கவர்னர் எதிர்ப்பு இல்லீங்க… எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தி.மு.க. போராட்டம்

தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்தும் ஒன்றிய அரசின் மீதுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை திசைமாற்றவும் வித்தைகளைச் செய்யும் அதிமுக – பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்தும் திமுக சார்பில் இன்று காலை மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கவர்னருக்கு எதிர்ப்பு என்று சொல்லப்பட்டாலும், இந்த போராட்டத்தின் நோக்கம், யார் அந்த சார் என்று தமிழகத்தைக் கலக்கும் எடப்பாடி பழனிசாமிக்குப் பதிலடியாகவே பார்க்கப்படுகிறது. இன்று சென்னையில் கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட […]
பொம்பள சீமானா பிரேமலதா..? என்ன இப்படியெல்லாம் பேசுறார்..?

இன்றைய அரசியல்வாதிகளில் எக்குத்தப்பாகப் பேசுவதில் சீமானைப் போன்றவர் பிரேமலதா. வாய்க்கு வந்ததை எல்லாம் கருத்தாகப் பேசுபவர். தேசியகீதத்திற்காக கவர்னரின் வெளிநடப்பு விவகாரத்தில் அவர் பேசியிருக்கும் கருத்து செம வைரலாகி வருகிறது. பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்பதற்காக அனுமதி மீறி தே.மு.தி.க.வினர் நேற்று போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, ‘’கவர்னர் என்ன வருசத்துக்கு ஒரு முறை சட்டமன்றம் வர்றாரு. தேசிய கீதம் பாடச் சொன்னா […]
பொங்கல் பண்டிகை: 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தமிழகத்தில் மொத்தம் 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தமிழர்களால் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி பணி மற்றும் கல்வி நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் தங்கியுள்ள பொதுமக்கள் பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களில் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். அவர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் பண்டிகை காலங்களில் தமிழக போக்குவரத்துக்கழகம் […]
எடப்பாடி பழனிசாமியின் யார் அந்த சார் பாட்ஜ்..? திட்டமிட்டு திசை திருப்பினாரா கவர்னர்..?

அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டும் என்பதற்காக இன்று எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. தலைவர்கள், ‘யார் அந்த சார்..?’ என்ற பேட்ஜ் சட்டையில் அணிந்துகொண்டு சட்டசபைக்கு வந்தார்கள். யார் அந்த சார் என்ற எடப்பாடியின் குரல் ஆக்ரோஷமாக ஒலிக்கும் என்பதாலே, அதை திசை திருப்பவே கவர்னர் சட்டசபையைப் புறக்கணித்து தி.மு.க.வுக்கு உதவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அ.தி.மு.க.வைச் சேர்ந்த காயத்ரி ஜெயராம், ‘’மீண்டும் திமுகவுக்கு உதவும் முயற்சியில் ஆளுநர். பிரச்சினையை […]
விஜய் அரசியல் ஆலோசகர் ஐ.ஆர்.எஸ். அதிகாரி..? பா.ஜ.க. தொடர்பு உண்மையா..?

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்குள் வந்த நேரத்தில் அவரது அரசியல் ஆலோசகராக அர்ஜுனமூர்த்தியை பா.ஜ.க. களம் இறக்கியது. அதேபோன்று இப்போது நடிகர் விஜய்க்கு ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண்ராஜை பா.ஜ.க. களம் இறக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இது குறித்து திருச்சி சூர்யா, ‘’*தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் ஆலோசகர்களாக இருவர் இருக்கிறார்கள். ஒருவர் 2016ல் *மாற்றம் முன்னேற்றம் அன்புமணி* என்று பாமகவிற்கு வேலை செய்த ஜான் ஆரோக்கியசாமி. தொண்டர்களுக்கு தெரியவில்லை என்றாலும் அரசியல் விமர்சகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இவர்தான் […]
இந்த ஆண்டும் ஆளுநர் தப்பியோட்டம்… தேசிய கீதத்துக்கு அவமானமா..?

2025 ஆண்டுக்கான சட்டப்பேரவை முதல் கூட்டம் இன்று முறைப்படி தொடங்கியது. அரசு எழுதிக்கொடுத்த உரையை கவர்னர் ஆர்.என்.ரவி முழுமையாகப் படிப்பாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், கூட்டம் ஆரம்பித்த 3 நிமிடங்களில் அவையில் இருந்து வெளியேறி மீண்டும் பரபரப்பை உருவாக்கியிருக்கிறார் ஆளுநர். கடந்த 2 ஆண்டுகளாக ஆளுநர் உரை என்பது சர்ச்சைக்குள்ளானதாகவே இருந்தது. இந்நிலையில் சுமார் 9 மணி 15 மணி அளவில் சட்டமன்ற கூட்டத்திற்கு ஆளுநர் வருகை தந்தார். அவருக்கு காவல் துறை சார்பில் அணிவகுப்பு […]
தலைவி வா… தலைமை ஏற்க வா. கனிமொழி பிறந்த நாள் போஸ்டர் யுத்தம்

இன்று கனிமொழியின் பிறந்த நாளை அவரது ஆதரவாளர்கள் பிரமாண்டாமாககொண்டாடி வருகிறார்கள். கருணாநிதி, அண்ணா சமாதிகளில் மலர் அஞ்சலி செலுத்திவிட்டு தனதுஆதரவாளர்களை சந்தித்துள்ளார். தலைவி வா, தலைமை ஏற்க வா என்று ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள், கட்சியை வழிநடத்து ஆட்சிக்கு வழிகாட்டு! என்று கருணாநிதி மக்கள்கூட்டத்துடன் கனிமொழியை சட்டசபைக்கு அழைக்கும் போஸ்டர்கள் கட்சிக்குள் பெரும் தீயை மூட்டியுள்ளது. உதயநிதியின் புகைப்படம் இல்லாமலே கனிமொழி ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள். இந்த போஸ்டர் மற்றும் வாழ்த்து ஆகியவற்றைப் பார்க்கும்போது கனிமொழி ஆதரவாளர்களுக்கு உதயநிதி மீது கடும் கோபம் இருப்பதைப் புரிந்துகொள்ள […]
கழிவுநீர் தொட்டியில் விழுந்து எல்.கே.ஜி. மாணவி பலி!

தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து 3 வயதான எல்.கே.ஜி. மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பழனிவேல் சிவசங்கரி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுடைய 4 வயதான லியா என்ற மகள் அருகில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாள். இந்நிலையில் இன்று (ஜனவரி 3) உணவு இடைவெளியின் போது சிறுமி லியா கழிவுநீர் தொட்டிக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது. அந்த கழிவுநீர் தொட்டிக்கு […]
கையில் சிலம்புடன் குஷ்பு கைது… மேடையில் கருணாநிதிக்குப் பாராட்டு

தனக்கு பா.ஜ.க.வில் உரிய மரியாதை தரப்படவில்லை என்று புலம்பிய குஷ்புவை உடனடியாக மதுரையில் போராட்டத்துக்குத் தலைமை தாங்குவதற்கு அனுப்பிவிட்டது தலைமை. நீதிப் பேரணிக்கு நிச்சயம் அனுமதி கிடைக்காது என்பது தெரியும் என்பதால் போராட முயன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஆடியோ ரிலீஸ்க்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, ‘நான் சென்னைக்கு வந்து 38 வருஷமா கண்ணகியாத்தான் வாழ்ந்துக்கிட்டு இருக்கிறேன்’’ என்று கூறினார். இதையடுத்து மதுரை போராட்டத்திற்கு தலைமை தாங்க அனுப்பப்பட்டார். இந்த போராட்டத்தில் பேசிய குஷ்பு, ‘’இது பிரியாணி […]
ஈரோடு இடைத்தேர்தலுக்கு எடப்பாடி பழனிசாமி ஆலோசனை… என்ன முடிவு தெரியுமா?

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து நெருங்கிய வட்டாரத்தில் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனை முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2021 தேர்தலில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் வெற்றிபெற்ற திருமகன் ஈ.வெ.ரா. 67,300 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றார். அவரது மறைவுக்குப் பிறகான 2023 ஆண்டு தேர்தலில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார். […]

