News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பள்ளியில் பூரி சாப்பிட்ட மாணவன் உயிரிழந்த சோகம்! என்ன நடந்தது தெரியுமா?

தெலுங்கானா மாநிலத்தில் பள்ளியில் மதிய உணவு நேரத்தில் பூரி சாப்பிட்ட 6ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா புறநகர பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளியில் வீரேன் ஜெயின் என்ற 6ம் வகுப்பு மாணவன் பயின்று வந்தான். வழக்கம் போல் மதிய உணவு நேரத்தில் வீரேன் ஜெயின் தான் வீட்டில் இருந்து கொண்டு வந்த பூரியை சாப்பிட ஆரம்பித்தான். அதாவது தான் கொண்டு வந்த 2 பூரிகளையும் ஒன்றாக சுருட்டி சாப்பிட்டுள்ளான். […]

மகளிர் உரிமைத் தொகை 2000 ரூபாயாக உயர்கிறதா..? தூண்டிவிடும் சீமான்

தமிழகத்தில் மாதம் தோறும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2026 தேர்தலை முன்னிட்டு இந்த தொகையை 2000 ரூபாயாக ஸ்டாலின் அறிவிப்பார் என்று சீமான் அறிவித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. பெண்களுக்கு உரிமைத் தொகை கொடுப்பது தவறான வழி காட்டுதல் என்று கூறிவந்த பா.ஜ.க.வும் இப்போது திராவிட மாடலுக்கு வந்துகவிட்டது. சமீபத்தில் வெற்றி பெற்ற மகாராஷ்டிரா மாநில வெற்றிக்குக் காரணம் இந்த உரிமைத் தொகை என்றே சொல்ல வேண்டும். இந்த தேர்தலுக்காக […]

திருநங்கையருக்கு இப்படியொரு திட்டமா? சபாஷ், தமிழகம் முழுக்க பரவட்டும்

உணவு, உடைக்கு அடுத்து அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இருப்பது வீடு. வாடகைக்கு வீடு தேடும் குடும்பஸ்தர்களுக்கே என்ன ஜாதி, என்ன மதம், எத்தனை பேர் என்றெல்லாம் விசாரணைக்குப் பிறகும் வீடு கிடைப்பது குதிரைக் கொம்பு. இந்நிலையில், வேலை தேடி வரும் பெண்களுக்கு ஹாஸ்டல் கட்டிக் கொடுத்த ஸ்டாலின் அரசு, இப்போது திருநங்கையருக்கு வீடு கட்டிக் கொடுத்திருப்பது பெரும் பாராட்டு பெற்றுள்ளது. இது குறித்து பேசும் தி.மு.க.வினர், ‘’பெருநகரங்களில் வீடு தேடி அலையும் போது சந்தித்த சிக்கல்களை விட, […]

மோடியைக் கேட்க தைரியம் இல்லையா? ராமதாஸை விரட்டும் உடன்பிறப்புகள்

ராமதாஸ்க்கு வேற வேலையில்லை என்று ஸ்டாலின் கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென 24 மணி நேரக் கெடு விதித்து பா.ம.க.வினரும் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தனர். இதற்கு ஸ்டாலின் எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை. அதேநேரம் அமைச்சர் சேகர் பாபு, ‘மன்னிப்பு கேட்பதற்கு வாய்ப்பே இல்லை’ என்று ஒரே போடாக போட்டுவிட்டார். இதையடுத்து வட தமிழகத்தில் பெரும் அதகளம் நடக்கப்போகிறது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதுவும் நடக்கவில்லை. அந்த விவகாரத்தை திசை திருப்புவதற்காக டாக்டர் ராமதாஸ் […]

நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நிவாரண முகாம்களில் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.   வங்கக்கடலில் தற்போது உருவாகியுள்ள தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை (நவம்பர் 27) வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து சூறாவளிப் புயலாக மாற உள்ளது. சவுதி அரேபியர்கள் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்திற்கு பெங்கல் என்று பெயர் வைத்துள்ளனர்.   இந்த புயலானது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும்போது, அது காற்றழுத்த […]

ஆவின் பாலகம் குறித்து தமிழக அரசு திடீர் அறிவிப்பு!

ஆவின்பாலகம் 24 மணிநேரமும் தொடர்ந்து இயங்கும் என்று தமிழக அரசு திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த மண்டலம் இன்று (நவம்பர் 26) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில்  நாளை உருவாக உள்ள புயலுக்கு சவுதி அரேபியா ‘பெங்கல்’ என்ற பெயரை பரிந்துரை செய்துள்ளது.   பெங்கல் புயலானது தமிழகத்தை […]

விவசாயிகளை ஏமாற்றினாரா எடப்பாடி பழனிசாமி..? வில்லங்கமாகும் வேளாண் மண்டலம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி அனுப்பவே இல்லை என்று மத்திய அரசு கூறியிருப்பதையடுத்து தமிழகத்தில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. மக்களவையில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி கே.எம். சுதா கேட்ட கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் கொடுத்திருக்கும் பதிலில், ‘’டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை: மத்திய அரசு! 2020-ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்த நிலையில், […]

9 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்! கனமழை எச்சரிக்கை எதிரொலி!

சென்னை, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 9  துறைமுகங்களில் கனமழை பெய்யக்கூடும் என்ற காரணத்திற்காக 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.   வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு  மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் 800 கி.மீட்டர் தூரத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. மேலும் சென்னையின் தெற்கு தென்கிழக்கு பகுதியில் 1,050 கி.மீட்டர் தூரத்தில் அந்த காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது. […]

பாராளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு! அதானி, மணிப்பூர் விவகார எதிரொலி!

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் அமளியால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (நவம்பர் 25) காலை 11 மணியளவில் தொடங்கியது. கூட்டத்தின் ஆரம்பத்தில் மறைந்த எம்.பி.க்களுக்கு அவை உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.     பின்னர் அவை 12 மணிக்கு கூடிய போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி பெரும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவையில் […]

ஐ’ம் ஸாரி ஐயப்பா இசைவாணி தலைமறைவு..? வைரலாகும் பாடல்

ஆர்ம்ஸ்ட்ராங் விவகாரத்தில் தி.மு.க.வுக்கு சிக்கல் உண்டாக்கிய பா.ரஞ்சித் உருவாக்கியிருக்கும் ஐ’ம் ஸாரி ஐயப்பா பாடலையொட்டி சமுகவலைதளத்தில் நடக்கும் மோதல் பெரும் வைரலாகியுள்ளது. பா.ஜ.க. ஆதரவாளர்கள், ‘’இந்த பாடலுக்கு பா ரஞ்சித் , இசைவாணி இருவரையும் திமுக அரசு கைது செய்யாதது ஏன்? ஐய்யப பக்தர்களை திட்டமிட்டு ஒவ்வொரு வருடமும் இதே மாதங்களில் அவமதிப்பதோடு – மத மோதலைத் தூண்டும் இவர்கள் இருவரும் கைது செய்யாது ஏன்? திமுக ஆசியோடு தான் இது நடக்கிறது’’ என்று கொந்தளிக்கிறார்கள். ஐயப்ப […]