முதல்வர் குறித்து சர்ச்சை! பொதுக்கூட்டத்தில் மன்னிப்பு கேட்கும் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.!

முதலமைச்சர் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரம் குறித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொதுக்கூட்டம் நடத்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான குமரகுரு கடந்த மாதம் (செப்.) 19ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார். இதனால் கொதித்தெழுந்த தி.மு.க.வினர் குமரகுருவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து […]
எம்.எஸ்.தோனி- ராம்சரண் திடீர் சந்திப்பு! முக்கிய பின்னணி!

மும்பை சென்றுள்ள தெலுங்கு நடிகர் ராம்சரண் அங்குள்ள சித்தி விநாயகரை வழிபட்ட உடனே இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ்.தோனியை சந்தித்துள்ளார். தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான ராம்சரண், ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தைத் தொடர்ந்து கோலிவுட் இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். தில்ராஜூ தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். பிரமாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் ஷங்கர் இத்திரைப்படத்தின் பாடல் காட்சிகளுக்காக மட்டும் ரூ.90 கோடி அளவுக்கு செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திரைப்படத்தில் […]
234 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறை! அமெரிக்கா என்ன செய்தது தெரியுமா?

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் தனது சொந்த கட்சியின் அதிருப்தியால் பதவிநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டின் 234 ஆண்டு கால வரலாற்றை திருப்பிப் போட்டுள்ளது. வருகிற 2024ம் ஆண்டு அமெரிக்கா அதிபர் தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில், அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகரான கெவின் மெக்கார்த்தி பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கெவின் மெக்கார்த்தி அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகராக பதவி வகித்து வந்தார். இவர் ஜனநாயக கட்சியுடன் இணக்கமாக செல்வாக சொந்த கட்சியான குடியரசுக் கட்சியினரே குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். […]
இந்தியாவில் இத்தனை போலி பல்கலைக்கழகங்களா? யு.ஜி.சி. அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் மொத்தம் 20 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக யு.ஜி.சி. அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இங்கு வழங்கப்படும் பட்டங்கள் எதுவும் செல்லாது என்றும் அதனால் எந்த வேலை வாய்ப்பையும் பெற முடியாது என்றும் அடுக்கடுக்கான அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு செயலர் மணிஷ் ஜோஷி இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘யுஜிசி விதிகளுக்கு மாறாக பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு பட்டங்களை வழங்குவதாக எங்களுக்கு தொடர் […]
டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு! நாளை அண்ணாமலை ஆஜராவாரா?

டி.ஆர்.பாலு எம்.பி. தொடர்ந்து அவதூறு வழக்கில் நாளை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தி.மு.க. எம்.பி.யான டி.ஆர்.பாலுவின் பெயர் கடந்த ஏப்ரல் 14ம் தேதி அண்ணாமலை வெளியிட்ட தி.மு.க.வினரின் சொத்துப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அந்த பட்டியலில் டி.ஆர்.பாலுவின் பெயரை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் அவர் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்ததாக அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இதனால் அதிர்ச்சியான டி.ஆர்.பாலு, அண்ணாமலை மீது சென்னை சைதாப்பேட்டை பெருநகர 17வது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு […]
உலகக்கோப்பை 2023: சச்சின் டெண்டுல்கருக்கு கிடைத்த கவுரவம்!

கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரை கவுரவப்படுத்தும் நோக்கில் அவரை உலகக்கோப்பை தொடரின் உலகளாவிய தூதராக நியமித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். கிரிக்கெட் என்றால் சச்சின் டெண்டுல்கர். சச்சின் டெண்டுல்கர் என்றால் கிரிக்கெட் என்று சொல்பவர்களும், சச்சினை பார்த்துதான் கிரிக்கெட்டுக்கே வந்தேன் என்று பல கிரிக்கெட் வீரர்கள் சொல்வதும் நாம் பார்த்ததே. அந்த வகையில் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவப்படுத்தியுள்ளது. 2023 உலகக்கோப்பை தொடர் நாளை (அக்.5) முதல் நவம்பர் மாதம் 19ம் […]
கேரளாவில் தொடங்கிய ‘தலைவர் 170’ படப்பிடிப்பு! பிசியான ரஜினிகாந்த்!

ரஜினிகாந்தின் 170வது திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதற்கு அடுத்ததாக ‘தலைவர் 170’ திரைப்படத்தில் தற்போது பிசியாகி உள்ளார். இத்திரைப்படத்தை ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய ஞானவேல் டைரக்ட் செய்கிறார். மேலும் இப்படத்தில் நடிகர்கள் அமிதாப்பச்சன், பகத்பாசில், ராணா ரகுபதி, நடிகைகள் மஞ்சுவாரியர், ரித்திகாசிங், துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்க […]
இந்தியா- இலங்கை திடீர் ஒப்பந்தம்! என்னவென்று தெரியுமா?

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை, இந்தியாவுடன் மருந்து இறக்குமதிக்காக புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு இலங்கை அரசு மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. அங்குள்ள பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டனர். ஒரு பக்கம் வேலையில்லா திண்டாட்டம் மற்றொரு பக்கம் மருந்து, அரிசி, பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் என சொல்ல முடியாத துக்கத்தில் தவித்து வந்தனர். அதை தவிர்க்க இந்தியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு […]
மத்திய அமைச்சரை சந்தித்தால் கூட்டணி என்று அர்த்தமா? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

பா.ஜ.க. உடனான கூட்டணி முறிவு என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மத்திய அமைச்சரை சந்தித்து பேசினால் கூட்டணியை பற்றி பேசினோம் என்று அர்த்தமாகிவிடுமா என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சேலத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறும்போது, ‘‘பாரதிய ஜனதா கட்சியுடன் இனி கூட்டணி கிடையாது என்பதை தெளிவாக கூறிவிட்டேன். இதில் எந்த மாற்றமும் இல்லை. இது 2 கோடி தொண்டர்களின் முடிவு […]
கேம் கேரக்டராக மாறிய சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!

ஆன்லைனில் தொடர்ந்து கேம் விளையாடி வந்த 17 வயது சிறுவன், அதில் வரும் கேரக்டராக தன்னை நினைத்துக் கொண்டதன் விளைவாக மனநலம் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணத்தைச் சேர்ந்த நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளான். சிறுவன் தன்னுடைய செல்போனில் கேம் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த நிலையில், அதற்கு முற்றிலும் அடிமையானதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக இரவு நேரத்தில் உறங்காமல் தொடர்ந்து […]

