News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கமலின் ‘தக் லைஃப்’! சிம்பு நடிக்க மறுத்த காரணம் இதுதான்!

நடிகர் கமல்ஹாசனுடைய தக் லைப் படத்துல நடிகர் சிம்பு ஏன் நடிக்க மறுத்தார் அப்படிங்குறதுக்கான காரணம் இப்ப தெரிய வந்திருக்கு.   டைரக்டர் மணிரத்னம் இயக்கத்துல தக்லைப் படத்துல நடிகர் கமலஹாசன் நடிச்சிட்டு இருக்காரு. அவரோட பர்த்டே அன்னிக்கு படத்துக்கான டைட்டில படக்குழுவினர் வெளியிட்டாங்க. இங்கிலிஷ்ல படத்தோட டைட்டில் இருக்குன்னும், சாதிப்பெயர பயன்படுத்தியிருக்காருன்னும் பல  இஸ்யூஸ் கிரியேட் ஆச்சு.   இந்த படத்துல கமல்கூட துல்கர்சல்மான் நடிச்சிட்டு இருக்காரு. துல்கர்சல்மான் கேரடக்டர்ல நடிக்க இருந்தது சிம்புதானாம். ஆனா […]

நேற்று ராஷ்மிகா… இன்று கத்ரீனா… நாளை யார்? மிரட்டும் ஏ.ஐ. தொழில்நுட்பம்!

நடிகை ராஷ்மிகாவின் ஆபாச வீடியோ வெளியானதை தொடர்ந்து தற்போது பிரபல நடிகையான கத்ரீனா கைபின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை ராஷ்மிகாவின் முகத்தை வேறொரு பெண்ணின் உடலில் வைத்து மார்பிங் செய்து டீப் டெக்னாலஜி மூலமாக வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலானது. இதை பார்த்து அதிர்ச்சியான நடிகை ராஷ்மிகாவும், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்களும் தங்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். […]

ஓட்டப்பந்தய பயிற்சியில் மாரடைப்பு! 14 வயது சிறுவன் பலி!

ஓட்டப்பந்தயத்தில் ஓடிக் கொண்டிருந்த 14 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.   அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நாக்ஸ் மேக்ஈவன் என்ற 14 வயது சிறுவன் வசித்து வந்தான். டேவிஸ் வெஸ்டர்ன் உயர்நிலையில் படித்து வந்த நாக்ஸ் மேக்ஈவன், ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம் கொண்டிருந்ததோடு பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளான். தான் வசித்து பகுதி மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருந்த சிறுவன் நாக்ஸ் மேக்ஈவன், தன்னார்வலராகவும் செயலாற்றி வந்துள்ளான். […]

மற்றொரு பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் பொன்முடி!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தற்போது மேலும் ஒரு பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சைதாப்பேட்டையில் இன்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்காமல் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்துள்ளார். ஏற்கனவே நடைபெற்ற மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி,தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று பகிரங்கமாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக […]

புதிய கொள்கையை வகுத்து ஜவுளித் தொழிலை காப்பாற்றுங்கள்- எடப்பாடி பழனிசாமி!

புதிய ஜவுளிக் கொள்கையை வகுத்து ஜவுளித் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.   இது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், ‘‘மின் கட்டணத்தை குறைக்கக் கோரி அமைச்சர்களையும், அரசு உயர் அதிகாரிகளையும், ஜவுளித்துறையினர் சந்தித்து கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் விசைத்தறி மற்றும் ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பினர் சங்கம் கடந்த 5ம் […]

தி.மு.க.வும் நானும் எதற்கு பயப்படமாட்டோம்! எ.வ.வேலு உறுதி!

தி.மு.க.வும், நானும் எதற்கும் பயப்படமாட்டோம் என்று அமைச்சர் எ.வ.வேலு, செய்தியாளர்கள் சந்திப்பின் போது உறுதியாக தெரிவித்தார். பொதுப்பணித்துறை அமைச்சரான எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய 40 இடங்களில் கடந்த 3ம் தேதி முதல் வருமானவரித்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். 5வது நாளாக நேற்று சோதனை நடைபெற்றது. அதன்படி  எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், ஓட்டல்களிலும், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமானவரித்துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அதேபோல் கோவையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் உறவினரான மீனா […]

சென்னையில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை! பரபரப்பு தகவல்கள்!

சென்னையில் ஒரே நேரத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை முதல் சென்னையை அடுத்த பள்ளிக்கரணை, படப்பை மற்றும் பெரும்பாக்கம் ஆகிய 3 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து கிடைத்த முதல்கட்ட தகவலின்படி, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கக் கூடிய நபர்கள் மற்றும் விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை […]

நாகாலாந்து விவகாரம்! ஆர்.எஸ்.பாரதிக்கு எச்சரிக்கை விடுத்த இல.கணேசன்!

நாய்கறி விவகாரம் குறித்து பேசிய ஆர்.எஸ்.பாரதியை, நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் கடுமையாக விமர்சித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி நாய்க்கறி உண்ணும் நாகாலாந்து மக்களே அங்கே ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியை விரட்டி அனுப்பி விட்டதாகவும், அப்படியானால் உப்பு போட்டு உண்ணும் தமிழர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்று பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆர்.எஸ்.பாரதிக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், […]

எ.வ.வேலு ஐ.டி.ரெய்டு! அந்த 2 சூட்கேசில் என்ன இருக்கிறது?

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் 5வது நாளாக சோதனை நடத்தி வரும் நிலையில் அதிர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 3ம் தேதி முதல் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் அருணை பொறியியல் கல்லூரியில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்த தொடங்கினர். பொதுப்பணித்துறை அமைச்சரான எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய 40 இடங்களில் கடந்த 3ம் தேதி முதல் வருமானவரித்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். […]

அறிவாலயத்திற்கு அதிர்ச்சி தந்த பிரபலம்! அ.தி.மு.க.வில் இணைந்தார்!

தி.மு.க. மீனவர் அணியின் முன்னாள் அமைப்பாளரான நசரேத் பசிலியான் தற்போது அ.தி.மு.க.வில் இணைந்து அறிவாலயத்திற்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 2024ம் ஆண்டு நாடாளுமன்ற நெருங்க நெருங்க இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்று கூறும் அளவுக்கு ஆகிவிட்டது அரசியல்களம். ஆளும் கட்சியில் இருந்து அவ்வளவு எளிதில் யாரும் எதிர்க்கட்சிக்கு சென்றுவிடமாட்டார்கள். ஆனால் அதே நேரத்தில் தேர்தல் வரப்போகிறது என்றால் எதுவும் சாத்தியம்தான் என்பதை நிரூபித்துள்ளது இன்று நடந்த மிகப்பெரிய நிகழ்வு. தி.மு.க. மீனவர் அணியின் முன்னாள் அமைப்பாளராக இருந்த […]