News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தலைவி வா… தலைமை ஏற்க வா. கனிமொழி பிறந்த நாள் போஸ்டர் யுத்தம்

இன்று கனிமொழியின் பிறந்த நாளை அவரது ஆதரவாளர்கள் பிரமாண்டாமாககொண்டாடி வருகிறார்கள். கருணாநிதி, அண்ணா சமாதிகளில் மலர் அஞ்சலி செலுத்திவிட்டு தனதுஆதரவாளர்களை சந்தித்துள்ளார். தலைவி வா, தலைமை ஏற்க வா என்று ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள், கட்சியை வழிநடத்து ஆட்சிக்கு வழிகாட்டு! என்று கருணாநிதி மக்கள்கூட்டத்துடன் கனிமொழியை சட்டசபைக்கு அழைக்கும் போஸ்டர்கள் கட்சிக்குள் பெரும் தீயை மூட்டியுள்ளது.   உதயநிதியின் புகைப்படம் இல்லாமலே கனிமொழி ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள். இந்த போஸ்டர் மற்றும் வாழ்த்து ஆகியவற்றைப் பார்க்கும்போது கனிமொழி ஆதரவாளர்களுக்கு உதயநிதி மீது கடும் கோபம் இருப்பதைப் புரிந்துகொள்ள […]

கழிவுநீர் தொட்டியில் விழுந்து எல்.கே.ஜி. மாணவி பலி!

தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து 3 வயதான எல்.கே.ஜி. மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பழனிவேல் சிவசங்கரி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுடைய 4 வயதான லியா என்ற மகள் அருகில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாள். இந்நிலையில் இன்று (ஜனவரி 3) உணவு இடைவெளியின் போது சிறுமி லியா கழிவுநீர் தொட்டிக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது. அந்த கழிவுநீர் தொட்டிக்கு […]

கையில் சிலம்புடன் குஷ்பு கைது… மேடையில் கருணாநிதிக்குப் பாராட்டு

தனக்கு பா.ஜ.க.வில் உரிய மரியாதை தரப்படவில்லை என்று புலம்பிய குஷ்புவை உடனடியாக மதுரையில் போராட்டத்துக்குத் தலைமை தாங்குவதற்கு அனுப்பிவிட்டது தலைமை. நீதிப் பேரணிக்கு நிச்சயம் அனுமதி கிடைக்காது என்பது தெரியும் என்பதால் போராட முயன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஆடியோ ரிலீஸ்க்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, ‘நான் சென்னைக்கு வந்து 38 வருஷமா கண்ணகியாத்தான் வாழ்ந்துக்கிட்டு இருக்கிறேன்’’ என்று கூறினார். இதையடுத்து மதுரை போராட்டத்திற்கு தலைமை தாங்க அனுப்பப்பட்டார். இந்த போராட்டத்தில் பேசிய குஷ்பு, ‘’இது பிரியாணி […]

ஈரோடு இடைத்தேர்தலுக்கு எடப்பாடி பழனிசாமி ஆலோசனை… என்ன முடிவு தெரியுமா?

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து நெருங்கிய வட்டாரத்தில் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனை முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2021 தேர்தலில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் வெற்றிபெற்ற திருமகன் ஈ.வெ.ரா. 67,300 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றார். அவரது மறைவுக்குப் பிறகான 2023 ஆண்டு தேர்தலில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார். […]

சீமான் வழியில் செளமியா அன்புமணி கைது… அடுத்தது பிரேமலதாவா..?

இன்று  அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு போராட்டம் செய்ய வந்த, பசுமைத்தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவரது வாகனத்தை விட்டு இறங்கிய உடனே, போராட்டம் நடத்த அனுமதி மறுத்து காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இதையடுத்து பா.ம.க.வினர் குஷியாகி ஆங்காங்கே போராட்டம் நடத்துகிறார்கள். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் பா.ஜ.க. சார்பில் அண்ணாமலை சாட்டையடிப் போராட்டம் நடத்தினார். அ.தி.மு.க. சார்பில், ‘யார் அந்த சார்?’ என்று போஸ்டர் ஒட்டப்பட்டதுடன் மாலில் போராட்டம் நடத்தினார்கள். […]

அண்ணாமலையை அலறவிடும் தமிழிசை… மாற்றமா… ஏமாற்றமா?

டெல்லிக்கு செல்வதற்கு முன்பு தமிழிசை செளந்தரராஜன், ‘’இன்னும் 10 நாட்களில் மாநிலத் தலைவர்கள் மாற்றம் நடைபெற உள்ளது. அதற்காக பா.ஜ.க. தலைவர் நட்டாவை சந்திக்கச் செல்கிறேன்’’ என்று வெளிப்படையாகக் கொடுத்திருக்கும் பேட்டி பா.ஜ.க.வில் சூறாவளியாக சுழன்று அடிக்கிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே பா.ஜ.க.வுக்கு எம்.எல்.ஏ.க்கள் கிடைப்பார்கள் என்பது மூத்த பா.ஜ.க. தலைவர்கள் கருத்தாக இருக்கிறது. ஆனால், அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில் பா.ஜ.க. தனித்து நிற்பதையே விரும்புகிறார். இந்த நிலையில் கடைசி […]

நீயெல்லாம் ஒரு ஆளு…. ஆடியோ திருடன்… அப்பாடக்கர்.  எல்லை மீறும் சீமான் – அருண்குமார் மல்லுக்கட்டு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நீதி கேட்டு போராட வந்த சீமான் கைது செய்யப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் வருண்குமார் பற்றி பேசிய விவகாரம் பற்றி எரிகிறது. முன்னதாக தன்னிடம் சமாதானம் பேச சீமான் விரும்பியதாகவும், அதை ஏற்கப்போவதில்லை என்றும் வருண்குமார் பேசியிருந்தார். இது குறித்து செய்தியாளர்கள் கேட்டது, ‘’திமுக ஐடி விங்கிற்கு ஆடியோ திருடி கொடுக்குற எடுபுடி வருண்குமார்… நீயெல்லாம் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லையே நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்க… நான் […]

ஏமனின் மரண தண்டனை விதிக்கப்பட்ட நர்ஸ்! தீவிர நடவடிக்கையில் மத்திய அரசு!

கேரள  மாநிலத்தைச் சேர்ந்த நர்சிங் முடித்த நிமிஷா பிரியாவுக்கு திருமணமாகி 8 வயதில் குழந்தை உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு சென்ற நிமிஷா அங்குள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றினார். அப்போது தனியாக மருந்தகம் வைக்க வேண்டும் என்று நிமிஷாவுக்கு எண்ணம் எழுந்த நிலையில், அதனை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைத்த மஹிதி என்பவர் நிமிஷாவின் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக் கொண்டுள்ளார். மேலும் அவரை பல ஆண்டுகளாக கொடுமைப்பபடுத்தியுள்ளார். இதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாது […]

அண்ணாமலை கூப்பிடவே இல்லையாம். குஷ்பூ ஆடியோ ரிலீஸ்… பனையூருக்குப் பாய்ச்சல்?

கருணாநிதி உயிருடன் இருந்த நேரத்தில் தி.மு.க.வில் இணைந்து கலைச் சேவையுடன் அரசியல் பயணத்தைத் தொடங்கியவர் நடிகை குஷ்பு. அவர் சேர்ந்ததும் தி.மு.க. தோற்றுப்போனது. அதன் பிறகு ஸ்டாலின் நெருக்கடியைத் தாக்குப்பிடிக்க முடியாமல் காங்கிரஸ் கட்சிக்குப் போனார். அந்த கட்சியும் தோற்றுப்போனதும் பா.ஜ.க.வுக்குப் போனார். பா.ஜ.க.வில் அவருக்கு தேசிய மகளிர் ஆணையத்தின் தலைமைப் பதவி கொடுக்கப்பட்டது. அதில் அவரது கல்வித்தகுதி பிரச்னையானதால் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு […]

ஜோசப் விஜய் கவர்னருடன் நடத்திய தேர்தல் பேச்சுவார்த்தை அட்டர்ஃப்ளாப். காருக்கு ஒரு வழக்குப்பதிவு?

ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல்வாதியான நடிகர் விஜய் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்திற்காக தமிழக ஆளநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசியது எக்கச்சக்க சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் கவர்னரை சந்தித்துப் புகார் சொல்லப்போகிறார் என்றதுமே தி.மு.க.வினர், ‘’அண்ணா பல்கலைக்கழக வேந்தரான கவர்னரை கண்டித்து ஆளுநரிடம் விஜய் புகார்…’’ என்று கிண்டல் செய்தார்கள். மாநிலத்துக்குக் கவர்னர் தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கும் விஜய் கவர்னரை சந்திப்பது சரியா..? அண்ணா பல்கலையின் பாதுகாப்புப் பொறுப்பு ஆர்.என்.ரவியிடம் இருப்பதால் நேரடியாக […]