திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து 2 பேர் பலி!

உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோவில் யானை மிதித்து யானைப்பாகன் மற்றும் அவரது உறவினர் என 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உதயா என்ற பாகன் அங்கிருக்கும் தெய்வானை என்ற பெண் யானைக்கு பாகனாக இருந்து அதனை பராமரித்து வருகிறார். இந்நிலையில் யானைக்கு பழம் கொடுக்க வந்த போது பாகன் உதயாவையும் அவருடன் வந்தவரான உறவினரான கிருஷ்ணபாலன் என்பவரை தெய்வானை யானை 2 பேரையும் […]
2026 அ.தி.மு.க.வுடன் கூட்டணியா? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்!

வருகிற 2026ம் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று அக்கட்சி தெளிவுப்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகத்தை ஆரம்பித்த விஜய்யின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள் மட்டுமல்லாமல், அதனுடன் கூட்டணி வைத்துள்ள தேசிய கட்சிகளையும் யோசிக்கவைத்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக்கழகம் நடத்திய முதல் மாநில மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக வெற்றிக்கழக […]
உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல் !

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், இரண்டரை ஆண்டுகளை கடந்தும் தொடர்கிறது. இதில் இரு தரப்பும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன . இதை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் தொடர்கிறது. இந்த சூழலில், உக்ரைன் மீது நேற்று திடீர் வான்வழித் தாக்குதலை ரஷ்யா நடத்தியது. ஒரே நேரத்தில் 120 ஏவுகணைகள், 90 […]
ஜாபர் சாதிக்கின் விறுவிறுப்பான போதை ரூட். சிக்கப்போகும் தி.மு.க. முக்கியப் புள்ளிகள்

போதை பொருட்கள் அனுப்பியதில் கிடைக்கும் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக தி.மு.க.வின் முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் சினிமா நெட்வொர்க் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் படத்திற்கும் இவரது முதலீடு அதிகம் என்று சொல்லப்படுகிறது. திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் என்.ஆர்.ஐ. வின் தலைவரும், போதை மருந்து கடத்தல் மன்னனுமான ஜாபர் சாதிக் மற்றும் 11 பேரை குற்றவாளிகளாக அறிவித்து சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில், ஜாபர் சாதிக்கின் சகோதரர் […]
சென்னையில் அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம் !

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு இன்று மதியம் இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானத்தில் 169 பயணிகள் பயணித்தனர். இதை தொடர்ந்து விமானம் நடுவானில் திருப்பதி வான் எல்லை அருகே பறந்துகொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டது. அதனால் விமானம் அவசர அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பின்னர், பயணிகள் அனைவரையும் மாற்று விமானம் மூலம் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் .
இயக்குநர் சுரேஷ் சங்கையா மரணத்தால் திரையுலகம் சோகம் !

‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘சத்திய சோதனை’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார். அவருக்கு வயது 41. யோகிபாபு நடிப்பில், “கெணத்த காணோம்’ என்ற படத்தை இயக்கி வந்த சுரேஷ் சங்கையா, அப்படத்தின் ரிலீஸுக்கு முன்பாக உடல்நலக் குறைவால் கலம்மனர் , இச்சம்பவம் தமிழ்த் திரையுலகை அதிர்ச்சியடைய செய்தது. வித்தியாசமான கதைக்களுடன் படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்த சுரேஷ் சங்கையா. காக்கா முட்டை திரைப்பட […]
ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பிரபால நிறுவனம் யார் தெரியுமா?

போயிங் கோ நிறுவனமானது தனது நிறுவணத்தில் ஆள்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கியது .மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 10 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்யவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆள்குறைப்பு நடவடிக்கையின் முதல் தொடக்க நிலைப் பணிகளை நிறுவனம் புதன்கிழமை தொடங்கிவிட்டதாகவும், பணியிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கும் ஊழியர்களுக்கு பிங்க் சிலிப் எனப்படும் நோட்டீஸ் வழங்குவது தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருபக்கம், திறமையான ஊழியர்களுக்கு வாய்ப்பு அளிப்பது மற்றும் திறமையான பணியாளர்களை அதிகப்படுத்துவது ஆகிய நடவடிக்கையின் காரணமாக, ஆள்குறைப்பு நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. […]
விஜய்க்கு புரிதல் இல்லை! சரமாரியாக வெளுத்து வாங்கிய சரத்குமார்!

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்தும், அவரது செயல்பாடுகள் குறித்தும் பா.ஜ.க. நிர்வாகி சரத்குமார் முதல்முறையாக சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கிய விஜய், தனது உச்சபட்ச சம்பளத்தை கொடுக்கும் சினிமாவை விட்டுவிட்டு அரசியல் கட்சி தொடங்கியது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் மாவட்ட பிரமுகர்களுடன் இணைந்து மிகவும் பிரமாண்டமான முறையில் முதல் மாநில மாநாட்டையும் […]
விஜய்க்கு துரை வைகோ கொடுத்த திடீர் அட்வைஸ்!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்க்கு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மகனும், ம.தி.மு.க. முதன்மைச் செயலாளருமான துரை வைகோ முக்கியமான அறிவுரை வழங்கியுள்ளார். தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை வெற்றிகரமான முறையில் நடத்தி முடித்த பிறகு விஜய்யின் அடுத்த நகர்வு குறித்து நிறைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சங்கரன்கோவிலில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய துரை வைகோ, விஜய் சினிமா வானில் ஜொலிக்கும் நட்சத்திரம். அவருக்கென்று எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அரசியல் என்பது […]
கிண்டி மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி! கொதித்தெழுந்த உறவினர்கள்!

கிண்டி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி திடீரென்று உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கிண்டியில் செயல்பட்டு வரும் கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு கடந்த 13ம் தேதி விக்னேஷ் என்ற 26 வயது இளைஞர், டாக்டர் பாலாஜி ஜெகன்நாதனை கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியது. உடல் நலம் தேறிய மருத்துவர் தற்போது இயல்புநிலைக்கு திரும்பியுள்ள நிலையில் விக்னேஷ் 15 நாள் […]

