருகிற 21ம் தேதி (திங்கட்கிழமை) 304 ஏழை ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடைபெற உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் 2024& 2025ம் நிதி ஆண்டிற்கான சட்டமன்ற மானிய கோரிக்கையின் போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியானது. அதாவது பொருளாதாரத்தில் பின் தங்கிய 700 ஜோடிகளுக்கு கோவில்கள் சார்பாக 4 கிராம் தங்கத்தாலி உட்பட 60 ஆயிரம் ரூபாய் சீர்வரிசை வழங்கி திருமணம் செய்துவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி வருகிற திங்கட்கிழமை […]
அடுத்தடுத்து உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள்!

தமிழகத்தில் முன்கூட்டியே வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த 14ம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 16ம் தேதி கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. ஒரு நாள் மழைக்கே சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கிய நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் […]
சீமான் இப்படி பேசலாமா..? வில்லங்கமாகும் ராவண வதம்

கடந்த வாரம் நடைபெற்ற தசரா இறுதி நாளில் டெல்லியில் ராவண வதம் நிகழ்ச்சி நடந்தது. அதில் குடியர்சுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் ராவண உருவத்தை அம்பு எய்தி தீ வைத்துக் கொளுத்தினார்கள். அதனை கொஞ்சமும் கண்டுகொள்ளாத நாம் தமிழர் சீமான் ஆஸ்திரேலிய ராவண வதத்திற்கு ரொம்பவே பொங்கியிருக்கிறார். இன்று சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன் நகரங்களில் வருகின்ற அக்டோபர் 27 அன்று இராவண வதம் என்ற […]
பா.ஜ.க.வுக்குத் தாவுகிறார் பொன்முடி? பதவி பறிப்பு அதிருப்தி

துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்ற நேரத்தில் பொன்முடியிடம் இருந்த பவர்ஃபுல் பதவியான உயர் கல்வித் துறை புடுங்கப்பட்டு, டம்மியாக வனத்துறை வழங்கப்பட்டது. துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு ஆகிய சீனியர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்காமல் தன்னுடைய பதவியை மட்டும் பறித்த ஸ்டாலின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் பொன்முடி. இதையடுத்தே விழுப்புரத்தில் நடைபெற்ற பாக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பொன்முடி, ‘’தி.மு.க.வில் யார் வேட்பாளர் என்பதை தலைவர் முடிவு செய்வார், உதயா முடிவு செய்வார். […]
இது தான் பா.ஜ.க. பிளான்..? பன்னீர், தினகரனை ஓட விடும் எடப்பாடி பழனிசாமி..!

அண்ணா தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்துவதற்கு எந்த தியாகத்துக்கும் தயார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதை அடுத்து, ‘தங்களுக்கான வாசல் திறந்துவிட்டது’ என்று பன்னீர் டீம் குதூகலம் அடைந்தனர். ஆனால், பன்னீர், தினகரன் ஒருபோதும் சேர்க்கப்பட மாட்டார்கள் என்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் தெளிவு படுத்திவிட்டார். இதையடுத்து பா.ஜ.க. டீம் பதட்டத்துக்குப் போயிருக்கிறது. சமீபத்தில் பா.ஜ.க.வில் இருந்து ஒரு டீம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது. அவர்களுடைய திட்டப்படி சசிகலாவுக்கு எந்த அதிகாரமும் இல்லாத பொதுச் செயலாளர் பதவியும் பன்னீருக்கு […]

