ரோஜாவுக்கு நாங்கள் இருக்கிறோம்! ரம்யா கிருஷ்ணன், ராதிகா ஆதரவு!

ஆந்திர அமைச்சரும் நடிகையுமான ரோஜாவை பற்றிய அவதூறு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நடிகைகள் ரம்யாகிருஷ்ணன் மற்றும் ராதிகா ஆகியோர் வீடியோ பதிவிட்டு வருகின்றனர். ஆந்திர மாநில அமைச்சரான ரோஜா ஆபாச படங்களில் நடித்துள்ளார் என்று தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் பண்டாரு சத்தியநாராயணமூர்த்தி சர்ச்சையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அதோடு அக்கட்சியின் மகளிர் அணி தலைவியும் ரோஜா குறித்து பல அவதூறுகளை பரப்பி எச்சரிக்கைவிடுக்கும் விதமாக பேசியிருந்தார். இதனால் வேதனையடைந்த ரோஜா கண்ணீர் […]
அரியலூர் பட்டாசு விபத்து பலி! நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்!

அரியலூர் மாவட்டம் பட்டாசு விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே திருமானூரைச் சேர்ந்த அருண் என்பவர் விரகாலூர் கிராமத்தில் சொந்தமாக பட்டாசு ஆலை ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள். அடுத்த மாதம் (நவம்பர்) தீபாவளி பண்டிகை என்பதால் அதிகளவில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணியில் தொழிலாளர்களும் முழுவீச்சில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டதில் […]
ஜிம் பயிற்சியாளர் கழிவறையில் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்!

கொரட்டூரைச் சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் கழிவறைக்கு சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு விரிவாக்கம் ஞானமூர்த்தி நகர் மகாத்மா காந்தி தெருவைச் சேர்ந்த யோகேஷ் என்ற 41 வயதான பாடி பில்டர் கடந்த 2022ம் ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை வெற்றி பெற்றுள்ளார். அதோடு பல ஆண்டுகளாக பல்வேறு சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 2021ம் […]
சந்திரபாபு நாயுடு ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி! ஆந்திராவில் பரபரப்பு!

தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் நிராகரித்துள்ளது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து விஜயவாடாவில் அமைந்துள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் சந்திரபாபு நாயுடு சார்பில் பலமுறை தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் அனைத்து தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் ஆந்திராவில் பைபர் நெட், அங்கல்லு கலவர்ம, இன்னர் […]
ஆஸ்திரேலிய எம்.பி.க்கள் குழு! தமிழக சட்டப்பேரவைக்கு வருகை!

தமிழக சட்டப்பேரவைக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தலைவர் மில்டன் டிக் தலைமையிலான குழுவினர் வருகை புரிந்துள்ளனர். சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று காலை கூடிய நிலையில் கர்நாடக அரசை காவிரி நீரை திறந்துவிட வலியுறுத்தி ஒன்றிய அரசை உத்தரவிடக் கோரி தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் ஒருமனதாக கொண்டு வந்தார். இதற்கிடையில் சட்டப்பேரவையின் நடவடிக்கையில் நேரில் காண்பதற்காக ஆஸ்திரேலிய நாடாளுமன்றக் குழுத் தலைவர் மில்டன் டிக் தலைமையிலான குழுவினர் தமிழகத்திற்கு வருகை புரிந்தனர். அவர்களை பேரவைத் தலைவர் அப்பாவு […]
காவிரி விவகாரம்! சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை கொண்டு வந்த முதலமைச்சர்!

தமிழக சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட ஒன்றிய அரசை தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து உரையாற்றினார். இன்று (அக்.9) தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் முதலில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களான லியாவுதீன் சேட், பழனியம்மாள், ஆண்டமுத்து ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதோடு பஞ்சாப் முன்னாள் மத்திய மந்திரி பிரகாஷ் சிங் பாதல், தமிழக அரசின் […]
5 மாநில சட்டசபை தேர்தல் தேதி! ம.பி. நவ.17, தெலுங்கானா நவ.30, ராஜஸ்தான் நவ.23

5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தெலுங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் மிசோரம் மாநில சட்டசபையின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் மாதம் 17ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மற்ற 4 மாநிலங்களுக்குமான பதவிக்காலம் வருகிற ஜனவரி மாதத்தில் வெவ்வேறு தேதிகளில் நிறைவடைய உள்ளது. மத்தியபிரதேசத்தில் பா.ஜனதாவும், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கரில் […]
மகளிர் உரிமை மாநாட்டின் அழைப்பிதழ்! முதல்வருக்கு வழங்கிய கனிமொழி!

முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த கனிமொழி எம்.பி., அக்டோபர் 14ம் தேதி நடைபெற உள்ள மகளிர் உரிமை மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கினார். கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் வருகிற 14ம் தேதி (அக்டோபர்) மகளிர் உரிமை மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்க […]
அணை- தெர்மாகோல்! கலாய்த்து தள்ளிய அமைச்சர் துரைமுருகன்!

அணைகள் காலியாகாமல் இருக்க தெர்மாகோல் கொண்டு மூடி வைத்துள்ளோம் என்று சட்டசபையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசிய போது சிரிப்பலையால் அரங்கமே அதிர்ந்தது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை (அக்.9) கூடியது. அதைத்தொடர்ந்து வினாக்கள் விடைகள் நேரத்தின் போது, சட்டமன்ற உறுப்பினர் செல்லூர்ராஜூ பேசும் போது, ‘‘மதுரை மாநகரில் சாக்கடை நீர் குடிநீருடன் கலந்து வருவதால் அரசு பணிகளை விரைவுபடுத்த வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் […]
பீகாரில் 24 பெண்கள் பலி! விரதம் இருந்து நீராடிய போது பரிதாபம்!

பீகார் மாநிலத்தில் விரதம் இருந்து ஆற்றில் நீராட சென்ற 24 பெண்கள் நீரில் மூழ்கி ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பீகார் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் ஜிவித்புத்ரிகா என்ற பண்டிகை 3 நாட்களுக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. விரதம் இருக்கும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக நோன்பு இருப்பது வழக்கம். அந்த வகையில் விரதம் இருந்த பெண்கள் நேற்று நீர் நிலைகளில் நீராடிய போது 24 பெண்கள் உயிரிழந்ததாக […]

