News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தமிழ் எங்கே அண்ணாமலை..? கேந்திர வித்தியாலயா தில்லுமுல்லு

புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய சுமார் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், தமிழ்நாடு அரசு மொத்தமாக 5 ஆயிரம் கோடி ரூபாயை இழக்க நேரிடும் எனவும், திமுக தலைமையிலான அரசு மாணவர்களின் கல்வியை வைத்து அரசியல் செய்வதாகவும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டி வருகிறார். அதேநேரம், உலகின் மூத்த மொழியான தமிழை பிரதமர் மோடி போற்றுவதோடு, உலகம் […]

அன்புமணிக்கு எம்.பி. பதவி…? ஓநாய், வெள்ளாடு இபிஎஸ் பாய்ச்சல் பின்னணி

ஓநாடு, வெள்ளாடு ஒன்றாக இருக்க முடியுமா என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருப்பதற்குப் பின்னால் அன்புமணிக்கு எம்.பி. சீட் கொடுக்கும் ரகசியம் இருப்பதாக அ.தி.மு.க.வினர் கதிகலங்கி நிற்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி எழுதிய கடிதத்தில், ’’தமிழ் நாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடைபெற்ற நேரத்தில் எல்லாம், காங்கிரஸ்-திமுக கூட்டணியின் மத்திய அரசு நிதி நெருக்கடியைக் கொடுத்தும்; மாநில அரசின் கோரிக்கைகளை கிடப்பில் போட்டும் இம்சை அரசாக இருந்ததை அவ்வளவு எளிதாக […]

காளியம்மாளை சேர்க்காதீங்க… விஜய்க்கு எக்கச்சக்க நெருக்கடி

நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு இணையாக காளியம்மாளுக்கு வரவேற்பு கிடைக்கிறது என்று ஒரு பேச்சு எழுந்ததாலே, அவரை பிசிறு என்று மட்டம் தட்டினார் சீமான். அதன் பிறகு சீமானுடன் காளியம்மாள் மீட்டிங் நடந்தாலும் அவர்களுக்கு இடையில் ஒற்றுமை ஏற்படவில்லை. இந்த நிலையில் விழா அழைப்பிதழ் ஒன்றில் காளியம்மாளின் பெயர், நாதக பெண்கள் பாசறை ஒருங்கிணைப்பாளர் என்று இல்லாமல், சமூக செயற்பாட்டாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவரே நாம் தமிழர் பெண்கள் பாசறை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியைக் குறிப்பிட வேண்டாம் […]

பாலியல் வழக்கில் சீமான் கைது உறுதி..? அண்ணி ஆவாரா விஜயலட்சுமி..?

வீடியோவாக மட்டும் சீமானுடன் மோதிக்கொண்டிருந்த நடிகை விஜயலட்சுமியின் பாலியல் புகார் மிகவும் வில்லங்கமான கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டுர் இருக்கிறது. இந்த விஷயத்தில் விஜயலட்சுமியால் மட்டுமே சீமானைக் காப்பாற்ற முடியும் என்ற நிலையில், மீண்டும் அவரை தாஜா செய்யும் வேலையை தம்பிகள் செய்துவருவதாக சொல்லப்படுகிறது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ச்சியாக பல்வேறு பாலியல் புகார் கூறிவந்தார். தன்னை ஏமாற்றி பலாத்காரம் செய்தார், கருக்கலைக்க வைத்தார் என்றெல்லாம் குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் […]

விஜய் கட்சியில் மருது அழகுராஜ்.? என்ன எதிர்பார்க்கிறார்..?

எடப்பாடி பழனிசாமியின் ஆளாக நின்று தேர்தலில் தோற்றுப் போனவர் முன்னாள் பத்திரிகையாளரான மருது அழகுராஜ். பணம் தருவதாகச் சொல்லி ஏமாற்றி என் வீட்டை விற்பனை செய்ய வைத்து என்னை ஓட்டாண்டி ஆக்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்று ஓ.பன்னீர்செல்வம் பக்கம் பாய்ந்தார். இவர் அதிகாரபூர்வமாக விஜய் கட்சியில் சேர்வதற்கு துட்டு எதிர்பார்க்கிறாராம். பன்னீர் அணியில் சேர்ந்ததும் இவருக்காக ஒரு பத்திரிகையைத் தொடங்கப்பட்டது. ஆனால், அந்த பத்திரிகையை நடத்தவும் மருது அழகுராஜால் முடியவில்லை. அவரது செலவுக்குப் பணம் கொடுத்து பன்னீருக்கு […]

அன்புமணிக்கு என்னாச்சு..? பா.ஜ.க.வை காப்பாற்ற போராட்டம்?

இந்தித் திணிப்பு, மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழகம் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. நிவாரண நிதி தராமல் மோடி அரசு தமிழகத்தைப் புறக்கணித்துவருகிறது. இந்த விவகாரங்களுக்காக தி.மு.க. கூட்டணியினர் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்திவரும் நிலையில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். அடித்து விளையாட வேண்டிய நேரத்தில் சம்பந்தமில்லாமல் பா.ஜ.க. மீதுள்ள பற்றையும் அன்பையும் காப்பாற்றுவதற்காகவே சாதிவாரி கணக்கெடுப்புப் போராட்டம் நடத்துவதாக அவரது கட்சியினரே வருத்தப்படுகிறார்கள். அதோடு அன்புமணி இன்று வெளியிட்ட அறிக்கையில், […]

என்னாது திருமாவளவனும் இந்தி ஸ்கூல் நடத்துகிறாரா..? அடுத்த எக்ஸ்போஸ்

இரட்டை மொழி மட்டுமே போதும் என்று நடிகர் விஜய் குரல் கொடுத்ததும் அவர் நடத்தும் பள்ளியில் மும்மொழிக் கொள்கை இருக்கிறது என்று அண்ணாமலை ஆவணம் வெளியிட்டார். அதேபோன்று விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவனுக்கு எதிராகவும் புதிய ஆவணத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை, ‘’திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, திமுகவினரைப் போலவே இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில், அண்ணன் திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. சென்னை வேளச்சேரியில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் Blue Star […]

அண்ணாமலைக்கு இந்த அவமானம் தேவையா..? டிரெண்டிங்கில் கெட் அவுட் மோடி

தமிழ்நாட்டுக்கு நிதி தரமுடியாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணிக் கட்சித்தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அந்தக் கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘’தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதியை உத்தரப்பிரதேசம், குஜராத் மாநிலங்களுக்கு மத்திய அரசு பிரித்துக் கொடுத்துள்ளது. மும்மொழிக்கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்க முடியும் என மத்திய அமைச்சர் மிரட்டுகிறார். உங்க அப்பன் வீட்டு காச கேக்கல. பிச்சை கேக்கல. கடன் கேட்கவில்லை. தமிழ்நாடு மாணவர்களின் பெற்றோர் கட்டிய […]

விஜய் கட்சிக்கு நோஸ் கட். முதல் கூட்டணிக் கட்சி பல்டி

கூட்டணி ஆட்சிக்கு நாங்கள் ரெடி என்று விஜய் கொடுத்த அறிவிப்பினால், ஏகப்பட்ட கட்சிகள் படையெடுத்துவருவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. திருமாவளவனுக்கு போடப்பட்ட ஸ்கெட்ச் குறி தவறிய நிலையில், முதல் கூட்டணிக் கட்சியாக இணைந்த முஸ்தபாவும் திடீரென பின்வாங்கியிருப்பது, விஜய் ரசிகர்களை டென்ஷனாக்கியுள்ளது. நேற்றைய தினம் தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தஃபா விஜய் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை சந்தித்துப் பேசினார். இந்நிலையில், 2026ல் த.வெ.க உடன் இணைந்து தேர்தலை முஸ்லீம் லீக் சந்திக்கும் என்றும் இஸ்லாமியர்களை […]

கும்பமேளா அழுக்குத் தண்ணீரில் குளிக்காதீங்க… எச்சரிக்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா திருவிழாவையொட்டி ஆறு வாரங்களுக்கு, கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (வேத, புராணங்களில் கூறப்படும் நதி, பூமிக்கு அடியில் ஓடுவதாக நம்பப்படுகிறது) ஆகிய புனித நதிகளில் நீராடுவதற்கு இந்தியாவில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து சேர்கிறார்கள். இந்த நாட்களில் கும்பமேளாவின் போது புனித நதியில் நீராடுவது பாவங்களை நீக்குகிறது, ஆன்மாவை தூய்மைப்படுத்துகிறது, பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுதலை அடைய உதவுகிறது என்று நம்பி கூட்டம் கூட்டமாக வந்து குவிகிறார்கள். […]