இரண்டாக உடைந்த ஆற்றுப்பாலம்! குஜராத்தில் என்ன நடந்தது?

ஜராத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பைக் மற்றும் லாரியில் சென்ற 10 பேர் துரிதமாக மீட்கப்பட்டதால் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டது. குஜராத் மாநிலம் சுரேந்திரநாத் மாவட்டம் வஸ்தாதி பகுதியில் 40 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த ஆற்றுப்பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பாலத்தை பயன்படுத்தி தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவது வழக்கம். அதேபோல் நேற்று மாலையும் இந்த பாலத்தில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து சென்றது. அப்போது திடீரென்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பாலம் இடிந்து […]
முதலமைச்சருடன் அமைச்சர்கள் திடீர் ஆலோசனை! முக்கிய பின்னணி!

மின் கட்டண உயர்வை கண்டித்து தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் எதிரொலியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர். மின் கட்டண உயர்வால் ஏற்படும் பாதிப்பை தமிழக அரசுக்கு தெரிவிக்கும் வகையில் சிறு மற்றும் குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி சென்னை, திருப்பூர், கோவை, நாமக்கல், ஈரோடு, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் சிறு, […]
உத்தரகாண்டில் அதிகாலையில் நிலநடுக்கம்! தெருக்களில் தஞ்சமடைந்த மக்கள்!

வங்கக்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இன்று அதிகாலை உத்தரகாண்ட் மாநிலத்தில் உணரப்பட்டதால் அலறியடித்து ஓடிய பொதுமக்கள் தெருக்களில் தஞ்சமடைந்தனர். வங்கக்கடலில் 4.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கண்டறியப்பட்ட நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி என்ற பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் தூக்கத்தில் இருந்து விழித்த மக்கள் அலறியடித்துக் கொண்டு தெருக்களில் குடும்பம் குடும்பமாக தஞ்சமடைந்தனர். ரிக்டர் அளவுகோலில் 3 ஆக நிலநடுக்கம் பதிவானதாக மத்திய நிலநடுக்க ஆராய்ச்சி மையம் அதிகாரப்பூர்வமான தனது […]
அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி தொடருமா? இன்று முக்கிய முடிவு எடுக்கும் எடப்பாடி!

பா.ஜ.க.வுடனான கூட்டணி தொடருமா? என்பது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தி முடிவுகளை அறிவிக்க உள்ளார். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து மறைந்த தலைவர்களான அண்ணாதுரை, ஜெயலலிதா உள்ளிட்டோர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர்ராஜூ உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து தக்க பதிலடி கொடுத்தனர். இதில் ஜெயக்குமார் மட்டும் கொதித்தெழுந்து இனி […]
கிருஷ்ணகிரியில் அதிரடி காட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! அப்படி என்ன செய்தார்?

அனைத்து துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றுள்ள அமைச்சர் உதயநிதி, கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதி வார்டனை அதிரடியாக சஸ்பெண்டு செய்துள்ளார். தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ள அனைத்துத் துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். அதன்படி நேற்று (செப்.24) கிருஷ்ணகிரி மாவட்ட […]
ஏழுமலையான் தரிசனம்! டிசம்பர் மாத டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

டிசம்பர் மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இன்று காலை 10 மணி முதல் இணையத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் தேவஸ்தான் அறிவித்துள்ளது. ஆந்திராவில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் தினசரி எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும். பண்டிகை மற்றும் விடுமுறை நாட்கள் என்றால் லட்சக்கணக்கில் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க குடும்பத்துடன் புறப்பட்டு விடுகின்றனர். அந்தவகையில் தற்போது திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. எனவே வழக்கத்திற்கும் மாறாக பக்தர்களின் கூட்டம் வெள்ளம் போல் கரைபுரண்டோடுகிறது. […]
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: பதக்கங்களை குவிக்கும் இந்தியா!

நேற்று முன்தினம் தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தங்கம், வெண்கலம், வெள்ளி என பதக்கங்களை குவித்து வருகிறது. சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் 9வது ஆசிய விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் கோலாகலமாக ஆரம்பமானது. இப்போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். பதக்கப்பட்டியலை பொறுத்தவரையில் இந்தியா தனது வெற்றிக்கொடியை நாட்டும் என்பதற்கு அடித்தளமாக 2வது நாளான நேற்று 5 பதக்கங்களை கைப்பற்றியது. அதன்படி இந்தியவுக்கான முதலாவது பதக்கம் துப்பாக்கி சுடுதல் […]
பட்டினப்பாக்கம் கடலில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்! அரிய புகைப்படங்கள்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. கடந்த செப்.18ம் தேதி விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு ஆராதனை செய்யப்பட்டன. அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்க தேவையான அனைத்து பாதுகாப்பு பணிகளையும் சென்னை மாநகர காவல்துறை வெகு சிறப்பாக செய்திருந்தது. சென்னையில் […]
தமிழகம் வரும் சோனியா காந்தி! நாடாளுமன்ற தேர்தலின் முக்கிய பின்னணி!

நாடாளுமன்ற தி.மு.க. எம்.பி. கனிமொழி அழைப்பை ஏற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வருகிற அக்டோபர் மாதம் 14ம் தேதி தமிழகம் வருகிறார். இது வரப்போகும் 2024 நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டிற்கான வருகையா என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வருகிற அக்டோபர் மாதம் 14ம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தி.மு.க. மகளிரணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் […]
பொது சுகாதாரத்துறை திடீர் எச்சரிக்கை! டெங்கு காய்ச்சல் பரவல் எதிரொலி!

டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீரை தேக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை தடுக்க காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வசிப்பிடங்களுக்கு மருத்துவக் குழுவினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தமிழகம் முழுவதும் பொது சுகாதாரத்துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். […]

