News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சுரங்கத்தில் அண்ணாமலை சொன்னது பொய்யா..? மீண்டும் டங்ஸ்டன் போராட்டம்

ஸ்டாலின் அரசு அனுமதி கொடுத்த காரணத்தாலே மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கத்துக்கு ஏலம் விட்டது. ஆனாலும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அந்த திட்டத்தை சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி கைவிடுவதாக அறிவித்திருக்கிறார் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார். இதற்கு பா.ஜ.க.வினர் பலரும் அண்ணாமலைக்கு பாராட்டு தெரிவித்தார்கள். இந்த நிலையில், டங்க்ஸ்டன் திட்டம் முழுமையாக கைவிடப்படவில்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறார் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன். அரிட்டாப்பட்டி , மீனாட்சிபுரம் கிராமங்களில் உள்ள சுமார் […]

ஜல்லிக்கட்டு போட்டி: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.   பண்டைய காலம் முதல் தமிழர்களின் வீர விளையாட்டாக விளங்கி வரும் ஜல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளமாக உள்ளது. இடைபட்ட காலத்தில் ஜல்லிகட்டு போட்டிகளை நடத்தக் கூடாது என்று பீட்டா அமைப்பு மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இளைஞர்களின் எழுச்சி மிகு போராட்டத்தின் விளைவாக ஜல்லிக்கட்டு குறித்து அரசு அவசர தீர்மானம் நிறைவேற்றி அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் வழிகாட்டு […]

கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு !

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (டிசம்பர் 25) உலகம் முழுவதும் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. வீடுகள், தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.    இதை தொடர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி சென்னையில் இன்றிரவு முதல் நாளை வரை 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கிறிஸ்துமஸ்  கொண்டாட சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன . சென்னையில் 350 தேவாலயங்களில் சுழற்சி முறையில் போலீசார் கண்காணிக்க […]

25 சீட் போதுமா… இன்னும் கேளுங்க திருமா..? டிரோல் செய்யும் உடன்பிறப்புகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் இருந்துகொண்டே தி.மு.க.வுக்கு குடைச்சல் கொடுத்துவந்த ஆதவ் அர்ஜுனாவை இப்போது தான் வெளியே அனுப்பினார் திருமாவளவன். இனிமேல் கூட்டணிக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று  நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள் வன்னியரசு அடுத்த பஞ்சாயத்தைக் கிளப்பிவிட்டார். தி.மு.க. அரசில் விடுதலைச் சிறுத்தைகள் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை இரட்டை இலக்கில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதனால் 25 தொகுதிகள் கேட்போம் என்று கேட்ட விவகாரம் படு வைரலாகியுள்ளது. திருமாவளவன் அனுமதியின்றி இப்படி பேசியிருக்க மாட்டார் என்பதால் […]

கரூர் கம்பெனியின் டாஸ்மாக் கொள்ளை இத்தனை கோடியா..? அதிரவைக்கும் திராவிட ஊழல்

மதுவிலக்கு கொண்டுவருவோம் என்று சொன்ன ஸ்டாலின் ஆட்சியில் அமோகமாக டாஸ்மாக் ஊழல் நடக்கிறது என்பது தான் இப்போதைய ஹாட் டாபிக். ஒரு தந்தையாகக் கேட்டுக்கொள்கிறேன் குடிக்காதீங்க என்று அட்வைஸ் தரும் முதல்வர் ஸ்டாலினுக்குத் தெரிந்தே டாஸ்மாக் கடையில் சட்டத்துக்குப் புறம்பாக கரூர் கும்பல் புதிய வழியில் வசூல் வேட்டை நடத்துவதாக செய்திகள் வெளியாகின்றன. இது குறித்துப் பேசும் பா.ஜ.க.வினர், ‘’தமிழ்நாடு முழுவதும் சுமார் 5400 டாஸ்மாக் கடைகள் இருக்கிறது, கடையுடன் இணைக்கப்பட்ட பார்கள் 3240 உள்ளது, அது […]

5ம் வகுப்பு வரை 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

பள்ளிகளில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களை கட்டாய தேர்ச்சி செய்யும் முறையை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பள்ளிகளில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களை தேர்வில் தோல்வியுற்றவர்களாக அறிவிக்கக் கூடாது என்கிற கொள்கை தற்போது நடைமுறையில் உள்ளது. இதனால் அனைத்து பள்ளிகளிலும் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் பயின்று வரும் அனைத்து […]

நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது கல்வீச்சு! பின்னணியில் முதல்வரா?

  நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது கல்வீசப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.   நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் டிசம்பர் 5ம் தேதி புஷ்பா2 ரிலீசானது. இத்திரைப்படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்து வருகிறது. திரைப்படம் ரிலீசாவதற்கு முதல் நாள் ஐதராபாத்தில் இயங்கி வரும் சந்தியா திரையரங்கில் படம் ரிலீசானது. இதில் எந்த முன்னறிவிப்பும் இன்றி அல்லு […]

மத்திய அமைச்சர் இப்படி பேசினாரா..? அன்பில் மகேஷ் ஓப்பன் டாக்

“மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் அடுத்த அரை மணி நேரத்தில் நிதி தருகிறோம் என்று ஒன்றிய அரசின் அமைச்சர் வெளிப்படையாகப் பேசினார் என்று தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியிருப்பது வைரலாக மாறியிருக்கிறது. தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று, “கடந்த மூன்று ஆண்டுகளில் கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு உயர்ந்துள்ளது. மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மூலம் ஆசிரியர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கியுள்ளோம். மேலும் நகர்ப்புற , கிராமப்புற மாணவர்கள் மட்டுமின்றி மலைப்பிரசேதங்களில் […]

விஜயகாந்த் குரு பூஜையில் பன்னீருக்கு முதல் மரியாதை..? திசை மாறும் பிரேமலதா

இறந்த தலைவர்களின் நினைவு நாளில் அமைதிப் பேரணி நடத்துவது வழக்கமான நிகழ்வு. ஆனால், விஜயகாந்த் நினைவு நாள் பேரணியை மாபெரும் அரசியல் மாநாடு போன்று நடத்துவதற்கு பிரேமலதா திட்டமிட்டு செயல்படுவதாக கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாள் வருகின்ற 28ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை குரு பூஜையாகக் கொண்டாட பிரேமலதா திட்டமிட்டுள்ளார்.  இது குறித்து பேசிய பிரேமலதா […]

தேர்தல் ஆணையம் ரகசிய சட்டத்திருத்தம்.? இவிஎம் மோசடிக்கு சாதகம்

இவிஎம் தேர்தல் குறித்து யாரும் எந்தக் கேள்வியும் கேட்ககூடாது என்பதன் அடிப்படையில் இரவுவோடு இரவாக தேர்தல் நடைமுறை திருத்த சட்டம் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் வாக்குச்சாவடியில் வைக்கப்படும் ஃபுட்டேஜ் முதலான தகவல் இனி யாருக்கும் கொடுக்கப்பட வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் செயல் என்று எதிர்க்கட்சிகள் கொந்தளிக்கின்றன. சமீபத்தில் நடந்த மகாராஷ்டிரா தேர்தலில் மாலை 5 மணிக்குப் பிறகு அதிக வாக்குகள் பதிவு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டன. இது குறித்து […]