News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அடங்காத அண்ணாமலை ஆர்மி… போஸ்டரில் படம் போடாத நயினாருக்கு கண்டனம்

திமுகவுக்கு பென் டீம் போன்று பாஜகவுக்கு மென் டீம் தொடங்கியிருக்கிறார் புதிய பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன். அதோடு அதிமுகவை விமர்சனம் செய்யும் பா.ஜ.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிப்பு செய்திருக்கிறார். இந்த நிலையில் நயினாரின் ஆதரவாளர்கள் அண்ணாமலை போட்டோ போட்டாமல் பிளக்ஸ் அடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த விவகாரம் அண்ணாமலை ஆதரவாளர்களை கடும் கோபத்துக்கு ஆளாக்கியுள்ளது. இது குறித்து பேசும் அண்ணாமலை ஆதரவாளர்கள், ’’தலைமை மாற்றத்திற்குப் பிறகு ஏற்படும் பிரச்சனைகளுக்கு யார் காரணம்? கடந்த மூன்று […]

அன்புமணி, வைகோ எம்.பி. பதவி அவுட்..? நடிகைக்கு எம்.பி. சீட்..?

வரும் ஜூன் 19ம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் யார், யாருக்கு சீட் என்ற ஹேஸ்யங்கள் இறக்கை கட்டிப் பறக்கின்றன. கமல்ஹாசன் திமுக பக்கத்திலிருந்தும் கெளதமி அ.தி.மு.க. பக்கத்திலிருந்தும் டெல்லி போகிறார்கள் என்பது ரொம்பவே பரபரப்பாகிறது. தமிழகத்தில் 18 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடங்கள் உள்ளன. இதில், 6 எம்.பி.க்களுக்கான இடங்களுக்கு 2.5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அதன்படி, மதிமுக பொதுச்செயலர் வைகோ, அன்புமணி ராமதாஸ், […]

போலீசாருக்கு சந்தோஷ காலம் தொடங்கியாச்சு… மகிழ்ச்சிக்கு டிஜிபி திட்டம்

போலீசாரைக் கண்டால் மக்களுக்குப் பயம். அதேநேரம், யாரெல்லாம் குற்றவாளி என்று புரியாமல் எல்லோரையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் வேலை போலீசாருக்கு இருக்கிறது. அதனால் போலீசாரால் மற்ற பணியாளர்கள் போன்று மகிழ்ச்சியாக வாழ இயலவில்லை. இந்த குறையைத் தீர்த்துவைக்கும் வகையில் மகிழ்ச்சி திட்டத்தை போலீஸ் டிஜிபி சங்கர் ஜீவால் தொடங்கி வைத்திருக்கிறார்.  தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) திரு. சங்கர் ஜீவால் அவர்கள், போலீசாருக்கான மனநல பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில் ‘மகிழ்ச்சி’ திட்டம் மற்றும் […]

விஜய் கட்சிக்கு புதிய அதிகாரி… புஸ்ஸி ஆனந்த் பதவிக்கு ஆபத்து

விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் சமீபத்தில் பதவியில் இருந்து விலகியிருக்கும் அருண் ராஜ் ஐ.ஆர்.எஸ். இணைய இருக்கிறார். இதையடுத்து புஸ்ஸி ஆனந்த் அல்லது ஆதவ் அர்ஜூனா பதவிக்குச் சிக்கல் என தெரிகிறது. விஜய் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்தே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு அருண்ராஜ் ஆலோசனை வழங்கி வருவதாக கூறப்பட்டு வந்தது. இப்போது அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதால், விரைவில் தவெக கட்சியின் தலைமையில் முக்கிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட உள்ளது என தகவல். […]

விஜய் எலுமிச்சம்பழத்தைத் தூக்கிட்டாங்க…. திமுகவில் வைஷ்ணவி

சினிமா நகைச்சுவையில் நடிகர் சிங்கமுத்து, ‘தூக்கட்டா…. தூக்கட்டா’ என்று கூறிவிட்டு கடைசியில் எலுமிச்சம்பழத்தைத் தூக்குவது போன்று, விஜய் கட்சியில் இருந்து சோஷியல் மீடியா பிரபலம் வைஷ்ணவியை திமுகவில் இணைத்துவிட்டு ஜம்பம் காட்டி வருகிறார்கள். விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள் இணைந்த வண்ணம் உள்ளனர். அதே சமயம் பல இடங்களில் பதவி தரவில்லை என்று குற்றம்சாட்டியும், நிர்வாகிகள் ஒரு தலைபட்சமாக நடப்பதாகவும் விமர்சித்தும் கட்சியில் இருந்து வெளியேறினர். கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த  […]

நயினாரின் வார் ரூம் வார்னிங்… அண்ணாமலை அமைதிக்குப் பின் அணுகுண்டு

தமிழக பா.ஜ.க. தலைவராக பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக அண்ணாமலைக்கு எதிராக தில்லு ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார் நயினார் நாகேந்திரன். இதன் பிறகும் அண்ணாமலை வார் ரூம் செயல்பாடுகள் குறையவில்லை என்றாலும் அண்ணாமலை மட்டும் கப்சிப் என அமைதியாக இருக்கிறார். இதையடுத்து மீண்டும் உருவாகிறது சர்ச்சை புயல். முன்னதாக தமிழிசை செளந்தரராஜன் பொதுவெளியில் அண்ணாமலையின் வார் ரூம் செயல்பாடுகளைக் கண்டித்தார். அதற்கு அமித்ஷாவிடம் இருந்து எதிர்வினை வந்தது. ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. பாஜகவின் சமூக ஊடகப் பிரிவு […]

டாஸ்மாக் செந்தில் பாலாஜிக்கு செம குஷி…. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை வரம்பு மீறி செயல்பட்டு வருகிறது என அமலாக்கத்துறைக்கு என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ள விவகாரம் திமுகவினரை குஷிப்படுத்தியிருக்கிறது. செந்தில் பாலாஜியைக் காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை திமுகவுக்கு வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்ததாக கூறப்படும் பெரிய அளவிலான முறைகேடுகளைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை  டாஸ்மாக் தலைமையகம் உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனை நடத்தியது. இந்த சோதனை முடிவில், ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இந்த  சோதனையை எதிர்த்து டாஸ்மாக் […]

மதுரையில் சட்டவிரோத குவாரிகள்..? தமிழக எம்.பி. புகாருக்கும் மதிப்பு இல்லை

தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சு.வெங்கடேசனே மதுரையில் சட்டவிரோதமாக இயங்கும் கல் குவாரி குறித்து வெளிப்படையாக புகார் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தான் ஆச்சர்யம். இது குறித்து மதுரை எம்.பி. வெங்கடேசன், மதுரை- வாடிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட கொண்டையம்பட்டி கிராமத்தில் சுற்றுச்சூழல் மற்றும் சிறு கனிம சுரங்க விதிகளுக்குப் புறம்பாகவும், அனுமதியே இல்லாமலும் பாறைகளை வெட்டியெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாகவும் இங்கு குவாரிப் பணிகள் நடப்பதால் சுற்றுச்சூழலுக்கும், […]

சீமானுக்கு இருக்கும் அக்கறை யாருக்கும் இல்லையே… அச்சத்தில் அகதிகள்

இந்தியா ஒன்றும் சத்திரம் இல்லை என்று வெளிநாட்டு அகதிகளுக்கு கெட் அவுட் கூறியிருக்கும் உச்சநீதிமன்றத்துக்கு எதிராக அத்தனை கட்சியினரும் அமைதியாக இருக்கையில், சீமான் மட்டுமே உரக்கக் குரல் கொடுத்திருக்கிறார். சீமான் அறிக்கையில், ‘’நாம் தமிழர் கட்சி இனவெறி சிங்கள ஆட்சியாளர்களால் ஈழத்தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட கொடுந்தாக்குதலிருந்து தப்பி, உயிர்வாழ தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்து, பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு குடியுரிமை வழங்க உத்தரவிடக்கோரிய மனுவினை இந்திய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ‘இந்திய நாட்டில் குடியுரிமை கேட்க […]

மாப்பிள்ளையின் ஆள் ஆதவ் விஜய் டீமில் ஸ்லீப்பர் செல்..? கொதிக்கும் அதிமுக

நடிகர் விஜய் கட்சி சார்பில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி பேசியிருக்கிறார் ஆதவ் அர்ஜூனா. இதில் கூட்டணி பற்றி ஆதவ் பேசிய விவகாரத்துக்கு அதிமுக கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறது. விஜய்யை ஆதவ் அர்ஜுனா தவறாக வழி நடத்துவதாக அவரது கட்சியினரும் குற்றம் சாட்டுகிறார்கள். இதுகுறித்து பேசும் த.வெ.க.வினர், ‘’வஃக்ப் போர்டு மேட்டர் குறித்து பேசுவதற்கு மட்டுமே ஆதவ் அர்ஜூனா அனுப்பிவைக்கப்பட்டார். தி.மு.க.வை எதிர்த்து கடுமையான கருத்து சொல்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவர் அதிமுக கூட்டணி குறித்து […]