News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய அருணை கல்லூரியில் ஐ.டி.ரெய்டு!

அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய அருணை பொறியியல் கல்லூரியில் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை அடுத்த  மாத்தூர் வேலுநகர்  பகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய அருணை பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் வருமானவரித்துறையினர் அருணை பொறியியல் கல்லூரி மற்றும் அமைச்சரின் இல்லம் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இது தி.மு.க.வினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்கிருந்து கிடைத்துள்ள […]

தீபாவளிக்கு முன்பாகவே கலைஞர் உரிமைத் தொகை? குடும்பத்தலைவிகள் எதிர்பார்ப்பு!

தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைத்துவிடும் என்று குடும்பத் தலைவிகள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15ம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.  இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்தவர்களில் 1.06 கோடி பேர் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2 மாதங்களாக அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பித்தவர்களில் 56.50 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீண்டும் மேல்முறையீடு […]

அரசு பள்ளிகளில் நாள்தோறும் நீட் பயிற்சி வகுப்புகள்! முக்கிய அறிவிப்பு!

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வு, ஜே.இ.இ. தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.   மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற ஜே.இ.இ. எனும் பயிற்சியும் தேவைப்படுகிறது. ஏழை, எளிய மாணவர்களால் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற முடியாமல் உள்ளதால், தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை ரத்து செய்ய வேண்டும் கோரிக்கை வைத்து […]

அகதிகள் முகாமையும் விட்டுவைக்காத இஸ்ரேல்! ஐ.நா. கண்டனம்!

காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 7ம் தேதி இஸ்ரேல் -ஹமாஸ் போர் தொடங்கி இன்றளவும் நடைபெற்று வருகிறது. இதில் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி, தரைவழி என சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல்- ஹமாஸ் போர் விளைவாக இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ள நிலையில் தற்போது ஒரு முக்கிய அதிர்ச்சி […]

சென்னையில் கண்டெய்னர் லாரிகளுக்கு 3 நாட்கள் தடை! எப்போது தெரியுமா?

தீபாவளி பண்டிகையின் போது போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்னைக்குள் வர 3 நாட்களுக்கு கண்டெய்னர் லாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வருகிற 12ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை கோலாகமாக கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். அதன்படி கோயம்பேடு பேருந்து நிலையம், கே.கே.நகர், தாம்பரம் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் பல்வேறு ஊர்களுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடக்கூடாது […]

விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் அண்ணாமலை! புதியவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்!

புதியவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது விஜய் ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று இலங்கையில் நடைபெற உள்ள மலையகத் தமிழர்களுக்கான நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இலங்கை செல்கிறார். அதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறும்போது, தோழர் சங்கரய்யாவுக்கு கவுரவ பட்டம் கொடுக்க வேண்டும் என்பது தன்னுடைய கருத்து என்று தெரிவித்ததுடன், […]

நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்! திரையுலகினர் அஞ்சலி!

பழம்பெரும் நடிகரான பாலையாவின் மகன் ஜூனியர் பாலையா இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.   பழம்பெரும் நடிகர் பாலையாவின் மூன்றாவது மகன்தான் ஜூனியர் பாலையா. இவருக்கு வயது 70. ரகு என்ற தனது பெயரை சினிமாவுக்காக ஜூனியர் பாலையா என்று மாற்றிக் கொண்ட இவர் கடந்த 1975ம் ஆண்டு வெளியான ‘மேல்நாட்டு மருமகள்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.   இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், கரக்காட்டக்காரன் […]

மகளிர் உரிமைத் தொகை மேல்முறையீடு! முக்கிய அறிவிப்பு வெளியீடு!

மகளிர் உரிமைத் தொகைக்காக மேல் முறையீடு செய்தவர்களுக்கு வருகிற 25ம் தேதிக்குள் குறுந்தகவல் வந்துசேரும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15ம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.  இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்தவர்களில் 1.06 கோடி பேர் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2 மாதங்களாக அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பித்தவர்களில் 56.50 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீண்டும் […]

‘சூப்பர் ஹீரோ’ விஜய்! நடிகர் அர்ஜூன் கொடுத்த பட்டம்!

நடிகர் விஜய்யை ‘சூப்பர் ஹீரோ’ என்று பட்டம் கொடுதுத அழைத்த நடிகர் அர்ஜூனின் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.   இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கவுதம்வாசுதேவ் மேனன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து கடந்த மாதம் 19ம் தேதி வெளியான திரைப்படம் ‘லியோ’. இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், வசூலில் பாக்ஸ் ஆபிசை தெறிக்கவிட்டுள்ளது.   இதைத்தொடர்ந்து சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று (நவ.1) […]

தீபாவளி சிறப்பு ரெயில்! முன்பதிவு இன்று தொடக்கம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட உள்ள சிறப்பு ரெயில்களில் பயணம் செய்ய பயணிகள் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   வருகிற 12ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-  நாகர்கோவில் இடையே 4 சிறப்பு ரெயில்களை இயக்கப் போவதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.   இது குறித்து தெற்கு ரெயில்வே விடுத்துள்ள அறிக்கையில், ‘‘தீபாவளி பண்டிகை காலத்தில் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் […]