News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

எக்மோர் மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு. திமுக எம்எல்ஏ புதிய அப்ரோச்..!

எக்மோர் மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு. திமுக எம்எல்ஏ புதிய அப்ரோச்..!   பெண்களுக்கு இலவச பஸ் பயணம், ,மகளிர் உரிமைத் தொகை ஆகிய இரண்டு ஸ்டாலின் திட்டங்களும் பட்டிதொட்டி மக்கள் வரையிலும் போய் சேர்ந்துவிட்டது. ஆனால், புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் தொடங்கி புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவது வரையிலும் ஏராளமான நலத்திட்டங்களை ஸ்டாலின் அறிவித்துக்கொண்டெ இருக்கிறார். இப்படி முதல்வர் ஸ்டாலின் அறிவிக்கும் திட்டங்கள் எல்லாமே தன்னுடைய எழும்பூர் தொகுதி மக்களுக்கு முழுமையாகத் தெரிந்திருக்கிறதா..? என்ன என்ன […]

ஈஷாவில் அமித் ஷாவுக்கு தேர்தல் பிரசாரம்… வேலுமணியுடன் கூட்டணிக்கு அச்சாரம்..?

கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ் அவரது ஈஷா யோகா மையத்தில் ஒவ்வோர் ஆண்டும் மகா சிவராத்திரி விழாவில் பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார். இந்திய ஜனாதிபதி, பிரதமர் மோடி என்று திட்டமிட்டு மிகப்பெரிய விஐபிகளை அழைத்துவ்ருவது வழக்கம். அந்த வகையில் இந்த முறை ஸ்பெஷல் வி.ஐ.பி.யாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். அவர்களுடன் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் சிவகுமார், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க. முக்கியப் புள்ளி எஸ்.பி வேலுமணி […]

பன்னீருக்கு அண்ணனாம் அண்ணாமலை. இப்படி ஒரு கொத்தடிமையா..?

மிஸ்டர் பணிவு என்று அறியப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பணிவானவர் மட்டும் இல்லை அதற்கும் கீழே கொத்தடிமை மனப்பான்மை உள்ளவர் என்பதை தொலைக்காட்சி பேட்டியில் அவர் ஒப்புக்கொண்டதைக் கண்டு, அவரது ஆதரவாளர்களே அதிர்ச்சி அடைகிறார்கள். தனியார் தொலைக்காட்சிக்கு பன்னீர்செல்வம் கொடுத்த பேட்டியின் மூலம் அவருக்கும் தலைமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உறுதிபடுத்தியிருக்கிறார். இப்போது பாஜக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கு 41 வயது ஆகிறது. அதேநேரம், ஓ.பி.எஸ்ஸின் வயது 74. ஆனால் பேட்டியில் அண்ணன் அண்ணாமலை என்று சொல்கிறார். […]

முதல்வரும் விஜய் பிரதமரும் விஜய்… மாநாட்டில் பிரசாந்த் கிஷோருக்கு மாஸ்…

மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நடந்துவருகிறது. இந்த மாநாட்டில் முதன்முறையாக மேடை ஏறிய பிரசாந்த் கிஷோருக்கு மாஸ் வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு, அடுத்த ஆண்டு முதல்வர் ஆவார், அடுத்து இந்தியாவுக்கு பிரதமர் ஆவார் என்று அவரது ரசிகர்கள் தெறிக்க விடுகிறார்கள். இன்றைய கூட்டத்தில் கட்சித்தலைவர் விஜய், பிரசாந்த் கிஷோர், தேர்தல் பிரச்சார பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அழைப்பிதழ் கியில் வைத்திருந்த சுமார் […]

அரசியலுக்கு வருகிறாரா மிதுன்..? பா.ம.க. கல்யாணத்தில் ஆஜர்

எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் இதுவரை வெளிப்படையாக அரசியல் நிகழ்ச்சிகள் எதிலும் பங்கெடுப்பது இல்லை. திரைக்குப் பின்னே நின்று எடப்பாடி பழனிசாமியின் அரசியலை கட்டமைத்து வருகிறார். இந்த நிலையில் ஜி.கே.மணி  இல்லத் திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமிக்குப் பதிலாக அவர் கலந்துகொண்டிருப்பது அரசியல் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தனது இல்லத் திருமண விழாவையொட்டி எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பத்திகை கொடுத்தார் ஜி.கே.மணி. இதையொட்டியே அன்புமணிக்கு எம்.பி. சீட் கேட்பதாக ஒரு பேச்சு கிளம்பியது. இந்த விழாவுக்கு […]

பிசிறு காளியம்மாளுக்கு தொடர்ந்து மிரட்டல் ..? சீமான் வீட்டுக்குப் பெட்ரோல் குண்டு

தன்னுடைய கட்சியில் இலையுதிர் காலம் என்று சீமானே ஒப்புக்கொள்ளும் அளவுக்கு அவரது கட்சி நிலவரம் இருந்துவருகிறது. நீண்ட காலமாக அமைதி காத்துவந்த காளியம்மாள் கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார். இன்றைய தினம் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பாவேந்தன் கட்சியில் இருந்து வெளியேறியிருக்கிறார். இந்நிலையில் காளியம்மாளை கன்னாபின்னாவென்று விமர்சனம் செய்துவருகிறார்கள் நாம் தமிழர் தம்பிகள். இந்நிலையில் சீமான் வீட்டுக்குப் பெட்ரோல் குண்டு போட முயன்றதாக சிலர் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது. கட்சியில் இருந்து வெளியேறி இருக்கும் காளியம்மாள் பற்றி நாம் […]

விஜய் கட்சியில் நாளை இணையப் போவது யார்..? நட்சத்திர விடுதி சொகுசு விழாவால் ரசிகர்கள் ஏமாற்றம்

த.வெ.க.வின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழாவில் நடிகர் விஜய்யை மீண்டும் நேரில் சந்திக்கலாம் என்று ஆசைப்பட்ட ரசிகர்கள் ஏமாந்து போயிருக்கிறார்கள். சமீபத்தில் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்பது தெரியவந்துள்ளது. இந்த விழாவில் ஒரு முக்கியப் பிரபலம் கட்சியில் சேர்வதற்கு விருப்பம் காட்டியதாகவும், அதற்கு விஜய் ஒப்புதல் வழங்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் த.வெ.க.வின் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் நடிகர் விஜய் தீவிரம் காட்டி வருகிறார். அதன் […]

மோடி ஆதரவாளர்களுக்கு தரமான பரிசுகள். இந்தியாவுக்கு நல்ல காலமா..?

ரிசர்வ் வங்கி ஆளுநராக 6 ஆண்டுகள் பதவி வகித்த சக்திகாந்த தாஸ் இந்திய பிரதமர் மோதியின் 2வது முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள செய்தி நடுநிலை அரசியல் விமர்சகர்களை அதிர வைத்திருக்கிறது. அதேபோல் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் நியமனமும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது. நாட்டின் முக்கியமான பொறுப்புகளில் இருப்பவர்கல் ஆளும் கட்சிக்கு ஆதரவாக நடந்துகொண்டால், ஓய்வு காலத்திற்குப் பிறகு அவர்களுக்கு உயர் பதவி கொடுத்து அழகு பார்ப்பது பா.ஜ.க.வின் அஜெண்டாவாக இருந்துவருகிறது. அப்படித் தான் ராமர் கோயில் விவகாரத்தில் […]

காளியம்மாளுக்கு நாம் தமிழரில் பட்டிமன்றம். உறுதியான முடிவில் சீமான்

நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் வெளியேறலாம் என்பதை நேரடியாகவே மீடியாவிடம் தெரியப்படுத்திவிட்டார் சீமான். ஆனாலும், காளியம்மாள் இன்னமும் எந்த முடிவும் அறிவிக்காமல் அமைதி காக்கிறார். இந்த நிலையில் சீமான் நிலைப்பாடுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கட்சிக்குள் எக்கச்சக்க முட்டல் மோதல் நடக்கிறது. காளியம்மாளுக்கு ஆதரவாகப் பேசுபவர்கள், ‘’காளியம்மாள் கட்சியில் ஏதும் தவறு செய்திருந்தால் வள்ளுவம் சொல்வது போல நேரடியாகக் கடுமையாகச் சாடியிருக்கலாம்.  காளியம்மாளால் சிக்கல் ஏதும் உண்டாகியிருந்தாலோ, அல்லது காளியம்மாளைப்பற்றி துரைமுருகனிடம் பேசியதால் சிக்கல் எழுந்திருந்தாலோ அதனைத் […]

ஆண்டவருக்கு இந்த அவமானம் தேவையா? விஜய் ரசிகர்கள் செம கலாய்

  தனிக் கட்சி தொடங்கி அதை கரையேற்ற முடியாமல் தி.மு.க. ஆதரவாளராக மாறியிருப்பவர் நடிகர் கமல்ஹாசன். அவருக்கு இந்த ஆண்டு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கப்படுவது உறுதியாகியிருக்கிறது. இந்த நிலையில் சினிமா ரசிகர்கள் குறித்து அவர் பேசிய பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8ம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய கமல்ஹாசன், ‘’நான் தன்னம்பிக்கையுடன் உயிர்த்து இருக்க தமிழ்நாடு மக்கள் தான் காரணம். தமிழே என்று நான் […]