News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு போட்டியாக களம் இறங்கும் ஹெச்.ராஜா..? நடிப்பில் டெபாசிட் வாங்குவாரா..?

சினிமாவில் நடித்து அதன் பிறகு அரசியலுக்கு வரும் நடிகர்கள் மத்தியில், அரசியலில் இருந்து நடிப்புக்குப் போகிறார் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா. சினிமாவில் ரஜினியை ஓரங்கட்டிவிட்டு சூப்பர் ஸ்டாராக மாறுவாரா என்று பாஜகவினர் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இன்று ஹெச்.ராஜா வெளியிட்டிருக்கும் பதிவில், ‘’கிடுகு திரைப்பட இயக்குனர் சகோதரர் வீரமுருகன்  இயக்கத்தில் நான் நடித்து வெளிவர இருக்கும் கந்தன் மலை திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் போஸ்டரை நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் […]

விஜய்யை சீண்டும் அஜித்… வெளுத்தெடுக்கும் ரசிகர்கள்

கூலி விழாவில் ரஜினி, அகரம் விழாவில் சூர்யா ஆகியோர் மறைமுகமாக நடிகர் விஜய்யை தாக்குதல் கொடுத்த நிலையில், தன்னுடைய 33 ஆண்டு திரையுலக வாழ்வுக்கு நன்றிக் கடிதம் எழுதியிருக்கும் அஜித் நேரடியாகவே விஜய்யை சீண்டியிருக்கிறார். அஜித் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘’உங்களது அன்பை என் சுயலாபத்திற்காகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்தமாட்டேன்’’ என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இது, விஜய்யை வம்புக்கு இழுக்கும் வேலை. அவர் ரசிகர்களை அரசியலுக்குப் பயன்படுத்துவதை வேண்டுமென்றே கிண்டல் செய்கிறார் என்று அவர்ரது ரசிகர்கள் பாய்ந்து பாய்ந்து […]

வைகோவின் நம்பிக்கை போயே போச்சு… விஜய் கட்சியில் மல்லை சத்யா..?

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தானாகவே வெளியேறுவார் என்று நினைத்த நிலையில், அவர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உட்கட்சி மோதலை உருவாக்கி வருகிறார். இந்த போராட்டத்தில் மல்லை சத்யா பேச்சு செம சூடு. மதிமுகவிலிருந்து மூத்த தலைவர்கள் பலரும் கட்சியில் இருந்து வெளியேறிய பின்னரும், அமைதியாக கட்சியில் பணியாற்றி வந்தார் மல்லை சத்யா. ஆனால் துரை வைகோ வந்ததும் இருவருக்கும் இடையே அதிகா மோதல் ஏற்பட்டது. இதனால் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என […]

வடமாநில வாக்காளர்களுக்கு சீமான் எச்சரிக்கை… கவின் வீட்டுக்கும் போயிட்டாரு

சாதிச் சங்க மாநாடுகளில் பங்கேற்று வீர உரையாற்றும் சீமான், ஆணவப்படுகொலையால் இறந்த கவின் வீட்டுக்கும் சென்று ஆறுதல் கூறியிருக்கிறார். அதோடு, வட மாநில வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. நாம் தமிழர் சீமான், ‘’பட்டப்பகலில் வெட்டி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் தம்பி கவின் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்று, தம்பியின் திருவுடலுக்கு மலர் வணக்கம் செலுத்தி, தம்பியை இழந்து ஆற்ற முடியா […]

அன்புமணிக்கு பாஜக ஆதரவு…. ராமதாஸ் சீக்ரெட் மூவ்..?

பாட்டாளி மக்கள் கட்சிக்குள் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் கடுமையான அதிகார யுத்தம் நடைபெற்று வருகிறது. இதில் பாஜக அன்புமணி பக்கம் இருக்கிறது என்பதைச் சொல்லும் வகையில் தேர்தல் ஆணையம் அன்புமணி முகவரிக்கு அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. இதையடுத்து ராமதாஸ் என்ன மூவ் எடுக்கப்போகிறார் என்பது பரபரப்பாக மாறியிருக்கிறது. கடந்த 2024 மக்களவைத் தேர்தல் சமயத்தில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பதில் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் பாமகவின் இளைஞர் சங்கத் தலைவராக தனது பேரன் […]

மோடியை பழி வாங்குகிறாரா டிரம்ப்…. டாலரின் மதிப்பு மளமள குறைவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இதற்குப் பின்னணியில், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 விழுக்காடு வரியுடன் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக அபராதத் தொகை வசூலிக்கப்படும் என டிரம்ப் அறிவிப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. உலக நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக […]

குஷ்புக்கு திடீர் மரியாதை…. அண்ணாமலை, சரத்துக்கு என்ன பதவி..?

பாஜகவில் இருக்கும் இடமே தெரியாமல் இருந்த குஷ்புக்கு திடீரென துணை தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அரசியல் அதிருப்தியில் இருந்த குஷ்பு எந்த நேரமும் விஜய் கட்சியில் சேர்ந்துவிடும் எண்ணத்தில் இருந்தார் என்றும், அதை தடுத்து நிறுத்தவே இந்த பதவி வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனாலே இந்த பதவி கொடுத்ததும் விஜய் குறித்து குஷ்புவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘’விஜய் இப்பொழுது தான் கட்சி ஆரம்பித்து இருக்கிறார். என் தம்பியான அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அரசியலில் இல்லாமல், வெளியில் […]

மோடிக்கு சவால் விட்ட ராகுல்… தண்ணீர் குடித்த பிரதமர்

மக்களவையில் நடந்த ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு நேரடி சவால் விடும் வகையில் பேசினார். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போரில் அமெரிக்கா தலையிடவில்லை என்று பிரதமர் மோடியால் சொல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பான விவாதத்தை விரிவாக காண்போம். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசுகையில், ” பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை இந்தியா துல்லியமாக தாக்கிய இந்த நடவடிக்கைக்கு முழுமையான ஆதரவை எங்களது கூட்டணியுடன் அமல்படுத்தினோம் என்றார். ஆனால், […]

பன்னீருக்கு ரோஷம் வந்திடுச்சு…. மோடிக்கு எதிர்ப்புக் குரல்

காலில் விழுந்து கெஞ்சாத குறையாக தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார் பன்னீர்செல்வம். என்னை விமானநிலையத்தில் சந்திக்க அனுமதி கொடுத்தால் அது ஒரு வரலாற்று சம்பவம் எனும் ரீதியில் மண்டியிட்டு விண்ணப்பம் அனுப்பியிருந்தார். ஆனால், அதனை மோடி ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அதிமுகவும் எடப்பாடி பழனிசாமியும் மட்டுமே தேவை என்பதில் உறுதியாக இருந்ததால், பன்னீரை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. இந்நிலையில் மோடி வந்து சென்ற பிறகு பன்னீரின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு […]

அன்வர் ராஜாவுக்குப் பதில் இளைய மன்னர்…. இபிஎஸ் கணக்கு பலிக்குமா?

சமீபத்தில் ராம்நாட் ஏரியாவைச் சேர்ந்த அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தார். இதற்கு பதிலடி தருவது போன்று முக்குலத்தோர் சமுதாயத்தின் ஒரு அடையாளமான ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி பெருந்தமிழர் எடப்பாடியார் முன்னிலையில் அதிமுகவில் இணைக்கப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் அதிமுகவுக்கு பூஸ்ட் ஆக அமையுமா என்பது கேள்வியாக மாறியிருக்கிறது. ஏனென்றால், அரசியல் தெரிந்த அனைவருக்கும் அன்வர் ராஜா யார் என்று தெரியும். ஏன் அதிமுகவில் இருக்கும் அனைவருக்கும் அன்வர் ராஜாவை தெரியும்.. ராமநாதபுரம் […]