தமிழக ஆளுநர்- பிரேமலதா விஜயகாந்த் திடீர் சந்திப்பு! முக்கிய பின்னணி!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திடீரென்று சந்தித்து பேசினார். சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆளுனர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘‘காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும் என்று இந்த சந்திப்பின் போது தெரிவித்ததாக கூறினார். மேலும் தேசிய நதிகளை இணைக்க […]
செந்தில் பாலாஜிக்கு அடுத்த செக்! குற்றப்பத்திரிகை தாக்கல்!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். செந்தில்பாலாஜி மீது 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பான விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மாற்றம் […]
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு! ஒரே நேரத்தில் தாய், மகள் பலி!

சென்னை அம்பத்தூர் அருகே ஏ.சி.யில் இருந்து வந்த கரும்புகையால் மூச்சுத்திணறி தாய், மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் அருகே அமைந்துள்ளது ஏகாம்பரம் நகர். இங்கு வசித்து வந்த அகிலா மற்றும் அவரது மகள் நஸ்ரிபேகம் இருவரும் வீட்டில் வழக்கம் போல் ஏசி அறையில் இரவு நேரத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு அதில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் அகிலாவும் […]
நாம் தமிழர் மேடை மீது கல் வீச்சு! சீமான் கொடுத்த மாஸ் பதில்!

நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்ட மேடையின் மீது மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் நேற்று முன்தினம் இரவு நாம் தமிழர்கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் மணி செந்தில் அங்கு கூடியிருந்த மக்கள் முன்னிலையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர்கள் சிலர் மேடை மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அந்த கற்கள் மேடைக்கு […]
பழனி முருகன் கோவிலில் அக்.1 முதல் புதிய தடை! மீறினால் நடவடிக்கை!

பழனி முருகன் கோவிலுக்கு நாளை முதல் செல்போன் மற்றும் வீடியோ கேமரா கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை நாளை அமலுக்கு வர உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் உலகப்பிரசித்தி வாய்ந்த கோவிலாகும். இக்கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அப்படி வரும் பக்தர்களில் சிலர் ஆகமவிதியை மீறி பழனி மலைக்கோவில் கருவறையில் உள்ள நவபாஷாண மூலவரை தங்கள் செல்போனில் படம் பிடித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு விடுகிறார்கள். இது குறித்து எழுந்த […]
50 வினாடி நடிக்க ரூ.5 கோடி சம்பளம்! எந்த நடிகை தெரியுமா?

லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வரும் நடிகை நயன்தாராவின் அசுர வேக வளர்ச்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்த்திரையுலகில் 20 வருடங்களை தாண்டியும் நடிகை நயன்தாரா கதாநாயகியாக தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணம், இரட்டை குழந்தைகளுக்கு தாய் என பிசியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் நயன்தாரா குறித்து தற்போது கிடைத்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு திரைப்படத்தில் நடிக்க நயன்தாரா ரூ.5 கோடி முதல் ரூ.10 […]
இன்றே கடைசி! 2,000 ரூபாயுடன் வங்கிக்கு படையெடுக்கும் மக்கள்!

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடு இன்றுடன் (செப்.30) முடிவடைவதால் வங்கிகளுக்கு பொதுமக்கள் சிலர் விரைந்துள்ளனர். இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது செப்டம்பர் 30ம் தேதிக்கு மேல் (இன்று) என ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து பொதுமக்கள் வங்கிகளில் தங்களிடம் புழக்கத்தில் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது. இதனால் வங்களில் குவிந்த பொது மக்களிடம் தங்களிடம் […]
விக்ரம் லேண்டர், ரோவரை எழுப்ப கடைசி முயற்சி! இஸ்ரோ விஞ்ஞானிகள் முக்கிய தகவல்!

நிலவின் தென் துருவத்தில் உறக்க நிலையில் இருக்கும் சந்திராயன்3 விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை எழுப்பும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். கடந்த ஜூலை 14ம் தேதி எல்.வி.எம்.3 ராக்கெட் மூலம் சந்திராயன் 3 விண்கலம் பகல் 2.35 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது கடந்த ஆகஸ்டு மாத்ம 23ம் தேதி மாலை 6.04 மணியளவில் புவி மற்றும் நிலவின் வட்டப்பாதையை கடந்து விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் 40 நாட்கள் பயணத்தை முடித்து […]
காவிரி விவகாரம்! போராட்டத்தில் குதித்த நாம் தமிழர் கட்சி!

காவிரி விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியினர் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளனர். தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினரும், கன்னட விவசாயிகளும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெங்களூர், மைசூர் நகரங்களிலும், கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றதை தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் திரைப்பட புரொமோஷனில் கலந்து கொண்ட நடிகர் சித்தார்த் விழா மேடையில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் திரைத்துரையினர் […]
அக்.3ம் தேதி அண்ணாமலை தலைமையில் ஆலோசனைக் கூட்டம்! முக்கிய பின்னணி!

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் வருகிற 3ம் தேதி நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க.வுடனான கூட்டணி முறிவுக்கு காரணம் அண்ணாமலைதான் என்று குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், பாஜக தேசியத் தலைமை இன்னும் இதுகுறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதேசமயமம், அண்ணாமலைக்கு எதிரான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பா.ஜ.க.வின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை […]

