நடிகர் விஜய்க்கு கடைசி வாய்ப்பு… சீமானை ஜெயிக்க முடியுமா?

கூட்டணி ஆட்சி என்று அழைப்பு கொடுத்ததும் தி.மு.க. கூட்டணியில் இருந்து திருமாவளவனும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்கள் பக்கம் தாவி வந்துவிடும் என்று கணக்கு போட்டார் நடிகர் விஜய். அவரது கணக்கு தப்புக்கணக்கு ஆனது. அதோடு, இப்போது ஒரே ஒரு கட்சி மட்டுமே அவரது கூட்டணிக்கு வர வாய்ப்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. தி.மு.க. கூட்டணி இப்போது மிகவும் வலிமையாக உள்ளது. எனவே, அங்கிருந்து யாரும் வெளியே வரப்போவதில்லை என்பது உறுதி. அதேநேரத்தில் திமுகவை வீழ்த்த எடப்பாடி பழனிசாமியும் பாஜகவுடன் […]
கச்சத் தீவை மீட்டு வருவாரா மோடி..? இலங்கை பயண எதிர்பார்ப்புகள்

மூன்று நாள் பயணமாக இன்று இலங்கை செல்லும் பிரதமர் மோடி 6 ஆம் தேதி வரை அங்கு இருக்கிறார். கச்சத்தீவு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.வினர் பேசியதை அடுத்து, அதனை மீட்பதற்கு வாய்ப்பு உண்டா என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கைக்குச் சென்ற நரேந்திரமோடி இது குறித்து, ‘’கொழும்புக்கு வருகை தந்துள்ளேன். விமான நிலையத்தில் என்னை வரவேற்ற அமைச்சர்கள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் அனைவருக்கும் எனது நன்றி. இலங்கையில் பங்கேற்க இருக்கும் நிகழ்வுகள் குறித்து ஆவலுடன் உள்ளேன். மழையிலும் என்னை […]
அண்ணாமலை இமயமலை பயணம் ஏன்? வார் ரூம் அலப்பறைகள்

தமிழக பா.ஜ.க.வில் குழப்பம் வரும் நேரத்தில் எல்லாம் அண்ணாமலையை பண்டல் கட்டி எங்கேனும் அனுப்பிவைப்பதை டெல்லி பா.ஜ.க. வழக்கமாக வைத்திருக்கிறது. லண்டனில் 6 மாதம் படிப்பு முடித்த அண்ணாமலை அடுத்து இமயமலைக்குச் செல்கிறாராம். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய சந்தித்த அண்ணாமலை, ’’தமிழக பாஜக தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை. தமிழக புதிய தலைவர் பதவிக்காக நான் யாரையும் கை காட்டவில்லை. பாஜக தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிடுவதில்லை. சேர்ந்தே தேர்வு செய்வோம்’’ என தெரிவித்திருந்தார். இதையடுத்து […]
நீட் தேர்வுக்கு மீண்டும் ஒரு மாணவி பலி… தடுத்து நிறுத்துங்க உதயநிதி

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பெரிய முத்தையம்பட்டியைச் சேர்ந்த சத்யா என்ற மாணவி நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாது என்ற அச்சம் காரணமாக நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே கொங்கணாபுரம் பெரியமுத்தையம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (43) – சந்திரா தம்பதியினர். செல்வராஜ் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சத்யா(18) என்ற மகள், துளசிநாத் என்ற மகன் உள்ளனர். கடந்த ஆண்டு […]
த.வெ.க. கட்சியினர் வக்புக்கு வித்தியாசப் போராட்டம்..? விஜய் இப்படி ஏமாத்திட்டாரே…

வக்பு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் பனையூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. . இது குறித்துப் பேசும் தவெகவினர், ‘’இந்த சட்டம் இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளையும் , இந்திய இறையாண்மையையும் கேள்விக்குறியாக்குகிறது. சுருக்கமாக அயோத்தி ராமர் கோவிலில் ஒரு இஸ்லாமியரை அர்ச்சராக பணியமர்த்த வேண்டும் என்று சொன்னால் என்ன நடக்குமோ அது தான். இதை […]
அன்புமணி, ஜி.கே.வாசன், இளையராஜா முஸ்லீம் துரோகிகள்..? வக்பு சட்டம் மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்

வக்பு வாரிய சட்டத்திருத்தம் மக்களவையில் 288 – 232 என்ற வாக்கு வித்தியாசத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து நேற்று வக்பு வாரிய மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அங்கேயும் எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த விவாதம் கிட்டதட்ட 13 மணிநேரம் தொடர்ந்து நடந்தது. இரவு 2 மணிக்கு மேல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 128 – 95 வாக்கு வித்தியாசத்தில் மாநிலங்களவையிலும் வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மக்களவை, மாநிலங்களவை என இரண்டிலும் நிறைவேற்றப்பட்ட மசோதா […]
மனசாட்சி இல்லாமக் கொன்னுட்டாங்களே… ஆணவக்கொலைக்கு தனிச்சட்டம் எப்போது?

எத்தனை அன்பு இருந்தாலும், எத்தனை அழகு இருந்தாலும் ஜாதி என்று வரும்போது, ஜாதிக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்த ஜாதி வெறி தாழ்த்தப்பட்ட மக்களிடமும் அழிக்க முடியாத அளவு நிரம்பிக்கிடக்கிறது என்பதற்கு உதாரணமாக மாறியிருக்கிறார் வித்யா. தன்னுடைய சொந்த தங்கையை ஜாதி வெறிக்காக அண்ணனும் அப்பாவும் சேர்ந்து கொலை செய்திருக்கிறார்கள். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள பருவாய் கிராமத்தைச் சேர்ந்த வித்யா கோவை அரசுக் கல்லூரியில் முதுகலை முதலாமாண்டு படித்து வந்தார். இவரும், திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி […]
அமித்ஷாவை சந்திக்கிறாரா சைதை துரைசாமி..? அ.தி.மு.க.வில் களேபரம்

எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக இருக்கிறார் என்றாலும், அவரது அனுமதியின்றி கட்சியில் என்னென்னமோ நடக்கின்றன. செங்கோட்டையன், தம்பிதுரையை அடுத்து முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. முன்னாள் மேயர் சைதை துரைசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘’புரட்சித்தலைவர் மறைவுக்குப் பிறகு ஜா. அணி – ஜெ. அணி இணைப்புக்கும் புரட்சித்தலைவி மறைவுக்குப் பிறகு சகோதரர்கள் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் இணைப்புக்கும் என எல்லா காலகட்டத்திலும் அண்ணா […]
அதிகாலையில் வக்பு மசோதா நிறைவேற்றம்… வெடிக்கிறது முஸ்லீம் போராட்டம்?

இந்தியாவிலேயே அதிகமான சொத்து வக்பு வாரியத்திடம் இருக்கிறது என்பதால் அவற்றை நிர்வகிக்க சட்டத்திருத்தம் கொண்டுவந்துள்ளது பா.ஜ.க. அரசு. மக்களவையில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விடிய விடிய நடந்த காரசார விவாதத்துக்கு பிறகு வக்பு திருத்த மசோதா நிறைவேறியது. இதற்கு ஆதரவாக 288 பேரும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர். இந்தியாவில், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளூர் மட்டத்தில் வக்பு வாரியங்கள் உள்ளன. அவை வக்பு சொத்துக்களை நிர்வகிக்கின்றன. வக்பு வாரியத்திடம் மொத்தம் 9.4 லட்சம் ஏக்கர் […]
அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி… அசைந்து கொடுக்குமா டெல்லி..?

அண்ணா தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 10 தொகுதிகளாவது வென்றிருக்கலாம். பெரும்பான்மை கிடைத்திருக்கும். அந்த வாய்ப்பை கெடுத்தவர் அண்ணாமலை என்று கூறப்படுவதன் அடிப்படையில் புதிய தலைவர் மாற்றம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதனாலே அண்ணாமலை இப்போது, ‘பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை’ என்று தத்துவம் பேசி வருகிறார். புதிய பா.ஜ.க. மாநிலத் தலைவர் அறிவிப்பு வரும் 10ம் தேதிக்குள் அறிவிக்கப்பட்டுவிடும் என்று சொல்லப்படுவது அண்ணாமலையின் ஆதரவாளர்களை கடும் ஆத்திரத்துக்கு உள்ளாக்கியுள்ளது. அண்ணமலை இல்லையென்றால் தமிழ்நாட்டில் […]

