பங்காரு அடிகளார் மறைவு! பிரதமர் இரங்கல் கடிதம்!

பங்காரு அடிகளாரின் மறைவுக்கு இரங்கல் கடிதத்தை பிரதமர் மோடி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் கொடுத்து அனுப்பி ஆறுதல் கூறினார். ஆதிபராக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் கடந்த 19ம் தேதி (அக்டோபர்) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். பங்காரு அடிகளாரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். மேலும் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பங்காரு அடிகளாரின் இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டது. இந்நிலையில் ஆதிபராசக்தி […]
டெல்லி மெட்ரோவில் முதியவர் மீது இளைஞர் தாக்குதல்! வீடியோ வைரல்!

டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த முதியவரை, இளைஞர் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி, மும்பை நகர மெட்ரோ ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களில் பல்வேறு அத்துமீறல்கள் நடக்கும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாவது வழக்கம். காதல் ஜோடிகளின் அத்துமீறல்கள், வன்முறை சம்பவங்கள் என வெளியாகும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் நெஞ்சை பதற வைத்துவிடுகிறது. இந்நிலையில் மெட்ரோ ரெயிலில் பயணித்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவரை இளைஞர் சரமாரியாக தாக்கிய சம்பவம் […]
உலக பொருளாதாரத்தில் இந்தியா 3வது இடம் பிடிக்கும்! எப்போது தெரியுமா?

வருகிற 2030ம் ஆண்டுக்குள் உலக பொருளாதார வரிசையில் இந்தியா 3வது இடத்தை பிடிக்கும் என்று சர்வதேச நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. உலக பொருளாதார வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து சீனா 2வது இடத்திலும், ஜப்பான் 3வது இடத்திலும், ஜெர்மனி 4வது இடத்திலும் இருக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரையில் உலக பொருளாதார வரிசையில் 5வது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் எஸ் அண்ட் பி குளோபல் மார்க்கெட் இன்டெலிஜென்ஸ் என்ற சர்வதேச நிறுவனம் ஒன்று ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றை […]
அடுத்த 2 மாதங்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

அடுத்த 2 மாதங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் நடைபெற்ற ஹெல்த் வாக் சாலை ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், வருகிற நவம்பர் மாதம் 4ம் தேதி 38 மாவட்டங்களில் 8 கி.மீட்டர் தூரம் கொண்ட ஹெல்த் வாக் சாலை திட்டம் தொடங்கப்பட உள்ளது என்று தெரிவித்தார். இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகரில் […]
என் இதயம் துடிக்கிறது- ‘தலைவர் 170’ ரஜினிகாந்த் வைரல் பதிவு!

தலைவர் 170 குறித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் ‘தலைவர் 170’ திரைப்படத்தின் மூலம் அடுத்த வெற்றியை கையில் எடுத்துள்ளார். இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாசில், மஞ்சுவாரியர், துஷாரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘தலைவர் 170’ இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கான படப்பிடிப்புகள் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது வெகு […]
தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மழை? சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறிய நிலையில், அது நேற்று அதிதீவிர புயலாக உருவெடுத்தது. அதன் பின்னர் மிகத்தீவிர புயலாக மாறிய நிலையில் அதற்கு ஹமூன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வங்கதேசத்தில் கெபுரா& […]
தலைமை தேர்தல் அதிகாரியுடன் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை!

மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழக தேர்தல் அதிகாரி, அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவுக்கு வர உள்ளதால் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் அல்லது மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று கூறப்படும் நிலையில் பிரதான கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் […]
நடிகரான இ.கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்! முக்கிய தகவல்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் நடிகராக அவதாரம் எடுத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் ‘அரிசி’ திரைப்படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தில் விவசாயி கதாபாத்திரத்தில் நடிக்கும் இரா.முத்தரசனுடன், சிசர் மனோகர், கோவி.இளங்கோ, ராஜா திருநாவுக்கரசு, அர்ஜுன்ராஜ், மகிமை ராஜ், வையகன் அன்பு, ராணி, சுபா, பழனி மணிசேகரன், கொண்டைமண்டை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். எஸ்.ஏ.விஜயகுமார் இயக்கத்தில் உருவாகும் […]
நடிகை அவந்திகா மிஸ்ரா! Gorgeous Clicks

நடிகை நயனா சாய் வெளியிட்ட ஹாட் போட்டோசை பார்த்து இவர், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ஜெராக்ஸ் காப்பியா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். நடிகை நயனா சாய், நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பிடித்த பிறகு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்பிற்காக காத்திருக்கிறார் நயனா சாய். அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள அவர் தனது பல்வேறு புதிய புகைப்படங்களை இணையதளத்தில் […]
வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் தளபதி 68

தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தங்களின் 25-வது திரைப்படத்திற்காக தளபதி விஜய்யுடன் இணைந்துள்ளனர். மிகுந்த பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்றுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ‘பிகில்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தளபதி விஜய்யுடன் […]

