போர் எதிரொலி! இஸ்ரேலின் உறவை துண்டித்த பஹ்ரைன்!

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்துள்ள பஹ்ரைன் நாடு தனது உறவை துண்டித்துக் கொள்வதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேல் ராணுவம்& காசா அமைப்பினரின் போர் தொடங்கியது. இதில் இஸ்ரேல் ராணுவம் காசா மீது வான்வழி மற்றும் தரை வழி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், அதில் குழந்தைகள் மற்றும் பெண்கள்தான் அதிகம் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. இன அழிப்புக்கு இணையான போர் தாக்குதல் […]
டிரெண்டாகும் ‘அயலான்’ ரகுல் பிரீத் சிங்! Exclusive Clicks

இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ரகுல் பிரீத்சிங் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் அயலான். 2024ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அயலான் திரைப்படம் ரிலீசாக உள்ளது. சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமான அயலானில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ரகுல் பிரீத்சிங், யோகிபாபு, இஷாகோபிகர், கருணாகரன், பானுப்பிரியா, ஷரத் கெல்கர், பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். வேற்றுகிரகத்தில் இருந்து வரும் வேற்று கிரகவாசிக்கும், நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் இடையிலான இப்படத்தில் வரும் காட்சிகளுக்கான தொழில்நுட்பப் […]
பாலியல் வன்கொடுமைக்கு பின் 3 துண்டுகளாக்கப்பட்ட பெண்! அதிர்ச்சி தகவல்!

தலித் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் அவரின் உடலை 3 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலித் பெண்கள் தங்களின் உயிரையும் மானத்தையும் காப்பாற்றிக் கொண்டு பயந்து பயந்து வாழும் சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிகரித்துள்ளது. தற்போது நடந்துள்ள கோர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. உத்தரபிரதேச மாநித்தில் அமைந்துள்ள பண்டா கிராமம். இங்கு ராஜ்குமார் சுக்லா என்பவரின் வீட்டில் 40 வயதான தலித் பெண் ஒருவர் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். அந்த […]
தாஜ்மகாலை உண்மையில் கட்டியது யார்? டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல்!

தாஜ்மகாலை உண்மையில் கட்டியது ஷாஜகான் இல்லை, ராஜா மான்சிங்கின் அரண்மனையைத்தான் அவர் சீரமைத்துள்ளார் என்று டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். கட்டிடக்கலைக்கே பெருமை, உலக அதிசயம், காதலர்களின் நினைவுச்சின்னம் என்று போற்றப்பட்டு வரும் தாஜ்மால் உத்தரபிரதேச மாநிலத்தின் ஆக்ராவின் யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. சுமார் 42 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த கட்டிடம் முழுவதும் பளிங்கு கற்களால் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. முகாலய மன்னன் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் நினைவாக தாஜ்மகாலை கட்டினார் […]
புதிய சாதனை படைத்த ‘காவாலா’ பாடல்! என்னவென்று தெரியுமா?

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்டு 10ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் பல்வேறு சாதனை படைத்துவிட்டது. அதற்கு பிள்ளையார் சுழி போட்டது எதுவென்றால் அது காவாலா பாடல்தான். இத்திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், சஞ்சய்தத், விநாயகன், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், யோகிபாபு, வசந்த் ரவி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. அதோடு காவாலா பாடலின் புரோமோவுக்கு ஒரு புரோமோ கொடுத்து அனிருத்தும், நெல்சனும் டிரெண்டானார்கள். அதைத்தொடர்ந்து லிரிக்கல் காவாலா பாடல் வெளியாகி […]
மேடையில் நடனமாடிய முதலமைச்சர்! தொண்டர்கள் உற்சாகம்!

கர்நாடக உதயநாளை முன்னிட்டு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, நடனக்குழுவினருடன் இணைந்து நடமானடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மைசூர் என்ற பெயர் கர்நாடகா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட 50வது ஆண்டு பொன்விழா கர்நாடகத்தில் களைகட்டியது. பொன்விழாவை முன்னிட்டு கர்நாடக மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ள கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா, விஜயநகர மாவட்டம் ஹம்பிக்கு நேற்று இரவு (நவ.2) சென்றிருந்தார். அங்கு விழா மேடையில் ‘வீர […]
தி.நகர் ரெசிடென்சி ஓட்டலில் ஐ.டி. ரெய்டு! பரபரப்பான சென்னை!

சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் ரெசிடென்சி ஓட்டலில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானவரித்துறையினர் இன்று காலை முதல் சுமார் 100க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் ஒட்டுமொத்த தமிழகமே பரபரப்பாகி உள்ளது. தி.மு.க. அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் அருணை பொறியியல் கல்லூரியில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்ற செய்தியை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு முக்கிய தகவல் கிடைத்துள்ளது. சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல ஓட்டலான […]
உச்சநீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நீதிபதி! என்ன செய்தார் தெரியுமா?

உச்சநீதிமன்ற நீதிபதி தன்னை ‘மை லார்டு’ என்று அழைக்காதீர்கள் என மூத்த வழக்கறிஞரை கேட்டுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிமன்றங்களில் வாதாடும் வழக்கறிஞர்கள், நீதிபதிகளை பொதுவாக ‘மை லார்டு’ அல்லது ‘யுவர் லார்ட்ஷிப்’ என்று அழைப்பதை நாம் பார்த்திருப்போம். இது ஆங்கிலேயர் காலத்தைய வழக்கம் என்பதால், இதனை அடிமைத்தனத்தின் அடையாளம் என்று கூறி இதற்கு தடை விதித்து கடந்த 2006ம் ஆண்டு இந்திய பார் கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானம் கொண்டு வரப்பட்ட […]
தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு அலர்ட்! இந்திய வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள் ஆகியவற்றில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஆங்காங்கே மழை கொட்டி வருகிறது. அத்துடன் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு […]
தீபாவளி Scam: பல கோடி ரூபாய் மோசடி!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பரவி வரும் போலி விளம்பரங்களை நம்பி மக்கள் பல கோடி ரூபாய் அளவுக்கு பணத்தை இழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்கள் தற்போது ஆன்லைன் மூலம் பல பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதிலும் பண்டிகை காலம் என்றால், ஆன்லைன் விளம்பரங்கள் அதிகளவில் குவிந்து விடுகிறது. பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுடன் சேர்த்து ஒரு சில அங்கீகரிக்கப்படாத மோசடி நிறுவனங்களும் தங்களது கவர்ச்சிகரமான சலுகை விளம்பரங்களை வெளியிடுகிறது. […]

