நிர்வாண படத்தில் நடித்தேனா? அமைச்சர் ரோஜா கண்ணீர் வீடியோ வைரல்!

நிர்வாண படத்தில் நான் நடித்தேன் என்றும் நான் கெட்டவள் என்றும் தெலுங்கு தேசம் கட்சியின் முன்னனள் அமைச்சர் அவதூறு பரப்புகிறார் என்று நடிகையும் அமைச்சருமான ரோஜா கண்ணீர் மல்க பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்திய நாராயணமூர்த்திக்கும் அமைச்சர் ரோஜாவுக்கும் இடையிலான போர் எப்போது முடியும் என்று தெரியவில்லை. இவர்களின் சண்டையால் ஆந்திராவில் பரபரப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சியின் […]
மேற்கூரை இடிந்த விவகாரம்: பெட்ரோல் பங்க் உரிமையாளர் நீதிமன்றத்தில் சரண்!

பெட்ரோல் பங்க் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியான விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த 29ம் தேதி பெய்த கனமழையின் போது சைதப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில் பலர் மழைக்காக ஒதுங்கி நின்று கொண்டிருந்தனர். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பெட்ரோல் பங்க் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அதன் அடியில் நின்று கொண்டிருந்த […]
ஆவின் பால் முகவர்கள் குமுறல்! தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

தமிழகத்தில் ஆவின் பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிக விலைகொடுத்து தனியார் நிறுவனங்களின் பால் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ள ஆவின் பால் நிறுவனம் நடுத்தர மக்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் கிடைத்து வருகிறது. நீலம், பச்சை, ஆரஞ்சு என கிடைத்து வரும் பால் பிஞ்சு குழந்தைகளின் சத்துணவாகவும், தாய்ப்பாலுக்கு நிகராகவும் கருதப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆவின் பால் விநியோகம் 50 சதவீதத்துக்கு மேல் திட்டமிடப்பட்டு குறைக்கப்பட்டு வருகிறது. […]
மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி! முதலமைச்சர் நிதி உதவி அறிவிப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டம், ஆற்றூர் கிராமம் தோப்புவிளையைச் சேர்ந்தவர்கள் டெம்போ டிரைவர் சோம்ராஜ். இவர் தனது மனைவி சித்ரா மற்றும் மகள் ஆதிரா, மகன் அஸ்வின் ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் சித்ரா, ஆதிரா, அஸ்வின் ஆகியோர் நேற்று அவர்களது வீட்டில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் […]
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி! கடலூரில் பரபரப்பு!

கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் குருபூஜையில் கலந்து கொள்ள உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள கோஆதனூரில் நந்தனார் குருபூஜை விழா இன்று நடைபெற உள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார். இன்று நடைபெறும் விழாவுடன் சேர்த்து அதன் பின்னர் நடைபெற உள்ள […]
தேசிய மருத்துவ ஆணையை நிறுத்துங்கள்! பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

புதிய மருத்துவக் கல்லூரி தொடர்பான தேசிய மருத்துவ ஆணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார். தேசிய மருத்துவ ஆணையம் புதிய விதிகளை வகுத்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளும், அவற்றில் உள்ள மாணவர்கள் சேர்க்கை இடங்களும் தேவைக்கும் அதிகமாக இருக்கிறது. இதனால் அடுத்த ஆண்டு முதல் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்கவும், மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவும் தேசிய மருத்துவ ஆணையம் தடை விதித்துள்ளது. […]
ஆசிய விளையாட்டு போட்டி! வில்வித்தை கலப்பு இரட்டையரில் தங்கம் வென்ற இந்தியா!

ஆசிய விளையாட்டு போட்டிகளில் வித்வித்தை கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியா தங்கப்பதக்கத்தை வென்று சாதனை புரிந்துள்ளது. சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர்களும், வீராங்கனைகளும் தங்களின் நாட்டின் பெருமையை காக்க அபாரமாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில் வில்வித்தை கலப்பு இரட்டையர் காம்பவுண்ட் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. ஜோதி சுரேகா வெண்ணாம், பிரவீன் ஓஜஸ் ஆகியோர் தங்களை எதிர்த்து […]
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனை! முக்கிய தகவல்கள்!

ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் இன்று திடீர் ஆலோசனை மேற்கொள்கிறார் என்ற செய்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது. அ.தி.மு.க. பா.ஜ.க.வுடனான தனது கூட்டணியை முறித்துக் கொண்ட நேரத்தில் எப்படியும் பா.ஜ.க. தலைமை தனக்கு அழைப்பு விடுக்கும் என்ற உறுதியான நம்பிக்கையில் இருந்தார் ஓ.பன்னீர்செல்வம். அ.தி.மு.க.வில் இருந்து குண்டுகட்டாக வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன், எப்படியும் அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்திவிட வேண்டும் என்றும் அ.தி.மு.க.வில் முக்கிய இடம் பிடிக்க வேண்டும் என்றும் […]
சிக்கிம் காட்டாற்று வெள்ளம்! மாயமான 23 ராணுவ வீரர்கள்!

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய 23 ராணுவ வீரர்கள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிக்கிம் மாநிலத்தில் தீஸ்தா நதியில் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. லச்சேன் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. அதன் காரணமாக தீஸ்தா நதியில் திடீரென்று காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டோடியது. அப்போது பள்ளத்தாக்கில் முகாமிட்டிருந்த ராணுவ வீரர்கள் வெள்ளத்தில் சிக்கினர். இதில் 23 ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் […]
அமெரிக்காவில் அம்பேத்கருக்கு 19 அடி உயர சிலை! ஏ.ஐ.சி. அறிவிப்பு!

அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட் மாகாணத்தில் இந்திய சட்டமேதை அம்பேத்கருக்கு வருகிற 14ம் திறக்கப்பட உள்ளதாக ஏ.ஐ.சி. தெரிவித்துள்ளது. இந்தியாவின் சட்டமேதை என்று அழைக்கப்படுவர் அண்ணல் அம்பேத்கர். இந்திய அரசியலமைப்பின் பிறப்பிடமான அம்பேத்கர் சமத்துவத்தின் தந்தை என்றும் அனைவராலும் அழைக்கப்பட்டு வருகிறார். அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட் மாகாணத்தில் அம்பேத்கரின் 19 அடி உயர சிலை வருகிற அக்டோபர் மாதம் 14ம் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்கோகீக் நகரத்தில் அம்பேத்கர் சர்வதேச மையத்துக்கு (ஏ.ஐ.சி.) சொந்தமான 13 […]

