அவதூறு வழக்கு! சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரான அண்ணாமலை!

எம்.பி. டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராக இன்று அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தி.மு.க. எம்.பி.யான டி.ஆர்.பாலுவின் பெயர் கடந்த ஏப்ரல் 14ம் தேதி அண்ணாமலை வெளியிட்ட தி.மு.க.வினரின் சொத்துப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அந்த பட்டியலில் டி.ஆர்.பாலுவின் பெயரை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் அவர் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்ததாக அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இதனால் அதிர்ச்சியான டி.ஆர்.பாலு, அண்ணாமலை மீது சென்னை சைதாப்பேட்டை பெருநகர 17வது நீதிமன்றத்தில் […]
ஹாட்ரிக் தங்கப்பதக்கம் வென்ற இந்தியா! வில்வித்தை ஆண்கள் பிரிவு சாதனை!

இன்று ஒரே நாளில் 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ள இந்தியா ஹாட்ரிக் சாதனை புரிந்துள்ளது. இன்று நடைபெற்ற வில்வித்தை பெண்கள் காம்பவுட் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணம், அதிதி கோபிசந்த் சுவாமி மற்றும் பர்னீத் கவுர் ஆகியோர் அடங்கிய அணி தங்கப்பதக்கத்தை வென்றது. தன்னை எதிர்த்து விளையாடிய சீன தைபேயை விட இந்திய அணி 230க்கு 229 என்ற கணக்கில் அபார சாதனயை படைத்துள்ளது. இன்றைய போட்டியான ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பாக […]
வெற்றி பெறுவதற்கு முன்பு ஓய்வு கிடையாது! அண்ணாமலை உறுதி!

தமிழ்நாடு பா.ஜ.க. பிரமுகர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, வெற்றி பெறும்வரை ஓய்வு என்பதே கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் இன்று (அக்.5) மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த 3ம் தேதி இக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென்று ஒத்தி வைக்கப்பட்டது. இன்று கூடிய கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை […]
பா.ஜ.க.வின் அடுத்த சறுக்கல்! பவன்கல்யாண் திடீர் விலகல்!

ஆந்திர அரசியலில் திடீர் திருப்பமாக பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்பட்ட பவன் கல்யாண் தற்போது திடீரென்று பா.ஜ.க.வில் இருந்து விலகுவாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஜனசேனா கட்சியின் தலைவரான பவன்கல்யாணுக்கு ஆந்திராவில் தனி மவுசு உள்ளது. பிரபல நடிகரான பவன்கல்யாண் ஆந்திராவில் ஜனசேனா கட்சியை தொடங்கி கடந்த தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டார். இதற்கிடையில் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை, பவன் கல்யாண் நேரில் […]
ஆசிய விளையாட்டு போட்டி! ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம்!

ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை குவித்து வரும் இந்தியா, ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை புரிந்துள்ளது. சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிக் கடந்த செப்டம்பர் 23ம் தேதி தொடங்கி தற்போது 12வது நாளாக நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடந்து வரும் இப்போட்டியில் இந்தியா தனது முந்தைய சாதனையான 70 பதக்கங்களை முறியடித்து 83 பதக்கங்களுடன் தொடர்ந்து சாதனைகளை புரிந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய போட்டியான ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் […]
தமிழ்நாடு பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம்! தாமதமாக வந்த அண்ணாமலை!

தமிழ்நாடு பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் தாமதமாக வந்தார். இருப்பினும் அதற்கு முன்பாகவே பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் தொடங்கப்பட்டது. பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க. முறித்துக் கொளவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின்னர் தெரிவித்தார். அண்ணாமலையின் அவதூறு பேச்சுகளே இந்த கூட்டணி முறிவுக்கு காரணம் என்று பா.ஜ.க. தலைமை கருதுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில் பா.ஜ.க. தலைமை அழைப்பின் பேரில் […]
போராட்டம் தற்காலிக வாபஸ்! இடை நிலை ஆசிரியர்கள் அறிவிப்பு!

தமிழக அரசின் அறிவிப்பை ஏற்று கடந்த 8 நாட்களாக போராடி வரும் இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். சென்னை டி.பி.ஐ.வளாகத்தில் கடந்த 8 நாட்களாக சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் மற்ற இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவு வாங்கிக் கொடுத்துவிட்டு […]
இன்று சம்பவம் உறுதி! ‘லியோ’ குறித்து அனிருத் கொடுத்த அப்டேட்!

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தின் டிரெய்லர் உறுதியாக வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக தயாராக இருக்கும் திரைப்படம் ‘லியோ’. இத்திரைப்படத்தில் மொத்த நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதால் பான் இந்தியா படமாக பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், […]
அமைச்சர் ரோஜாவை யாரும் பெண்ணாக பார்க்கவில்லை! தெலுங்குதேசம் பதிலடி!

அமைச்சர் ரோஜா ஆபாச படத்தில் நடித்ததாக எழுந்த சர்ச்சை குறித்து தெலுங்கு தேசம் கட்சியின் மாநில மகிளரணி தலைவி வாங்கலபடி அனிதா பதிலடி கொடுத்துள்ளார். ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா ஆபாச படத்தில் நடித்ததாக தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்தியநாராயணா மூர்த்தி சமூத்தில் பேசினார். இது சர்ச்சையான நிலையில் அமைச்சர் ரோஜா தனது திருப்பதி வீட்டில் செய்தியாளர்களுக்கு கண்ணீர் மல்க பேட்டி கொடுத்து பண்டாரு சத்தியநாராயணமூர்த்தி மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன் […]
ஆசிய விளையாட்டு போட்டி! வில்வித்தையில் தங்கம் வென்ற இந்தியா!

ஆசிய விளையாட்டு போட்டியில் வில்வித்தையில் இந்தியா தங்கப்பதக்கத்தை வென்று தங்கப்பட்டியலில் 19வது தங்கத்தை பெற்று பதக்க மழையில் நனைந்து வருகிறது. சீனாவின் ஹாங்கோவ் நகரில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டு போட்டியில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். தொடக்கத்தில் இருந்தே இந்திய விளையாட்டு வீரர்கள் சிறப்பாக விளையாடி தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்று தங்களுடைய முந்தைய சாதனைகளை முறியடித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று நடைபெற்ற வில்வித்தை பெண்கள் […]

