அம்பேத்கருக்குத் துரோகம் செய்யலாமா திருமாவளவன்..? விஜய் மீட்டிங் கேன்சல்

வரும் டிசம்பர் 6ம் தேதி விகடன் நிறுவனம் நடத்த இருக்கும், “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” நூல் வெளியீட்டு விழாவில் தொல் திருமாவளவன் கலந்து கொள்ளப்போவதில்லை என்று முடிவு எடுத்திருப்பது விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர்களை அதிர வைத்துள்ளது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நிர்வாகிகள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இது குறித்துப் பேசும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர், ‘’நீங்கள் விஜய் பங்கேற்கும் விழாவில் நீங்கள் கலந்துகொண்டால் கூட்டணியில் குழப்பம் ஏற்படும்’ என்று முதல்வர் […]
அரசுப்பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டதின் பின்னணி என்ன?

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் ரமணி. இவருக்கு 26 வயது . இந்த நிலையில் ரமணி வழக்கம்போல் இன்று (நவம்பர் 20) வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்த போது திடீரென வகுப்பறைகுள் நுழைத்த நபர், ரமணியை கத்தியால் சரமாரியாக குத்தினார் . இதில் நிலைகுலைந்து போன ஆசிரியை ரமணி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை சக ஆசிரியர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இருப்பினும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே […]
கஸ்தூரிக்கு ஆஜராகும் நீதிபதியின் மனைவி. அப்போ சட்டம் எல்லோருக்கும் சமம் இல்லையா?

கஸ்தூரி சிறையில் மினரல் வாட்டர் குடிக்க முடியாமல், கொசுக்கடியால் அவதிப்படுகிறார் என்றதும் அவருக்கு ஆதரவாக நீதிபதியின் மனைவியே பரிந்துரைக் கடிதம் எழுதும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதனின் மனைவி, ‘’நடிகை கஸ்தூரியின் ஜாமீன் வழக்கை கருணையோடு அணுக வேண்டும். கஸ்தூரிக்கு ஆட்டீசத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை உள்ளது. சிறப்புக் குழந்தையை வளர்க்க கஸ்தூரி தனி ஆளாகப் போராடி வருகிறார்’’ என்று குரல் கொடுத்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ‘’ஆட்டிசம் […]
மாணவர்களுக்கு அமரன் படம் காட்டுவது தான் தேசப்பற்றா..? எல்லை மீறும் பா.ஜ.க.

தாய்நாட்டுக்கு உயிர் கொடுத்த ஒரு ராணுவ வீரனின் கதை என்று பா.ஜ.க.வினர், ‘அமரன்’ திரைப்படத்துக்கு தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். அதேநேரம், இஸ்லாமியர்கள் மீது அமரன் படம் வெறுப்பைக் கக்குகிறது என்று பல்வேறு அமைப்புகள் இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். இந்த நிலையில் பள்ளி மாணவர்களை தியேட்டருக்கு அழைத்துச்சென்று அமரன் படம் பார்க்க வைத்திருப்பது கடும் சர்ச்சையாகி வருகிறது. இந்த படம் சிறுவர்கள் பார்ப்பதற்குத் தகுதியானது என்று சென்சார் கூறவில்லை. ஏனென்றால் படத்தில் நிறைய வன்முறை உள்ளது. […]
இமான், ஜி.வி பிரகாஷை தொடர்ந்து ரஹ்மானும் விவாகரத்து. காரணம் இசை தானா?.

காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி பிரிவு தமிழகத்தில் பெரும் அதிர்வை உண்டாக்கியது. அவரது மாமாவும் பிரபல இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து அதை விட பெரிய பூகம்பத்தைக் கிளப்பியிருக்கிறது. இசையமைப்பாளர் இமானும் விவாகரத்து செய்திருப்பதால், இசையமைப்பாளர்களுக்கு என்ன பிரச்னை என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்போது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 57 வயது. சிறுவயது முதலே இசைக் கருவிகள் வாசிப்பதில் ஆர்வம் கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் தந்தை சேகரிடமிருந்து இசை நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தவர். தந்தை மறைவுக்குப் பிறகு எம்.எஸ். விஸ்வநாதன், […]
தனுஷ்- நயன்தாரா விவகாரம்! முதல்முறையாக கருத்து தெரிவித்த தனுஷ் தந்தை!

தனுஷ் – நயன்தாரா விவகாரம் தற்போது பெரும் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது. இவர்கள் சேர்ந்து நடித்த யாரடி நீ மோகினி பெரியளவில் வெற்றி பெற்ற நிலையில் நல்ல நட்பு தொடர்ந்தது. அதன் காரணமாக எதிர்நீச்சல் படத்தை தனுஷ் தயாரித்த போது சம்பளமே வாங்காமல் ஒரு பாடலுக்கு நடமானடிக் கொடுத்தார் நயன்தாரா. அந்த வகையில தனுஷ் தயாரிப்பில், நயன்தாரா, விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை […]
தளவாய்க்குப் பதவி. ஊழல் குற்றச்சாட்டுக்கு எச்சரிக்கை. வேகம் காட்டும் எடப்பாடி பழனிசாமி

சமீபத்தில் கட்சியில் இருந்து கட்டம் கட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் மாற்றுக் கட்சிக்குத் தாவ இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அவருக்கு மீண்டும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தன்னைப் பற்றி அவதூறு பேசினால் சும்மா விட மாட்டேன் என்று எச்சரிக்கும் வகையில் அறப்போர் இயக்கத்துக்கு எதிராக நிஜமாகவே வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள், ‘’எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலத்தில் தஞ்சை, கோவை, சிவகங்கை உள்ளிட்டப் பகுதிகளுக்கான நெடுஞ்சாலை துறை […]
விஜய் அறிவிப்புக்கு காரணம் அண்ணாமலை மிரட்டலா..? அ.தி.மு.க. ஆவேசம்

வரும் 2026 தேர்தலில் மெகா கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துவந்தார். அதற்கு ஏற்ப நடிகர் விஜய் மற்றும் திருமாவளவன் ஆகிய இருவரது செயல்பாடுகளும் இருந்துவந்தன. ஒரு கட்டத்தில் தி.முக.வின் நெருக்கடியைத் தாக்குப்பிடிக்க முடியாத திருமாவளவன், தாங்கள் தொடர்ந்து ஸ்டாலினுடன் பயணிப்போம் என்று கூறி, அந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். விஜய் இருந்தால் போதும் தி.மு.க.வை அலறவிடலாம் என்று எடப்பாடி பழனிசாமி கணக்குப் போட்டிருந்தார். தி.மு.க.வை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அதற்கு விஜய்யும் சம்மதம் தெரிவித்திருந்தார். […]
மணிப்பூர் கலவரம் : அதிகரிக்கும் உயிரிழப்பு

மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்தது . கலவரத்தை தொடர்ந்து மணிப்பூர் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தேசிய மக்கள் கட்சி திரும்ப பெற்றது. இதை தொடர்ந்து இம்பால் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டன . ஜிரிபாம் மாவட்டத்தில் தீவிரவாதிகளால் சமீபத்தில் கடத்தப்பட்ட 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (16/11/2024) மீண்டும் வன்முறை வெடிக்க தொடங்கியது . தலைநகர் இம்பாலில் […]
ராகிங் கொடுமை: மருத்துவ கல்லூரி மாணவர் பரிதாப பலி!

ராகிங் கொடுமை காரணமாக மருத்துவ கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் தார்பூர் பகுதியில் ஜி.எம்.இ.ஆர்.எஸ். என்ற மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இதில் 18 வயதான அனில் மெதானியா என்ற மாணவர் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் அனில் மெதானியாவை அதே கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த 3ம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் சிலர் ராகிங் செய்ததாக கூறப்படுகிறது. அதன்படி 3 மணி நேரம் ஒரே […]

