News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தஞ்சாவூர் ஆசிரியை கொலை: குடும்பத்திற்கு சென்று சேர்ந்த நிவாரணம்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மல்லிப்பட்டினத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதில் தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியையாக 26 வயதான ரமணி என்பவர் பணியாற்றி வந்தார். நேற்று (நவம்பர் 20) ரமணி பள்ளி வளாகத்தில் இருந்த போது மதன்குமார் என்ற இளைஞரால் கத்தியால் குத்தப்பட்டார். அவரை […]

காதலிக்க மறுத்த இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்!

காதலிக்க மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் முரட்டுத்தனமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.   மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே ஒரு தனியார் ஜெராக்ஸ் கடை இயங்கி வருகிறது. இக்கடையில் அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். அந்த பெண்ணுக்கு சித்திக்ராஜா என்ற வாலிபர் காதல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த இளம்பெண் காதலிக்க மறுத்ததுடன் சித்திக்ராஜாவை எச்சரித்ததாக தெரியவந்துள்ளது.   இதனால் இளம்பெண் […]

எடப்பாடி பழனிசாமி குழுவில் சீனியர்கள் டம்மி..? களத்தில் சீக்ரெட் டீம்

வரும் 2026 தேர்தலை எதிர்கொள்வதற்காக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கள ஆய்வுக் குழு அமைத்தார். முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, வரகூர் அருணாசலம் உள்ளிட்டோர் அடங்கிய ஆய்வுக்குழு தொடர்து சொதப்பி வருவதாக நிர்வாகிகள் கவலைப்படுகிறார்கள். அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர், ‘’தி.மு.க.வில் ஸ்டாலின் தலைமையில் நடந்த உயர்நிலை செயல்திட்டக் குழுவினர் இப்போதே தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார்கள். துண்டுப் பிரசுரங்கள் – திண்ணைப் பிரச்சாரங்கள் என […]

கஸ்தூரியைப் போல தோழர் ஓவியாவைக் கைது செய்யணும்..! கொதிக்கும் பா.ஜ.க.

தெலுங்கு மக்களை அவதூறாகப் பேசியதற்கு நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க.வினர் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர். நீதிபதியின் மனைவி இறங்கிவந்து ஜாமீனுக்கு ஆதரவு கொடுத்தார். இந்த நிலையில், கஸ்தூரி போன்று தேவேந்திர குல வேளாளர் மக்களை தோழர் ஓவியா அவமதிப்பு செய்திருக்கிறார். அவரை உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பா.ஜ.க.வினர் கொந்தளிக்கிறார்கள். புராணங்களிலும் இதிகாசங்களிலும் தேவேந்திர குல வேளாளர்கள் என்றால் முறை தவறி பிராமணர்களுக்குப் பிறந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று தோழர் […]

மோடியின் நண்பர் அதானி கொடுத்த லஞ்சம் 21,10,19,25,675 ரூபாய். போட்டு உடைக்கும் அமெரிக்கா

நண்பர் அதானிக்காகவே பிரதமர் நரேந்திரமோடி ஆட்சி நடத்திவருகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இந்திய அரசின் அத்தனை சொத்துக்களும் அதானிக்கு எழுதி வைக்கப்படுகின்றன, அனைத்து நாட்டிற்கும் பயணம் செய்து அதானிக்கு ஆதாயம் திரட்டுகிறார் என்ற குற்றச்சாட்டை மெய்ப்பிப்பது போன்று அமெரிக்காவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மோடியின் நண்பர் என்று கருதப்படும் டொனால்ட் டிரம்ப் நாட்டில் மோட்டியின் இன்னொரு நண்பர் அதானிக்குச் சிக்கல் எழுந்துள்ளது. அதன்படி, அமெரிக்காவில் மோசடி செய்ததாக இந்திய கோடீஸ்வரர் […]

அம்பேத்கருக்குத் துரோகம் செய்யலாமா திருமாவளவன்..? விஜய் மீட்டிங் கேன்சல்

வரும் டிசம்பர் 6ம் தேதி விகடன் நிறுவனம் நடத்த இருக்கும், “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” நூல் வெளியீட்டு விழாவில் தொல் திருமாவளவன் கலந்து கொள்ளப்போவதில்லை என்று முடிவு எடுத்திருப்பது விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர்களை அதிர வைத்துள்ளது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நிர்வாகிகள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இது குறித்துப் பேசும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர், ‘’நீங்கள் விஜய் பங்கேற்கும் விழாவில் நீங்கள் கலந்துகொண்டால் கூட்டணியில் குழப்பம் ஏற்படும்’ என்று முதல்வர் […]

அரசுப்பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டதின் பின்னணி என்ன?

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் ரமணி. இவருக்கு 26 வயது . இந்த நிலையில் ரமணி வழக்கம்போல் இன்று (நவம்பர் 20) வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்த போது திடீரென வகுப்பறைகுள் நுழைத்த நபர், ரமணியை கத்தியால் சரமாரியாக குத்தினார் . இதில் நிலைகுலைந்து போன ஆசிரியை ரமணி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை சக ஆசிரியர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இருப்பினும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே […]

கஸ்தூரிக்கு ஆஜராகும் நீதிபதியின் மனைவி. அப்போ சட்டம் எல்லோருக்கும் சமம் இல்லையா?

கஸ்தூரி சிறையில் மினரல் வாட்டர் குடிக்க முடியாமல், கொசுக்கடியால் அவதிப்படுகிறார் என்றதும் அவருக்கு ஆதரவாக நீதிபதியின் மனைவியே பரிந்துரைக் கடிதம் எழுதும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதனின் மனைவி, ‘’நடிகை கஸ்தூரியின் ஜாமீன் வழக்கை கருணையோடு அணுக வேண்டும். கஸ்தூரிக்கு ஆட்டீசத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை உள்ளது. சிறப்புக் குழந்தையை வளர்க்க கஸ்தூரி தனி ஆளாகப் போராடி வருகிறார்’’ என்று குரல் கொடுத்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ‘’ஆட்டிசம் […]

மாணவர்களுக்கு அமரன் படம் காட்டுவது தான் தேசப்பற்றா..? எல்லை மீறும் பா.ஜ.க.

தாய்நாட்டுக்கு உயிர் கொடுத்த ஒரு ராணுவ வீரனின் கதை என்று பா.ஜ.க.வினர், ‘அமரன்’ திரைப்படத்துக்கு தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். அதேநேரம், இஸ்லாமியர்கள் மீது அமரன் படம் வெறுப்பைக் கக்குகிறது என்று பல்வேறு அமைப்புகள் இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். இந்த நிலையில் பள்ளி மாணவர்களை தியேட்டருக்கு அழைத்துச்சென்று அமரன் படம் பார்க்க வைத்திருப்பது கடும் சர்ச்சையாகி வருகிறது. இந்த படம் சிறுவர்கள் பார்ப்பதற்குத் தகுதியானது என்று சென்சார் கூறவில்லை. ஏனென்றால் படத்தில் நிறைய வன்முறை உள்ளது. […]

இமான், ஜி.வி பிரகாஷை தொடர்ந்து ரஹ்மானும் விவாகரத்து. காரணம் இசை தானா?.

காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி பிரிவு தமிழகத்தில் பெரும் அதிர்வை உண்டாக்கியது. அவரது மாமாவும் பிரபல இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து அதை விட பெரிய பூகம்பத்தைக் கிளப்பியிருக்கிறது. இசையமைப்பாளர் இமானும் விவாகரத்து செய்திருப்பதால், இசையமைப்பாளர்களுக்கு என்ன பிரச்னை என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்போது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 57 வயது. சிறுவயது முதலே இசைக் கருவிகள் வாசிப்பதில் ஆர்வம் கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் தந்தை சேகரிடமிருந்து இசை நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தவர். தந்தை மறைவுக்குப் பிறகு எம்.எஸ். விஸ்வநாதன், […]