News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கயல் சைத்ரா ரெட்டிக்கு என்ன ஆச்சு?

டிஆர்பி ரேட்டிங்கில் முதல் மூன்று இடங்களை தொடர்ந்து பிடித்து வருவது சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல்தான். அதில் கயல் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சைத்ராரெட்டி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கியுள்ளார். சீரியலில் ஹோம்லியாக காட்சியளிக்கும் இவர், இணையத்தில் மட்டும் தனது தாராளமான புகைப்படங்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலைக்கு பிரதமர் பதவியா… உள்துறை அமைச்சரா..? வார் ரூம் அலப்பறைகள்

அண்ணாமலையின் திறமையைப் பாராட்டி தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என்று மேடையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை அடுத்து, ‘அண்ணாமலைக்கு பிரதமர் பதவி அல்லது உள்துறை அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பிருக்கிறது’ என்று அவரது ஆதரவாளர்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து பேசும் அண்ணாமலை ஆதரவாளர்கள், ‘’தமிழகத்தில் திமுக விற்கு சாவுமணி அடிக்கவேண்டும் என்றால் வலுவான கூட்டணி தேவை. அதனாலே நம் தலைவர் அண்ணாமலையை மாற்றியிருக்கிறார்கள். அண்ணாமலை மாநில தலைவராகத் தொடர்ந்தால் கடுமையான பணிச்சுமையை […]

எடப்பாடி பழனிசாமிக்கு கட்டாயக் கல்யாணம்..? அண்ணாமலையை தூக்கிய ராஜதந்திரம்

அமித்ஷா முன்னிலையில் எடப்பாடி பழனிசாமியுடன் தேர்தல் கூட்டணிக்கு அஸ்திவாரம் போடப்பட்டுவிட்டது. அதோடு எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தல் கூட்டணி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேநேரம், கூட்டணி ஆட்சி அமையும் என்றும் அமித்ஷா கூறியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமியின் இஷ்டம் இல்லாமல் நடத்தப்பட்ட கட்டாயக் கல்யாணம் இது என்று எதிர்க்கட்சியினர் கிண்டல் செய்கிறார்கள். அதேநேரம் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், ‘12 தேர்தலுக்குப் பிறகு எடப்பாடிக்கு கிடைச்ச மாபெரும் வெற்றி. நாங்க நினைச்ச மாதிரி அண்ணாமலையை பதவியில் இருந்து தூக்கியாச்சு. பன்னீர்செல்வம், […]

சேலையில் இவ்வளவு கவர்ச்சியா? இணையத்தை கலக்கும் தர்ஷா குப்தா!

பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டிருந்த தர்ஷா குப்தா, பிக்பாஸ்8 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மேலும் ரசிகர்கள் மத்தியில் ஈர்க்கப்பட்டு வருகிறார். சீரியல்களில் குடும்பப்பாங்காக தெரிந்த இவர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவர்ச்சி உடைகளிலேயே காணப்படுகிறார். மேலும் அடிக்கடி இது குறித்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் இம்முறை சேலையில் கூட தன்னால் கவர்ச்சி காட்ட முடியும் என்று இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறார் தர்ஷாகுப்தா.

அமித்ஷா தமிழக வருகை அட்டர் ஃப்ளாப்..? நயினாருக்கு நல்ல வாய்ப்பு

சென்னை வந்திருக்கும் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து கூட்டணியை உறுதி செய்வார் என்று சொல்லப்பட்டு வந்தது. அதனாலே அமித்ஷாவை சந்திக்கக் காத்திருந்த ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் போன்றோருடன் சந்திப்பு நடக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி சந்திப்பு இல்லை என்றதும் தோல்வி முகத்துடன் திரும்பிப் போகிறார் அமித்ஷா. இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரனை தேர்வு செய்து நாளை அறிவிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. தமிழக பா.ஜ.க. தலைவர் பதவிக்குத் தேர்தல் நடப்பதாகவும் 10 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும் […]

கேரளாவை மேலும் அழகாக்கிய அமலாபால்!

நடிகை அமலாபாலுக்கு கடந்த வருடம்தான் அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பராமரிப்பதற்காக சினிமாவை விட்டு விலகியிருக்கும் அமலாபால், குறைந்த பட்சம் தனது குடும்ப புகைப்படங்களையும் தன்னுடைய கிளாமர் புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கேரளாவில் உள்ள காசர்கோடு என்ற அழகிய இடத்திற்கு சென்ற அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கண்களை கவரும் இப்புகைப்படங்கள் கேரளாவை மேலும் அழகாக்கியுள்ளது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ராமதாஸ் உயிருக்கு அன்புமணியால் ஆபத்து..? பா.ம.க.வுக்குள் கடுமையான மல்லுக்கட்டு

வரும் மே 11ம் நாள் மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கு பா.ம.க.வினர் உற்சாகமாகத் தயாராகிவந்த நிலையில், கட்சிக்குள் பூகம்பம் வெடித்துள்ளது. நான் உயிரோடு இருக்கும் வரையிலும் நானே கட்சித் தலைவர், அன்புமணி செயல் தலைவர் மட்டுமே அதிரடி காட்டி பா.ம.க.வினரை கதற விட்டிருக்கிறார். இந்த அறிக்கையை அடுத்து பா.ம.க. பொருளாளர் திலகபாமா உடனடியாக அன்புமணிக்கு ஆதரவாக அறிக்கை விட்டார். ராமதாஸை சந்திக்க வந்த திலகபாமா விரட்டியடிக்கப்பட்டார். இதையடுத்தி வழக்கறிஞர் பாலு, […]

பொன்முடியின் சைவம், வைணவம் பாலியல் கோடு வேர்டு … கட்சிப் பதவி அவுட்… அமைச்சர் பதவி..?

சைவம், வைணவம் என்பது தமிழர்களின் சமயப் பண்பாட்டுப் பிரிவுகள். அதனை பாலியல் தொழிலாளியின் கோட் வேர்டு என்று கலகலப்பாகப் பேசினார். இந்த விவகாரத்தில் இந்துக்களை மிகக் கேவலமாக இழிவுபடுத்திய அமைச்சரை பதவியில் இருந்து எடுக்க வேண்டும் என்று கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. பொதுமேடையில் பேசிய அமைச்சர் பொன்முடி, ‘’ஒரு நண்பர் விலைமாதுவிடம் (அமைச்சர் பொன்முடியே அந்த நண்பர் என்று சொல்லப்படுவது வேறு விவகாரம்) போனபோது, ‘நீங்க சைவமா இல்ல வைணவமா?’ என்று கேட்டிருக்கிறார். அதன் அர்த்தம் புரியவில்லை […]

அன்புமணிக்கு ஆப்பு வைத்த ராமதாஸ்…? அமித்ஷா சந்திப்புக்குத் தடை

வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து டாக்டர் ராமதாஸ்க்கும் அன்புமணிக்கும் கடுமையான கருத்துவேறுபாடு நிலவுகிறது. இந்த நிலையில், ’பாமக தலைவர் பொறுப்பையும் நானே எடுத்துக்கொள்கிறேன். அன்புமணியை செயல்தலைவராக நியமனம் செய்கிறேன்’ என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், “ராமதாஸ் எனும் நான் நிறுவனர் என்ற அடிப்படையில் தலைவர் பொறுப்பையும் நானே எடுத்துக்கொள்கிறேன். அன்புமணியை செயல்தலைவராக நியமனம் செய்கிறேன். இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ள பாமக […]

சீமான், விஜய் என்ன செய்யப்போறாங்க..? பரந்தூர் சவால் ஆரம்பம்

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படுவதற்கான இறுதி திட்ட அனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து திட்டப்பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு வரும் 2028 முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பரந்தூரில் விமானநிலையம் அமைப்பதற்கு விட மாட்டோம் என்று போராடிய சீமான், விஜய் என்ன செய்யப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு வரும் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை என்பதால் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் கட்டலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு 29 […]