News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மதி அனுபவ அங்காடி கட்டிடம்! அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்!

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கட்டப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் மதி அனுபவ அங்காடி கட்டடத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தமிழகத்தில் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில் மதி அனுபவ அங்காடி கட்டிடத்தின் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மதி அனுபவ அங்காடி கட்டிடத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும் […]

இன்று கூடிய சட்டமன்ற சிறப்புக் கூட்டம்! புதிய தகவல்கள்!

தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் பல சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சரியில்லாத போதிலும், சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். மிகவும் சோர்வாக காணப்பட்ட முதலமைச்சர் மக்கள் நலப்பணியே முக்கியம் என்று உரை நிகழ்த்தி தீர்மானங்களை நிறைவேற்றியது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.   ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட சட்டமசோதாக்களை சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு நிறைவேற்றி மீண்டும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட […]

மீண்டும் நிறைவேறிய 10 மசோதாக்கள்! சட்டமன்றத்தில் அதிரடி!

ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் இன்று சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.   தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 13ம் தேதி தமிழகத்தில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை திருப்பி அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன்னதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் […]

உலகக்கோப்பை இறுதிப்போட்டி! பரபரப்பான அகமதாபாத்!

ஐ.சி.சி. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு அகமதாபாத்தில் ஓட்டல்களில் தங்கும் அறைகள் மற்றும் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.   ஐ.சி.சி. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ம் தேதி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இப்போட்டித் தொடரின் லீக் போட்டிகள், காலிறுதி, அரையிறுதிப் போட்டிகள் முடிவடைந்து தற்போது இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. இந்தியா தான் விளையாடிய எந்த போட்டியிலும் தோல்வியை சந்திக்காமல் […]

காங்கிரசில் இணைந்த விஜயசாந்திக்கு முக்கிய பொறுப்பு!

பா.ஜ.க.வில் இருந்து விலகிய நடிகை விஜயசாந்தி, காங்கிரசில் இணைந்த நிலையில் அவருக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.   முன்னாள் மேடக் எம்.பி.யும், அதிரடி நடிகையுமான விஜயசாந்தி பா.ஜ.க.வில் இணைந்து செயல்பட்டு வந்தார். தேர்தலில் சீட் கேட்டு கிடைக்காததால் அதிருப்தியடைந்த விஜயசாந்தி, பா.ஜ.க.வில் இருந்து விலகுகிறார் என்ற செய்தி தீயாக பரவியது.   இதை ஊர்ஜிதம் செய்யும் வகையில் பா.ஜ.க.வின் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்த விஜயசாந்தி, காங்கிரசில் இணைய உள்ளார் என்ற செய்தியும் கடந்த […]

பொறுப்பை உணர்ந்து அடங்கி இருங்கள்! ஆளுநருக்கு முதல்வர் எச்சரிக்கை!

இன்றைய சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவிதான். இருந்தாலும் இருக்கும வரை மக்களாட்சி தத்துவத்துக்கு உட்பட்டு அடங்கி செயல்பட வேண்டும் என்றும் தனது பொறுப்பை உணர்ந்து அடங்கி இருப்பதே நலம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.   தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக இன்று  (நவ.18) சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, […]

தனுஷ் மகனுக்கு அபராதம் விதிப்பு! போக்குவரத்து போலீசார் நடவடிக்கை!

நடிகர் தனுஷின் மகன் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்ட பழகிய காட்சிகள் இணையத்தில் வெளியான நிலையில், போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி அபராதம் விதித்துள்ளனர்.   நடிகர் தனுசுக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக தனுசும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது இல்லம் போயஸ் கார்டனில் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் தனுஷின் மூத்த மகன் யாத்ரா ஆர்15 ரக பைக்கை ஓட்ட போயஸ் […]

மின்சாரமின்றி உயிரிழந்த 24 நோயாளிகள் பலி! காசாவில் பதற்றம்!

மின்சாரமின்றி தவிக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 24 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் காசாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி தொடங்கிய இஸ்ரேல்& ஹமாஸ் அமைப்புக்கு இடையிலான போர் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மருத்துவமனை, குடியிருப்பு பகுதிகள் என பாரபட்சமின்றி இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலால் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் காசாவை விட்டு வெளியேறிய நிலையில் எஞ்சியுள்ள மக்கள் உயிரை கையில் […]

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

இன்று நடைபெறவுள்ள சட்டமன்ற சிறப்புக்கூட்டத் தொடரை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.   தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று (நவ.18) நடைபெற உள்ளது. சட்டமன்றத்தில் இருந்து ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி உரிய விளக்கங்கள் கேட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார்.   அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக இந்த சிறப்புக் கூட்டம் […]

22 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்! சென்னையில் பரபரப்பு!

போதை பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சென்னையில் 22 போலீசாரை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.   சென்னையில் பெருகிப் போயிருக்கும் போதைப் பொருள் புழக்கத்தை தடுத்து நிறுத்த சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். போதைப் பொருட்கள் புழக்கம் தொடர்பாக எழுந்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களுக்கு […]