News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தயிர் சாதம் நிர்மலா சீதாராமனுக்கு நல்லி எலும்பு வேல்முருகன் எச்சரிக்கை… கதறும் பா.ஜ.க.

மும்மொழி கொள்கைக்கு எதிராக சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், ’’தயிர் சாதம் சாப்பிடும் உங்களுக்கே இவ்வளவு கோபம் வந்தால்.. நல்லி எலும்பு சாப்பிடும் எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்?’’ என்று பேசிய விவகாரம் தமிழக பா.ஜ.க.வினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளதற்கு தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணிக் கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக […]

விவசாயத்தை அழித்து விஜய் ஸ்கூல் கட்டினாரா..? யார் அந்த பினாமி..?

மோடி அரசின் மும்மொழிக் கொள்கையை விஜய் விமர்சனம் செய்த காரணத்தால், விஜய் பள்ளிக்கூட ஆதாரத்தை வெளியிட்டு புதிய பரபரப்பை உருவாக்கியிருக்கிறார் அண்ணாமலை. விவசாயத்தை அழித்து பள்ளி கட்டியிருப்பதாகவும் பினாமி மூலம் வரி ஏய்ப்பு செய்வதாகவும் புகார் கூறப்படுகிறது. செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘’நடிகர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் ஒரு சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார் என்று. பதூர் என்ற இடத்தில் அந்த பள்ளி […]

ராஜேந்திர பாலாஜிக்கு சிபிஐ சம்மன், கைது..? எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி

  ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி மோசடி செய்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அடுத்து அவருக்கு சம்மன் அனுப்பி கைது செய்ய இருப்பதாக வெளிவரும் தகவல்கள் எடப்பாடி பழனிசாமிக்கு பா.ஜ.க. தரும் நெருக்கடியாகவே கருதப்படுகிறது. அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அவர்  விருதுநகர் மாவட்ட அதிமுக பிரமுகரான விஜயநல்லத்தம்பி என்பவர் மூலமாக 33 பேரிடம் ரூ.3 கோடி […]

ராகுல் எதிர்ப்பை மீறி தேர்தல் கமிஷனர் நியமனம். அமித்ஷா நண்பருக்குப் பதவி பரிசு

ராமஜென்ம பூமி அறக்கட்டளையில் முக்கியப் பங்கு வகித்தவரும் அமித்ஷாவுக்கு நெருக்கமான நண்பராகக் கருதப்படுபவருமான ஞானேஷ்குமார் புதிய தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அடங்கிய தேர்தல் கமிட்டி புதிய தலைவரை தேர்வு செய்வதற்குக் கூடியது.  புதிய நியமன நடைமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் மீது உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும் வரை, நியமனத்தை ஒத்திவைக்குமாறு […]

முடிஞ்சா என்னை சிறையில் போடுங்க… ஸ்டாலினுக்கு சீமான் சவால்

எத்தனை வழக்கு வேண்டுமானாலும் போடுங்கள், நாங்கள் அதனை எதிர்கொள்வோம். கைதுக்கு நான் அஞ்சுகிற ஆளா..? விசாரணைக்கு ஆஜராக நான் பயப்படவில்லை. எல்லா வழக்குகளையும் ஒரே இடத்திற்கு மாற்றிக்கொள்வோம் என்று சீமான் பேசிய விவகாரம் வைரலாகிவருகிறது. சீமான் தொடர்ச்சியாக பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வந்தார். அவரின் பேச்சை கண்டித்து திராவிட அமைப்புகள், பெரியார் இயக்கங்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டன. மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இவருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர். தமிழகத்தில் மொத்தம் 70-க்கும் […]

விஜய் குடும்பத்தை வம்பிழுக்கும் பா.ஜ.க… மும்மொழிக் கொள்கை மோதல்

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் பா.ஜ.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் எதிர்ப்பு அறிக்கை கொடுத்தார் நடிகர் விஜய். இதையடுத்து பா.ஜ.க.வினரும் தி.மு.க.வினரும் ஒரே நேரத்தில் விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த விவகாரத்தில் விஜய் குடும்பத்தை நேரடியாகவே பா.ஜ.க. வம்புக்கு இழுத்துள்ளது. பா.ஜ.க.வின் மூத்த தலைவரான ஹெச்.ராஜா, `தவெக தலைவர் விஜய்யின் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்? மும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் விஜய் போன்ற அனைத்து அரசியல்வாதிகளும் உங்கள் பிள்ளைகள் எங்கு படித்தாலும் அங்கிருந்து நிறுத்தி அரசுப் பள்ளியில் சேர்க்க தயாரா?’’ என்று […]

எடப்பாடி பழனிசாமியின் கூட்டணி சீக்ரெட்… வேலூரில் மெகா உற்சாகம்

வேலூர் கோட்டை மைதானத்தில் அ.தி.மு.க இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் நடைபெறும் லட்சிய மாநாட்டிற்கு வந்த இ.பி.எஸ்க்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. ஏகப்பட்ட இளம் பெண்கள், இளைஞர்கள் மத்தியில், ‘அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில், இருமொழி கொள்கையில் அ.தி.மு.க உறுதியாக உள்ளது’ என்றும் இ.பி.எஸ் திட்டவட்டமாகத் தெரிவித்ததுடன் வரும் 2026 தேர்தல் கூட்டணி பற்றியும் பேசியிருக்கிறார். வேலூர் மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக […]

மும்மொழிக் கொள்கை திணிப்பு… மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்புப் போராட்டம்..?

மும்மொழிக் கொள்கையை பிறமாநிலங்கள் ஏற்கும் போது தமிழ்நாடு மட்டும் ஏற்க மறுப்பது ஏன் என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுப்பிய கேள்வியால் தமிழகம் முழுக்க பற்றி எரிகிறது. தேசிய கல்விக்கொள்கை என்ற பேரில் இந்தியை திணிக்க பல வழிகளிலும் முட்டுக்கட்டை போடுவதுடன் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய 2000 கோடியை கொடுக்காத பா.ஜ.க. அரசுக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்துள்ளது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின், “They have to come to the terms of the […]

சீமானுக்கு சேதாரம்… பிரபாகரன் படத்துக்குத் தடை..?

ராஜீவ்காந்தி மரணத்துக்குப் பிறகு இந்தியாவில் எல்.டி.டி.இ. இயக்கம் தடை செய்யப்பட்டது. அதேநேரம், எல்.டி.டி.இ. இயக்கத் தலைவர் பிரபாகரன் படத்தை பொதுவெளியில் பயன்படுத்துவதற்கும் தடை இருக்கிறது. ஆனால், சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் தொடர்ந்து எல்லா மேடைகளிலும் பிரபாகரன் படத்தை பயன்படுத்தி வந்தனர். மத்திய பா.ஜ.க. ஆதரவு இருப்பதாலே இதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட எல்.டி.டி.இ  தலைவர் பிரபாகரனின் படத்தை பொது வெளியில் பயன்படுத்த நாம் தமிழர் கட்சியின் […]

எலான் மஸ்க், இவ்வளவு குசும்பு உடம்புக்கு ஆகாது. மோடி மீட்டிங் வைரல்

இந்தியாவில் பிரதமர் மோடிக்கு அதானி எப்படி நெருக்கமான நட்போ,அப்படித்தான் அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்பும் எலான் மஸ்க்கும் பிரிக்கமுடியாத கூட்டாளிகள். தமிழக மக்களுக்குப் புரியும் வகையில் சொல்வது என்றால் ஜெயலலிதாசசிகலா கூட்டணி போன்றது. அமெரிக்காவுக்குப் போயிருக்கும் இந்தியப் பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறைஅமைச்சர், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத்துறை செயலாளர் உள்ளிட்டமிகப்பெரும் அதிகாரிகள் கலந்துகொண்ட சந்திப்பில் எல்லான் மஸ்க் அவரது குழந்தைகளை கூட்டிட்டுவந்து மீட்டிங்கை நடத்தி இருப்பது பெரும் வைரலாகிவருகிறது. ’எப்புடினாலும் பாட்டி வடை சுட்டா […]