News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் சம்பவம் ஈரோட்டில் அரங்கேறி வருகிறது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராக ராமேஸ்வர முருகன் என்பவர் பணியாற்றி வருகிறார். இதற்கு முன் ராமேஸ்வர முருகன் பள்ளிகல்வித்துறை இணை இயக்குனராக பணியாற்றிய காலகட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. சென்னையில் வசித்து வரும் ராமேஸ்வரமுருகனுக்கு, ஈரோடு மாவட்டட் கோபிசெட்டிப்பாளையம் அடுத்த வெள்ளாளங்கோவில் பகுதியில் சொந்த […]

இஸ்ரேலில் 18,000 இந்தியர்கள்! Operation Ajay மத்திய அரசு அதிரடி!

இஸ்ரேல்- பாலஸ்தீனம் மோதலுக்கு இடையே சிக்கியுள்ள 18,000 இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.   இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையேயான போர் இன்று 6வது நாளாக நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனத்தி காசா பகுதி தங்களுடைய நாட்டின் எல்லை என்று இஸ்ரேலும், பாலஸ்தீனமும் உரிமை கொண்டாடி வருவதால் பல ஆண்டுகளாக இந்த பிரச்சினை நீடித்து வருகிறது.   இதைத்தொடர்ந்து 4 முறை போர் நடைபெற்றுள்ள நிலையில் தற்போது கடந்த 6 நாட்களாக போர் […]

பணத்தை ஏன் செலுத்தவில்லை? விஷாலை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!

ரூ.80 கோடி அளவுக்கு வங்கி மூலம் பணப்பரிவர்த்தனை செய்துள்ள நீங்கள் ஏன் இன்னும் கடனை திரும்ப செலுத்தவில்லை என்று நடிகர் விஷாலை நீதிமன்றம் சரமாரியாக கேள்வியால் துளைத்தது.   பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனம் லைக்காவுக்கும், நடிகர் விஷாலுக்குமான பணப்பிரச்சினை என்றுதான் முடியும் என்ற அளவுக்கு நீண்டுகொண்டே செல்கிறது. விஷால் தயாரிப்பாளர் என்ற முறையில் லைக்கா நிறுவனத்திடம் ரூ.21 கோடியே 25 லட்சம் பெற்றுவிட்டு திருப்பித்தரவில்லை என்று வழக்கு தொடரப்பட்டது.   ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக […]

Come back கொடுத்த நடிகை சதா!

ஜெயம் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை சதா 40 வயதை தொட்டுவிட்ட போதிலும் இப்போதும் அதே இளமை துள்ளலில் இருக்கிறார்.   அந்நியன் திரைப்படத்தில் சதாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெருமளவு பேசப்பட்டாலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்காமல் சொந்த தொழில் செய்து வருகிறார். இருப்பினும் சமூக வலைதளங்களில் தன்னுடைய ஹாட் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.  

கண்ணை கவரும் நடிகை வேதிகா! Hot Photo shoot

  நடிகை வேதிகா காஞ்சனா- 3 திரைப்படத்தில் கம்பேக் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் விட்ட இடத்தை பிடித்துவிட்டார்.   அதைத்தொடர்ந்து இயக்குனர் விக்டர் ஜெயராஜ் இயக்கத்தில் வினோதன் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இத்திரைப்படம் வருகிற 2024ம் ஆண்டு வெளியாக உள்ளது. தற்போது நடிகை வேதிகாவின் புதிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.  

பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்! ஆசிரியர் சங்கங்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அழைப்பு!

ஆசிரியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு போராட்டம் நடத்த உள்ளது.  சென்னையில் நாளை (அக்.13) நடைபெற உள்ள இந்த போராட்ட அறிவிப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘பேச்சுவார்த்தை தொடர்பாக ஒவ்வொரு ஆசிரியர் சங்கங்களுக்கும் […]

ஆப்கன் வீரரை கட்டியணைத்த விராட் கோலி! முடிவுக்கு வந்த மோதல்!

ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல்ஹக்கை கட்டியணைத்து கைகொடுத்து மோதலை முடிவுக்கு கொண்டு வந்த விராட் கோலியை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.   கடந்த ஐ.பி.எல். போட்டியின் போது பெங்களூர் அணியைச் சேர்ந்த விரோட் கோலியும், லக்னோ அணியில் விளையாடிய ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக்கும் மோதிக் கொண்ட சம்பவம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேச்சுப் பொருளாகத்தான் இருக்கிறது. இந்த மோதலின் போது முன்னாள் வீரர் கவுதம் கம்பீரும் ஈடுபட்டார்.   இதன் தொடர்ச்சியாக நவீன் […]

அமித்ஷா- சந்திரபாபு நாயுடு மகன் திடீர் சந்திப்பு! முக்கிய பின்னணி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் திடீரென்று சந்தித்து பேசியுள்ளார். ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கும் மேல் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு தற்போது ராஜமஹேந்திரவரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தெலுங்கு தேசம் கட்சியின் […]

அமிதாப்பச்சன்- ரஜினிகாந்த் பங்கேற்கும் உலகக்கோப்பை Ind Vs Pak போட்டி

2023 உலகக்கோப்பை இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியைக் காண பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்டிப்பாக வருவார்கள் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. கடந்த 5ம் தேதி (அக்டோபர்) 2023 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் தொடங்கியது. அனைத்து அணிகளும் கிட்டத்தட்ட ஒரு போட்டியை விளையாடி முடித்துவிட்ட நிலையில் ரசிகர்களின் முழு ஆர்வமும் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில்தான் உள்ளது. உலகக்கோப்பையில் தொடக்க விழா நடத்தப்படுவதில்லை என்ற […]

காவிரி விவகாரம்! மத்திய அரசை வலியுறுத்திய தீர்மானம் அனுப்பி வைப்பு!

காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை முறைப்படி தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். கடந்த 9ம் தேதி சட்டப்பேரவையில் காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசு ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானத்தில் தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட உச்சீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரையறுத்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டிற்கு தண்ணீரை கர்நாடக அரசு […]