News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மேடையில் விழுந்து விழுந்து சிரித்த பிரியங்கா காந்தி! என்ன நடந்தது தெரியுமா?

மத்தியபிரதேசத்துல நடந்த தேர்தல் பிரசார மேடையில தொண்டர் ஒருத்தர் செய்த செய்கையை பார்த்த பிரியங்கா காந்தி விழுந்து விழுந்து சிரிச்ச வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   மத்தியபிரதேசத்திற்கு வருகிற 25ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பிரதான கட்சிகள் தேர்தல் பிரசார களத்தில் தீவிரம் காட்டி வருகிறது.   அந்த வகையில் மத்தியபிரதேசம் இந்தூர் நகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற பேரணி தொலைக்காட்சியில் […]

அ.தி.மு.க. பெயர், கொடியை பயன்படுத்த தடை! சிக்கலில் ஓ.பன்னீர்செல்வம்!

அ.தி.மு.க. பெயர் மற்றும் கொடியை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மற்றும் ஆதரவாளர்கள் இனிமேல் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து விலக்கப்பட்ட நிலையில் அவர் வகித்து வந்த பதவியும் பறிக்கப்பட்டது. இருப்பினும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து அ.தி.மு.க. பெயர், கொடியை பயன்படுத்தி வந்த நிலையில் இது தொடர்பாக உரிமையியல் வழக்கு தொடரப்பட்டது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்று தன்னை ஓ.பன்னீர்செல்வம் கூறி வந்ததால் தொண்டர்கள் இடையே குழப்பத்தை […]

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ப்ளூ காய்ச்சல்! அமைச்சர் தகவல்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ப்ளூ காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அவர் தற்போது மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி ஓய்வில் உள்ளார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை பொது சுகாதாரத்துறை இயக்குனரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் உள்ளிட்ட திட்டங்களை புதுப்பித்து தொடங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பயனாளிகளுக்கு உதவித் தொகை மற்றும் குழந்தை நல பரிசு பெட்டகத்தை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய […]

Thuglife கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம்!

உலகநாயகன் கமல்ஹாசன் தன்னோட 69வது பர்த்டேவ கொண்டாடிட்டு இருக்காரு. பிரபலங்களோட பர்த்டேன்னாலே செலபிரேஷன்தானே. அந்த வகையில சென்னையில நடிகர் கமல்ஹாசனோட பர்த்டே பார்ட்டி ரொம்பவே கிராண்டா நடந்துச்சு. இந்த பார்ட்டியில யாரெல்லாம் கலந்துக்கிட்டாங்கன்னு உங்களுக்கு தெரியுமா?   ஆக்டர் சூர்யா, பாலிவுட் ஆக்டர் அமீர்கான், பார்த்திபன், குஷ்பு, ரம்யாகிருஷ்ணன், சுஹாசினி, ஏ.வி.எம்.சரவணன்னு பல செலபிரிட்டீஸ் கலந்துக்கிட்டாங்க. மேலும் கமல்ஹாசனோட சேர்ந்து நடிச்ச அனுபவத்த ஷேர் பண்ணிக்கிட்ட செலபிரிட்டீஸ் அழகா செல்பிஸ் எடுத்து தங்களோட ஹேப்பிய ஷேர் பண்ணாங்க. […]

காசாவில் 4,104 குழந்தைகள் பலி! ஐ.நா. பொதுச் செயலாளர் அதிர்ச்சி தகவல்!

இஸ்ரேல்& ஹமாஸ் போர் விளைவாக காசாவில் இதுவரை 4,104 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. பொதுச் செயலாளர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் (அக்டோபர்) 7ம் தேதி இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர் தொடங்கி இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தின் வான்வழி மற்றும் தரை வழி தாக்குதலில் காசாவில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதில் 4,104 பேர் குழந்தைகள், 2,640 பேர் பெண்கள் என்பது அதிர்ச்சியையும், […]

தீபாவளி கொண்டாட்டம்! சென்னையில் 18,000 போலீசார் குவிப்பு!

சென்னையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை வருகிற 12ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க வணிக வளாகங்கள், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் குவிந்து வருகின்றனர். இதனால் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பல்வேறு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், பொது […]

தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் சொன்ன பதில்!

தி.மு.க.வுடன் கூட்டணியா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சுவாரசியமான பதிலை வழங்கியுள்ளார்.   நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.   சென்னை  எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் உபகரணம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட கமல்ஹாசன் உபகரணத்தை திறந்து வைத்து பேசினார். […]

பிற மாநில ஆம்னி பேருந்துகளுக்கு தமிழக அரசு உத்தரவு!

பிற மாநில ஆம்னி பேருந்துகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. வருகிற 12ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி ரெயில்களிலும், அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும் தங்களின் பயணத்தை மேற்கொள்ள முன்பதிவு டிக்கெட் வசதி உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகின்றனர். பண்டிகை காலங்களின் போது ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிப்பதாக அடிக்கடி புகார்கள் எழுவதும், அந்த  ஆம்னி பேருந்துகள் பறிமுதல் […]

தொடரும் ஐ.டி.சோதனை! அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் எவ்வளவு கிடைத்தது தெரியுமா?

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வரம் நிலையில் கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுப்பணித்துறை அமைச்சரான எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய 40 இடங்களில் கடந்த 3ம் தேதி முதல் வருமானவரித்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். 5வது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், ஓட்டல்களிலும், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமானவரித்துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் கோவையில் உள்ள […]

10 ரூபாய் நாணயத்தை பெற மறுத்தால்…. என்ன நடக்கும் தெரியுமா?

10 ரூபாய் நாணயங்களை பெற மறுப்பது சட்டப்படி குற்றம் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.   கடந்த 2009ம் ஆண்டு 10ரூபாய் நாணயம் இந்திய ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டது. பல ஆண்டுகளாக இந்த 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ள போதிலும், மக்கள் சிலர் அவற்றை வாங்க மறுக்கிறார்கள். மேலும் இது போன்ற சம்பவங்கள் பெருமளவில் கிராமப்புறங்களில் நடப்பதாக பொது மக்கள் சிலர் வேதனை தெரிவித்து வருகின்றனர்.   இதெல்லாம் கூட பரவாயில்லை. அரசு பேருந்துகளில் […]