கந்தசஷ்டி விழா! திருச்செந்தூருக்கு 2 சிறப்பு ரெயில்கள் இயக்கம்!

கந்தசஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு 2 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம்படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 13ம் தேதி கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இத்திருவிழா வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளநிலையில் முக்கிய நிகழ்வான […]
மோசமடைந்து வரும் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடல்நிலை!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டவிரோத பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் திடீரென்று நெஞ்சுவலிக்கிறது என்று கூறியதால், ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். செந்தில் பாலாஜியை மருத்துவர்கள் பரிசோதித்த நிலையில், அவருக்கு இதயத்தில் 3 அடைப்பு இருப்பதாக தெரிவித்த நிலையில் இதனை இ.எஸ்.ஐ.மருத்துவர்களும் உண்மை […]
மாரடைப்பால் உயிரிழந்த விமானி! அதிர்ச்சி தகவல்கள்!

பயிற்சி மேற்கொண்டிருந்த 30 வயது விமான மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் டெல்லியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானியாக 30 வயதான ஹிம்மனில் குமார் என்பவர் பணியாற்றி வந்தார். நேற்று (நவ.16) காலை முனையம் 3ல் பயிற்சி மேற்கொண்டிருந்த போது திடீரென்று ஹிம்மனில்குமாருக்கு லேசான நெஞ்சவலி ஏற்பட்டுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக பணியாளர்கள், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் […]
ம.பி., சத்தீஷ்கரில் இன்று விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஷ்கர் மாநிலங்களில் இன்று காலை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாகவும், சத்தீஷ்கரில் 70 தொகுதிகளுக்கான 2ம்கட்ட வாக்குப்பதிவும் இன்று காலையில் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. களத்தில் இறங்கி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட கட்சியினர் தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களிடம் வாக்குகளை சேகரித்தனர். […]
தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் மாற்றம்! தலைமை செயலாளர் உத்தரவு!

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார். அதன்படி சிறப்பு திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளராக பிரதாப் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை செயலாளராக மேகநாத ரெட்டி கூடுதல் பொறுப்பு வகித்திருந்த நிலையில் தற்போது பிரதாப் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை செயலாளராக ஜெயகாந்தன் ஐ.எ.ஏஸ்.சை நியமித்து தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இணை […]
நெல்சனை அழைத்து பேசிய ரஜினிகாந்த்! என்ன சொன்னார் தெரியுமா?

ஜெயிலர் திரைப்பட வெற்றிக்கு பிறகு இயக்குனர் நெல்சனை, நடிகர் ரஜினிகாந்த் சந்தித்த பேசியதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்டு 10ம் ஜெயிலர் திரைப்படம் உலகளவில் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை படைத்துள்ளது. இத்திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யாகிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. பான் இந்தியா திரைப்படமான ஜெயிலருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிகளவு எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இத்திரைப்படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் இசையும் […]
கிணற்றில் சடலமாக மிதந்த கல்லூரி மாணவர்! திருப்பத்தூரில் அதிர்ச்சி!

தீபாவளி பண்டிகையின் போது மாயமான கல்லூரி மாணவர், கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் திருப்பத்தூரில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், புங்கம்பட்டு நாடு ஊராட்சி, கல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான வேடி என்ற இளைஞர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்த மாணவர் வேடி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது தீபாவளி பண்டிகையின் போது திடீரென்று மாயமாகியுள்ளார். […]
ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல்! பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கை!

ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. தேசிய தலைவர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசினார். 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்திற்கு வருகிற (நவம்பர்) 25ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் ராஜஸ்தானில் ஆளும்கட்சியான காங்கிரசும், பா.ஜ.க.வும் தேர்தல் பிரசார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மீண்டும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று காங்கிரசும், எப்படியும் ஆட்சியை கைப்பற்றியே தீர வேண்டும் என்று […]
2 மாத கர்ப்பிணிக்கு அமெரிக்காவில் நடந்த கொடூரம்!

2 மாத கர்ப்பிணியாக இருந்த மனைவியை கணவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அமெரிக்கா சிகாகோவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் உழவூரைச் சேர்ந்த மீரா என்ற 32 வயதான பெண், தனது கணவர் அமல்ரெஜி மற்றும் 3 வயது குழந்தையுடன் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் வசித்து வருகிறார். இதில் மீரா தற்போது 2 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், நேற்றிரவு கணவர் அமல் மீராவை திடீரென்று துப்பாக்கியால் சுட்டுள்ளார். இது குறித்து தகவல் […]
சென்னையில் 23 பேர் குண்டர் சட்டத்தில் கைது! முழு விவரம் உள்ளே!

சென்னையில் கடந்த ஒரு வாரகாலத்தில் மட்டும் 23 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நவம்பர் 15ம் தேதி வரை (நேற்று) மொத்தம் 588 பேர் திருட்டு, செயின் பறிப்பு, வழிப்பறி, பணமோசடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் பல்வேறு குற்ற வழக்குகளுடன் தொடர்புடைய கைதிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு […]

