News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

இயற்கை கள் குடித்து சீமான் போராட்டம். அடுத்து இயற்கை கஞ்சா விற்பனை..?

தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி வழங்கக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் பனை மரம் ஏறி கள் இறக்கிக் குடித்தார் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இயற்கை பானம் என்பதால் கள் குடிப்பதில் தவறு இல்லை என்று கூறியிருப்பது போன்று இயற்கையாக விளையும் கஞ்சா விற்பனைக்கும் போராட்டம் நடத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள பெரியதாழையில் நேற்று நடைபெற்ற கள் இறக்கும் போராட்டத்தின்போது, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் […]

அண்ணாமலைக்கு ட்ஃப் கொடுக்கும் காயத்ரி… கதற விடுறாங்கப்பா

அமித்ஷா முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி இணைந்து கூட்டணியை உறுதி செய்த பிறகும் அண்ணாமலை அமைதியாக இருப்பதில்லை. போகிற இடமெல்லாம் பா.ஜ.க. ஆட்சி என்றே பேசி வருகிறார். தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சீட் பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் வம்பிழுத்து வருகிறார். இதற்கு சீனியர்கள் யாரும் பதில் அளிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவு போட்டுவிட்டார். அண்ணாமலையின் வாய் சவடாலை புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் யாருமே விரும்பவில்லை. அண்ணாமலை மீது டெல்லிக்குப் […]

திருமா பேரணியை டம்மியாக்குவதற்கு பூஜை ஜெகன் நாடகம்..? திமுக மீது பாயும் சிறுத்தைகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் நீல நிறத்தில் கோட், சூட் போட்டுக் கொண்டு திருச்சியில் மதச்சார்பின்மை காப்போம் என்ற பிரமாண்ட பேரணி நடைபெற்றது. விசிக பேரணிக்கு வந்த நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் நீல நிறத்திலான ஆடை மற்றும் புடவைகளை அணிந்திருந்தனர்.  இந்த பேரணி போதிய கவனம் பெறக்கூடாது என்பதற்காகவே பூவை ஜெகன் மூர்த்தியை கைது செய்வதற்கு போலீஸாரை களத்தில் இறக்கி பெரும் பரபரப்பை திமுக கிளப்பியதாக குற்றம் சாட்டப்படுகிறது. திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் […]

விமான விபத்துக்கு கடவுள் காரணமா..? மோடி போட்டோஷூட், அமித்ஷா டிராமா

உலகை உலுக்கிய வகையில் இந்தியாவில் விமான விபத்து நடந்துள்ளது. இந்த விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிடச் சென்ற மோடி காஸ்ட்யூம் மாற்றியதும் அமித்ஷா இந்த விபத்தை விதி என்று விட்டு விட வேண்டும் என்று கூறியதும் வைரலாகிவருகிறது. விமான விபத்துக்கு கடவுளே காரணம், விதி என்று விட்டுவிட வேண்டும் என்றெல்லாம் அமித்ஷா பேசியிருக்கிறார். நாட்டுக்கு என விமான நிறுவனம் இல்லை. தனியார் நிறுவனங்களை கட்டுப்படுத்தும் சக்தியும் அமைச்சரவைக்கு இல்லை. பிறகு எதற்கு இந்த டிராமா என்று […]

ஈரான், இஸ்ரேல் கொடூர யுத்தம்… தரைமட்டமாகும் வீடுகள். உலகப் பொருளாதாரத்துக்கு ஆபத்து.

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியிருப்பதை அடுத்து, இரண்டு பக்கமும் மிகப்பெரிய போர் வெடித்திருக்கிறது. ஈரான் மீது இன்று அதிகாலையில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரான் ட்ரோன் தாக்குதலை தொடங்கி உள்ளது. இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் நீண்ட காலமாக மோதல் உள்ளது. பாலஸ்தீனத்தின் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பு, லெபனானில் இயங்கும் ஹெஸ்புல்லா அமைப்பு, ஓமனில் இருக்கும் ஹவுதி அமைப்பு உள்ளிட்டவற்றிற்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. […]

அமைதிப் புயலாக வைகோ..? புதிய கூட்டணிக்குப் பேச்சுவார்த்தை

மதிமுகவுக்குள் நடந்த உட்கட்சி பஞ்சாயத்து எல்லாம் முடிந்து கிட்டத்தட்ட அனைவரும் துரை வைகோவை தலைவராக ஏற்றுக்கொண்டு விட்டார்கள். மதிமுகவுக்கு செல்வாக்கு குறைகிறது என்ற பேச்சை தடுத்து நிறுத்தும் வகையில் துரை வைகோ தினமும் சுற்றுப்பயணம் செய்துவருகிறார். இந்த நிலையில் திமுக கூட்டணியில் வைகோவுக்கு எம்.பி. சீட் கொடுக்கவில்லை என்பது மதிமுகவில் கடும் அதிருப்தியானது. துரைவைகோ வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்தார். வைகோ இது பற்றி வெளிப்படையாகப் பேசவில்லை என்றாலும் திமுக மீது ஆத்திரத்தில் இருக்கிறார். நேற்று வந்த கமல்ஹாசனுக்குக் […]

மாணவிகளை அழுத்தமாக கட்டியணைத்த விஜய்… வேல்முருகன் எங்கே இருக்கீங்க..?

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான பரிசு வழங்கும் விழா நடத்திவருகிறார். மூன்றாம் மட்டும் இறுதிக் கட்டத்திற்கான விழா இன்று மாமல்லபுரத்தில் தொடங்கியது. தவெக தலைவர் விஜய் நேரடியாக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசை வழங்கி வருகிறார். இந்த விழாவின் தொடக்கத்தில் விமான விபத்து குறித்து பேசினார். ‘’அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை என்று கூறிய விஜய் விமான விபத்தில் இறந்தவர்களுக்கு இரண்டு நிமிடம் […]

அன்புமணியிடம் விலை போன வடிவேல் ராவணன். ராமதாஸ் புது கட்சி..?

பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனை கண்டுபிடிப்போருக்கு 100 ரூபாய் பரிசு என்று ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பு கட்சிக்குள் நிலவும் மோசமான உட்கட்சி மோதலை அம்பலப்படுத்தியிருக்கிறது. இனிமேல், பா.ம.க. ஒற்றுமைக்கு வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது. அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான சண்டையில் ராமதாஸ் தொடர்ந்து அன்புமணி மீது குற்றம் சுமத்தி வருகிறார். தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், ‘’எனக்கும் செயல் தலைவருக்கும் உள்ள பிரச்சனை எல்லோருக்கும் தெரியும், இரண்டு பேரின் சமரச பேச்சுவார்த்தைக்கு தைலாபுரம் வந்தார்கள் நான் அங்கே […]

கரிக்கட்டை உடல்கள், கடைசி செல்ஃபி, பைலட் குரல். விமான விபத்தில் நெஞ்சை உலுக்கும் தகவல்கள்

அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் பலியானதாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் விமான விபத்து நடந்த இடத்தில் பலியான மாணவர்கள் எண்ணிக்கை அடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விமான விபத்து குறித்து வெளியாகும் தகவல்கள் நெஞ்சை உலுக்குகின்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், கிளம்பிய சில நிமிடங்களில் அங்குள்ள மருத்துவ மாணவர்கள் விடுதியில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் முழுவதுமாக நிரப்பப்பட்டு இருந்த எரிபொருள் […]

விசிகவில் வேடன் வேட்டை…. திருமாவின் சொத்து மதிப்பு இவ்வளவா?

திருமாவின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை முழுமையாக கைப்பற்றி விஜய்யிடம் ஒப்படைப்பதற்கு ஆதவ் அர்ஜுனா செய்த முயற்சிகள் போதிய பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில் இப்போது கேரளாவில் படு பாப்புலராக இருக்கும் வேடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைய இருப்பதாகவும் அவருக்கு கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி கொடுத்து தேர்தல் பிரசாரம் செய்ய வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் திருமாவளவனின் சொத்து மதிப்பு உயர்வும் கேள்வியாகியுள்ளது. இந்த முயற்சிக்கு தமிழகத்திலும் பெரும் வரவேற்பு இருக்கும் என்று தெரியவரவே விசிக […]