News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தமிழக அரசு எப்படி சமூக நீதி பற்றி பேச முடியும்? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி!

ஆளுநர் ஆர்.என்.வி. தமிழக அரசை மீண்டும் வெளிப்படையாக விமர்சனம் செய்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு சட்ட மசோதாக்களை காலம் தாழ்த்துவதில் தொடங்கி, தமிழ்நாடு, தமிழகம் என்று அழைக்கும் சர்ச்சை என பல்வேறு எதிர்மறை எண்ணங்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். எனவே ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு மத்திய அரசுக்கு தமிழகத்தில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக […]

மயங்கி விழுந்த 50க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள்! முக்கிய பின்னணி!

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் நேற்று 2வது நாளாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தமிழகத்தில் 2009 ஜூன் 1-ம் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை சம்பளமும், அதற்கு பின்னர் நியமிக்கப்பட்டவர்களுக்கு  ரூ.5,200 அடிப்படை சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட ஊதிய முரண்பாட்டால் 20 […]

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சட்டமானது! குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதலுடன் வரலாற்று சிறப்பு மிக்க மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா சட்டமானது.   புதிய நாடாளுமன்றத்தில் கூடிய சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பேராதரவுடன் மசோதா ஏகமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.   காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் மகளிர் […]

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை கிளைக்கு மாற்றம்! முக்கிய பின்னணி!

அமைச்சர்களின் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்குகளை விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு திடீரென்று மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை உயர்நீதிமன்ற மதுரை கிளை பணிக்கு மாற்றப்படுவது வழக்கம். அதன்படி வருகிற அக்டோபர் 3ம் தேதி முதல் 3 மாதங்களுக்கு மாற்றப்பட உள்ள நீதிபதிகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.   அதில் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகிய நீதிபதிகள் முதல் அமர்வில் பொதுநலன் மனு, ஆட்கொணரவு மனு, […]

பெட்ரோல் பங்க் மேற்கூரை விழுந்து ஒருவர் உயிரிழப்பு! சென்னையில் பரபரப்பு!

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.   கடந்த சில நாட்களாகவே சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மழையில் இருந்து தப்பிக்க கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஒதுங்கி நிற்கிறார்கள்.   இந்நிலையில் நேற்று சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் மழைக்காக சிலர் ஒதுங்கி நின்றுள்ளனர். அப்போது திடீரென்று பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்து விழுந்து அங்கு […]

கர்நாடகாவுக்கு புதிய உத்தரவிட்ட காவிரி மேலாண்மை வாரியம்! என்னவென்று தெரியுமா?

தமிழகத்திற்கு 3,000 கன அடி நீரை திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.   காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்கள் இடையே பெரும் போராட்டமே நடைபெற்று வருகிறது. அதன் எதிரொலியாக இன்று கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம், பெங்களூர் மற்றும் மைசூர் நகரங்களில் 144 தடை உத்தரவு என கர்நாடக மாநிலம் ஸ்தம்பித்துப் போயுள்ளது.   இந்த பரபரப்பான சூழ்நிலையில் […]

அக்.1ம் தேதி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

வருகிற அக்டோபர் மாதம் 1ம் தேதி தி.மு.க.மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்ற முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற அக்டோபர் 1ம் தேதி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதேபோல் தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டமும் ஒன்றாக சேர்த்து காணொலி காட்சி வாயிலாக அக்டோபர் மாதம் 1ம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து […]

வலிகளுடன் வாழ பழகுகிறேன்! நடிகர் விஜய் ஆண்டனி உருக்கம்!

நடிகர் விஜய் ஆண்டனி ரத்தம் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ‘வாழ்க்கையில் நிறைய இழப்புகளை சந்தித்துவிட்டேன். வலிகளுடன் வாழ பழகுகிறேன் என்று உருக்கமாக பேசியுள்ளார். இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்ட விஜய் ஆண்டனி நல்ல மனிதர் என்ற பெயரையே திரையுலகில் பெற்றுள்ளார். விஜய் ஆண்டனி அவரது மனைவி பாத்திமா, 2 மகள்களுடன் சென்னையில் வசித்து வந்தார். இதற்கிடையில் 12ம் வகுப்பு படித்து வந்த இவரது மகள் மீரா கடந்த 19ம் தேதி (செப்.) […]

ஆசிய விளையாட்டுப் போட்டி: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு துப்பாக்கி சுடுதலில் மேலும் ஒரு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்துள்ளது.   சீனாவில் உள்ள ஹாங்ஸு நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்றுள்ள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை வாரி குவித்து வருகின்றனர்.     அதன் ஒரு பகுதியாக இன்றைய போட்டியில் ஆடவர் […]

காணொளியில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில்பாலாஜி! காவல் 7வது முறையாக நீட்டிப்பு!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது காவல் 7வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி அல்லி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். செந்தில்பாலாஜி மீது 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பான விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் […]