நியூ கினியாவில் திடீர் நிலநடுக்கம் !

பப்புவா நியூ கினியாவில் இன்று (15/11/2024) காலை 10.58 மணி அளவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது . பூமிக்கு அடியில் 81 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்தாது , அது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது . இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது . இதை தொடர்ந்து அருகில் உள்ளா நகரமான கோகோபோவில் இருந்து சுமார் 123.2 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாகவும் […]
சாதி சர்வாதிகாரியா சீமான்..? நெல்லை பூசலில் தாசில்தாருக்குச் சிக்கல்

சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூக நீதியும் என்ற தலைப்பில் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று பேசி வருகிறார் நாம் தமிழர் சீமான். நெல்லையில் நடந்த கூட்டத்தில் சீமானை எதிர்த்து கேள்வி கேட்ட நிர்வாகிகளை சாதியைச் சொல்லித் திட்டியதாக புகார் எழுந்துள்ளது. அதோடு, அந்தக் கூட்டத்தில் தாசில்தார் கலந்துகொண்டதும் பெரும் சர்ச்சையை எழுப்பியிருக்கிறது. திருநெல்வேலியில் நாம் தமிழர் கட்சியின் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் சீமான் கலந்துகொண்டர். அப்போது, இந்த பகுதியில் நாடார்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் […]
இந்தியாவுக்கு எதிராக சாதனை படைத்த மார்கோ ஜான்சன் .

இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது டி20 போட்டி நேற்று (13/11/2024) நிறைவடைந்தது . இதில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியா நிர்ணயித்த 220 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தது. இருப்பினும் பின்வரிசையில் களமிறங்கி அதிரடியாக விளையாடிய மார்கோ ஜான்சன் 17 பந்துகளில் 54 ரன்கள் அடித்து அணி வெற்றி பெற போராடினார். ஆனாலும் வெற்றி பெற […]
29 ஜோடிகள் செய்து கொண்ட நிர்வாண திருமணம்: எங்கே தெரியுமா?

இரு மனம் இணையும் திருமணம் என்பது அவரவரின் சாதி, மொழி, இனம், மனம், நாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெவ்வேறு வகையில் நடத்தப்படுகிறது. அதன்படி ஒவ்வொருவரின் திருமணமும் மற்றவர்களுக்கு வினோதமாக தோன்றுவதுண்டு. அவ்வளவு ஏன் இப்போதெல்லாம் திருமணம் கூட தேவையில்லை என்று சொல்லி லிவிங் ரிலேஷியன்ஷிப்பில் கூட சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஆண், பெண் திருமணம் என்பதை தாண்டி ஆண் ஆணையும், பெண் பெண்ணையும் திருமணம் செய்து கொள்கின்றனர். எனக்கு எதற்கு இன்னொரு துணை […]
தலைமறைவான கஸ்தூரி: 2 தனிப்படை அமைத்து போலீஸ் தேடுதல் வேட்டை!

தெலுங்கு மக்களை அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவான கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் 2 தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பிராமணர் சமூகத்தினர் சார்பில் சென்னையில் கடந்த 3ம் தேதி நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, பிராமணர்களுக்கு ஆதரவாக ஆக்ரோஷமாக பேசினார். அப்போது அவர் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. இதைத்தொடர்ந்து தெலுங்கு அமைப்பினர் மற்றும் தெலுங்கு […]
மீண்டும் தொடங்கிய விமான சேவை !

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் உள்ள தீவு நாடான இந்தோனேசியாவில் சிறியதும் பெரியதுமான சுமார் 130 எரிமலைகள் உயிர்ப்புடன் உள்ளன. அவ்வப்போது இந்த எரிமலைகள் சீற்றமடைந்து வெடித்து சிதறி அப்பகுதியை புகை மண்டலமாக காணப்படும். இதை தொடர்ந்து சுற்றுலா தீவான பாலியின் அருகே உள்ள லெவோடோபி லாகி எரிமலை கடந்த வாரம் வெடித்து சிதறியது. இதை தொடர்ந்து 10 பேர் உடல் கருகி இறந்தனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். எரிமலை அடிவாரத்தில் உள்ள நகரில் இருந்து […]
அரைவேக்காட்டு தமிழிசைக்கு மக்கள் நீதி மய்யம் தரமான பதிலடி… இப்படி பண்றீங்களேம்மா

சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் தன்னை இனி உலக நாயகன் என்றோ வேறு பட்டப்பெயருடனோ அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை எந்த அரசியல் தலைவர்களும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், தமிழிசை செளந்தரராஜன் மட்டும், ‘’தி.மு.க.வின் மிரட்டலுக்குப் பயந்து உலக நாயகன் பட்டத்தை கமல்ஹாசன் துறந்துவிட்டார்’ என்று விமர்சனம் செய்திருந்தார். இதற்கு மக்கள் நீதி மய்யம் கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறது. உலக நாயகன் பட்டத்துக்கும் தி.மு.க. மிரட்டலுக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் அரைவேக்காட்டுத்தனமாகப் பேசியிருக்கிறார். […]
மக்களை அவதிக்குள்ளாக்கும் மருத்துவர்கள் போராட்டம்… என்ன செய்யவேண்டும் அரசு..?

சென்னையில், மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் அறிவித்து புறக்கனிப்பு செய்கிறார்கள். மாநிலம் முழுவதும் சுமார் 45,000 மருத்துவர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அவசர சிகிச்சை பிரிவு மட்டும் வழக்கம் போல் செயல்படுகிறது இதையடுத்து புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் அரசு என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி எழுந்துள்ளது. இது ஒரு தனி மனிதனின் கோளாறு என்பதை மக்களும் […]
நான்காவது முறையாக அமலாக்கத்துறை ரெய்டில் ஆதவ் அர்ஜுனா. அடுத்தது திருமாவளவன்..?

சென்னை தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் இன்று காலைமுதல் அமலாக்கத் துறையினர் சோதனையை தொடங்கியுள்ளனர். வீடு மற்றும் அவருக்கு சொந்தமான அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதுமட்டும் இல்லாமல் கோவையில் உள்ள ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதோடு ஆதவ் அர்ஜுனாவின் மாமனாரும் லாட்டரி அதிபருமான மார்ட்டின் வீடு அலுவலகத்திலும் ரெய்டு நடக்கிறது. ஆதவ் அர்ஜுனா […]
16 மாவட்டங்களுக்கு மழை வர வாய்ப்பு.

வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது . இதை தொடர்ந்து தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை […]

