News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

7வது நாளாக தொடரும் போராட்டம்! இடைநிலை ஆசிரியர்கள் பிடிவாதம்!

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 125க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் நேற்று 7வது நாளாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தமிழகத்தில் 2009 ஜூன் 1-ம் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை சம்பளமும், அதற்கு பின்னர் நியமிக்கப்பட்டவர்களுக்கு  ரூ.5,200 அடிப்படை சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட ஊதிய முரண்பாட்டால் 20 […]

ஆசிய விளையாட்டு போட்டி! சக வீராங்கனை மீது சர்ச்சையை கிளப்பிய இந்திய வீராங்கனை!

ஆசிய விளையாட்டு போட்டியில் சக வீராங்கனை மீது இந்திய வீராங்கனை சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசியது பெரும் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது. சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டு போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்திய அணி பதக்கங்களை வாரி குவித்து வருகிறது. அதன்படி இந்தியா இதுவரை 13 தங்கம், 21 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களை பெற்று சிலநாட்களாகவே 4வது இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் […]

தி.மு.க.வில் கூடுதல் சீட்டுக்கு அடிபோட்ட கே.எஸ்.அழகிரி! முக்கிய பின்னணி!

வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் கூடுதலாக சீட் கிடைக்கும் என்று கே.எஸ்.அழகிரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.   வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தேசிய அளவில் மட்டுமல்லாது ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல்களத்தை பரபரப்பாக்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி முறிவைத் தொடர்ந்து மத்திய பா.ஜ.க.வின் கூட்டணி யாருடன் என்ற பெரியகேள்வி எழுந்துள்ளது.   இதற்கிடையில் அ.தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து கூடுதல் இடங்களில் போட்டியிடும் என்ற பேச்சுகளும் அடிபட்டு […]

இரட்டை குழந்தைகளுடன் விபத்தில் சிக்கிய பிரபல பாடகி! அதிர்ச்சி தகவல்!

பிரபல பாடகியான சின்மயி தான் விபத்தில் சிக்கியதாக இணையத்தில் பதிவிட்ட தகவல் தற்போது வைரலாகி வருகிறது.   தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாக்களின் பின்னணி பாடகியாகவும், சமந்தா உள்ளிட்ட நடிகைகளுக்கு டப்பிங் கொடுப்பவருமாக பிசியாக இருப்பவர் பாடகி சின்மயி. இவர் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் பாடகியாக அறிமுகமானார்.   ஒரு பாடகியாக மட்டுமல்லாமல், மீடூவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.   இந்நிலையில் பாடகி சின்மயி, […]

9 தமிழக விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசு! முதலமைச்சர் பெருமிதம்!

9 தமிழக இஸ்ரோ விஞ்ஞானிகள் 9 பேருக்கு தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர் அவர்களை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.   இஸ்ரோவில் தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளான முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன், மயில்சாமி, அண்ணாதுரை, வீரமுத்து உள்ளிட்ட 9 பேர் தமிழகத்தின் பெருமையை உலகளவில் கொண்டு சேர்த்துள்ளனர்.   அவர்களை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவில் தலைமையேற்று பேசிய முதலமைச்சர் […]

காந்தி ஜெயந்தி: முதலமைச்சர், ஆளுநர் மரியாதை மலர் தூவி மரியாதை!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தியின் உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.   இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாள் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக அரசின் சார்பில் சென்னை, எழும்பூர், அரசு அருங்காட்சியக வளாகத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு அருகில் மலர்களால் சூழவைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]

ரூ.1.6 லட்சம் கோடியை தாண்டிய ஜி.எஸ்.டி. வசூல்!

நடப்பு நிதியாண்டில் 4வது முறையாக ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.6 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக அதிகாரப் பூர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் அரசின் மொத்த ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) வருவாய் ரூ.1,62,712 கோடியாக இருந்தது. 2023 செப்டம்பர் வருவாயுடன் கடந்த ஆண்டு இதே மாதமான செப்டம்பர் 2022 வருவாயான ரூ.1.47 லட்சம் கோடியை விட அதிகரித்துள்ளது. அதாவது 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த […]

குன்னூர் விபத்து! இறந்தவர்களின் உடல்கள் சொந்த ஊரில் நல்லடக்கம்!

குன்னூர் பேருந்து விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள் அவர்களது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலமான ஊட்டிக்கு நேற்று முன்தினம் பயணிகளுடன் வந்த சுற்றுலா பேருந்து மரப்பாலம் அருகே 9வது கொண்டை ஊசி வளைவில் விபத்துக்குள்ளானது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்தில் சிக்கியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் […]

தற்காலிக நிறுத்தம்! சென்னை& தாம்பரம் பயணிகள் கவனத்திற்கு!

சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையில் செல்லும் புறநகர் மின்சார ரெயில் சேவை இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணிவரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்தாக திகழ்வது மின்சார ரெயில்கள்தான். வேகமான மற்றும் சவுகரியமான பயணத்திற்கும் பயணிகளின் முதல் தேர்வாக இருப்பது மின்சார ரெயில்கள்தான். அதன்படி இயக்கப்படும் ரெயில்களில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என பயணிகள் பயணம் […]

அண்ணாமலை நாளை டெல்லி பயணம்! முக்கிய பின்னணி தகவல்கள்!

அ.தி.மு.க. கூட்டணி முடிவுக்கு பின்னர் நாளை அண்ணாமலை திடீர் டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளது அரசியல் களத்தில் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறு பரப்புவதாக குற்றம்சாட்டி, தேசிய ஜனநாயக கட்சியில் இருந்தும் பா.ஜ.க.வில் இருந்தும் விலகுவதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இதேபோல் அண்ணாமலையை அதிமுக கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களும் குற்றம்சாட்டினர். இந்நிலையில் அண்ணாமலை நாளை டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். […]