News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

விஜய் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 70 சீட்.. ஆட்டோ சின்னத்துக்கு மனு..?

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அழுத்தி அழுத்தி சொன்ன பிறகும் எந்தக் கட்சியும் முன்வரவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு 70 சீட் என்று பேச்சுவார்த்தை நடக்கிறது என்று விஜய் கட்சியினர் குஷியாக இருந்தனர். ஆனால், காங்கிரஸ் பக்கமிருந்து எந்த அசைவும் இல்லை என்றதும் விஜய் டீம் செம அப்செட். இப்போது விஜய் எதிர்பார்ப்பது எல்லாமே அவருக்கு ஆட்டோ சின்னம் கிடைக்குமா என்பதுதான். இது குறித்து பேசும் விஜய் கட்சியினர், ‘’சிறிது காலம் முன்னர்வரை தேர்தல் ஆணையம் […]

அண்ணாமலை இமேஜ் டோட்டல் டேமேஜ்… சிங்கத்துக்கு பல்லைப் புடுங்கிட்டாங்க

எடப்பாடியை முதல்வர் பதவிக்கு வரவைப்பதற்கு நான் வரலைங்கண்ணா… எனக்கு பாஜகதான் முக்கியம் என்றெல்லாம் வீரவசனம் பேசிய அண்ணாமலை நிலவரம் இப்போது ரொம்ப ரொம்ப கேவலமாகிவிட்டது. எடப்பாடியை முதல்வராக்குவோம் என்று பேசிய வீடியோவைக் கேட்டு அவரது ஆதரவாளர்கள் அதிர்ந்து நிற்கிறார்கள். தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக பூத் கமிட்டி கூட்டத்தில் பேசினார். அப்போது அதிமுக கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சராக பாஜகவினர் கடுமையாக உழைப்போம் என்று பேசியிருக்கிறார். இப்போதுதான் அண்ணாமலைக்கு புத்தி வந்திருக்கிறது […]

தோசை மாவுக்கும் ஜிஎஸ்டி…? வரிவிகிதத்தில் கிடுகிடு மாற்றம்…

இந்தியாவில் நடுத்தர மற்றும் குறு தொழில்களை அழித்தொழித்த பெருமை ஜிஎஸ்டிக்கு உண்டு. இப்போது ஜிஎஸ்டி விகிதங்களை மாற்றியமைக்கும் அமைச்சர்கள் குழு ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி மறு சீரமைப்பு திட்டத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளது. தற்போதைய 12% மற்றும் 28% விகிதங்களை நீக்கி, இரண்டு விகிதங்களாக மாற்றியமைக்க ஒன்றிய அரசின் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது. புதிய அமைப்பு: அத்தியாவசிய பொருட்களுக்கு 5%, சாதாரண பொருட்களுக்கு 18%, மற்றும் சொகுசு பொருட்கள் / தீமை பொருட்களுக்கு 40% விகிதம். 12% விகிதத்தில் […]

அமித்ஷா முன்னிலையில் சேரப்போகும் திமுக விஐபி. அதிமுகவில் எத்தனை சீட்..?

தமிழகம் வரும் உள்துறை அமைச்சரும், பாஜகவின் முக்கிய மேலிடத் தலைவருமான அமித்ஷா, இன்று பாரதிய ஜனதா கட்சியின் பூத் கமிட்டி முதல் மண்டல மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று நெல்லை வருகிறார். இந்த சமயத்தில் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுகவை அரியணையில் இருந்து வீழ்த்துவோம் என்று அதிமுக – பாஜக கூட்டணி கட்சியினர் ஆவேசமாக பேசி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா […]

திருமாவளவன் விலை 50 கோடி ரூபாய்..? போட்டுக்கொடுத்த முத்தரசன்

கடந்த தேர்தலில் திமுகவிடம் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தல் நிதி வாங்கியதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைத்துவருகின்றன. இந்நிலையில் நான் மட்டுமா வாங்கினேன் வைகோ, திருமாவும் வாங்கினார் என்று போட்டுக் கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய முத்தரசன், ‘’திராவிட முன்னேற்ற கழகம் தேர்தலுக்கு பணம் கொடுத்தது. கையில் கொடுக்கவில்லை, நடு ராத்திரியில் கொடுக்கவில்லை, திரை மறைவில் கொடுக்கவில்லை. திமுகவின் வாங்கி கணக்கில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு […]

டிரெண்டிங் ஆகும் விஜய் மாநாடு… பாஜகவுக்கு பதில் சொல்வாரா..?

நடிகர் விஜய் இன்று நடத்தும் இரண்டாவது மாநில மாநாடு மிகப்பெரும் அளவில் டிரெண்டிங் ஆகிவருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மதுரையை நோக்கி ரசிகர்கள் ஓடோடி வருகிறார்கள். பத்திரிகை, மீடியா, சமூகவலைதளங்களில் இதுவே டிரெண்டிங் ஆகியுள்ளது. மதுரை பாரபத்தியில் இன்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2வது மாநில மாநாடு ஏற்பாடுகள் மிகவும் பிரமாண்டமாக முடிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணி வரை மாநாட்டை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், காலையிலே கூட்டம் […]

விஜய் மாநாட்டுக்கு வித்தியாச அழைப்பு. சூப்பர் புரோ

குடும்பத்தோடு வாருங்கள், கூட்டம் கூட்டமாக வாருங்கள் என்றெல்லாம் மாநாட்டுக்கு அழைப்பு விடப்படுவது சகஜம். இந்நிலையில் வீட்டிலிருந்து மாநாட்டு நிகழ்ச்சிகளைப் பாருங்கள் என்று விஜய் விட்டிருக்கும் அறிக்கை கவனிக்கத்தக்கதாக மாறியிருக்கிறது. 21ம் தேதி நடைபெறும் மாநாட்டையொட்டி நடிகர் விஜய், ‘’தமிழக மக்களை உயிராகப் போற்றி மதிக்கும் இந்த விஜய் பற்றி உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். உங்கள் மீதான உள்ளன்பு மிக்க அக்கறையின் காரணமாக இப்போது ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், […]

ஆம்புலன்ஸ் டிரைவரை எச்சரித்த எடப்பாடி பழனிசாமி..? திமுகவின் தில்லுமுல்லு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று கலசப்பாக்கம், போளூர், அணைக்கட்டு தொகுதியில் மக்களை சந்தித்துப் பேசினார். அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகே குழுமியிருந்த மக்களிடம் இபிஎஸ் எழுச்சியுரை நிகழ்த்தத் தொடங்கிய நேரத்தில் ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. அதை பார்த்தவுடன் எடப்பாடி பழனிசாமி கோபமாகிவிட்டார். ஏனென்றால், அவர் ஏந்தெந்த தொகுதிகளில் பேசத் தொடங்கினாலும் அங்கே இடையூறாக ஆம்புலன்ஸ் வந்துவிடுகிறது. ஆகவே எடப்பாடி, ‘’நான் தொடர்ந்து பல கூட்டங்களில் கவனித்து வருகிறேன். கூட்டத்துக்கு நடுவில் வேண்டுமென்றே ஆம்புலன்ஸை அனுப்பி இடையூறு […]

அன்புமணியை அவுட் ஆக்குவாரா டாக்டர் ராமதாஸ்…? பொதுக்குழு மோதல்

பாட்டாளி மக்கள் கட்சியில் முட்டல் மோதல் நடைபெற்று வருகிறது. அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தில் தினம் ஒரு திருப்பம் நடக்கிறது. அந்த வகையில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் அன்புமணி குரூப்பை அலறவிட்டுள்ளது. புதுச்சேரியை அடுத்த தமிழகப் பகுதியான பட்டானூரிலுள்ள சங்கமித்ரா திருமண மண்டபத்தில் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் 300-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், 200-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர், தலைவர் என 4 […]

சி.பி.ஆருக்கு திமுக ஓட்டு போடுமா..? மோடியின் தேர்தல் நாடகம்

கடந்த வாரம் ஸ்டாலினை சந்தித்துத் திரும்பிய சிபி ராதாகிருஷ்ணன் இப்போது துணை ஜனாதிபதியாக நிறுத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருப்பது தமிழக அரசியலை குலுக்கியிருக்கிறது. இது குறித்து பேசும் பாஜகவினர், ‘’தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் உச்சபட்ச அங்கீகாரம் அளிக்கும் பாஜக. பொதுவாழ்வில் அனைவரும் போற்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் பாரத நாட்டின் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்பது நம் அனைவருக்கும் பெருமை. அரசியல் வேறுபாடுகள் பாராட்டாமல் தமிழ்நாட்டின் அனைத்து எம்பிக்களும் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டியது கட்டாயம். மாண்புமிகு அப்துல் கலாம் அவர்களை ஜனாதிபதியாக கொண்டு வந்ததும் […]