News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ரத்து ஆகுமா..? அண்ணாமலை ஆவேசம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தமிழில் எழுதியவர்கள் யாருமே பாஸ் ஆகக்கூடாது என்பது போன்று கடுமையான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதனை ரத்து செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்திருந்தார். ரத்து செய்யவில்லை என்றால் நீதிமன்றத்துக்குப் போவோம் என்றும் எச்சரிக்கை செய்தார்.  இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு அண்ணாமலையும் ஆவேசம் காட்டியுள்ளார். அண்ணாமலை அவரது பதிவில், ’’டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், மொத்தம் 200 கேள்விகளில், தமிழ்ப் பாடத்திற்கு மட்டும் 100 கேள்விகள் உள்ளன. கடந்த 12.07.2025, […]

மோடிக்கு வார்னிங்..? ஜெகதீப் தன்கர் ராஜினாமா ரகசியம்

உடல் நிலையைக் காரணம் காட்டி துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இது, மோடிக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை என்று சொல்லப்படுகிறது. அதேநேரம், அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற கேள்வியும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். அந்தக் ராஜினாமா கடிதத்தில், உடல் நலனுக்கு முக்கியத்துவம் தரவும், மருத்துவர்கள் அறிவுரை காரணமாகவும் ராஜினாமா […]

எடப்பாடிக்கு சிறுபான்மை வாக்குகள் கிடைக்குமா? எங்கெங்கும் இஸ்லாம் தொப்பி

எடப்பாடி பழனிசாமி செல்லும் இடமெல்லாம் இஸ்லாமிய தொப்பிகள் வழங்கப்படுவதும் அதை அவர் அணிந்துகொண்டு போஸ் கொடுப்பதும் வழக்கமாகி வருகிறது. இந்நிலையில் எடப்பாடிக்கு சிறுபான்மை வாக்குகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டா என்பது கேள்வியாகிறது. இது குறித்துப் பேசும் அரசியல் விமர்சகர்கள், ‘’கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சிக்கு 69சதவீத முஸ்லீம் வாக்குகள் திமுகவிற்கு சென்றது,25 சதவீதம் அதிமுக கட்சிக்கு வந்தது பிற கட்சிகள் 6 சதவீதம் வாக்குகளை பெற்றது. இந்த முறை 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக […]

அன்வர்ராஜா அவுட். எடப்பாடியுடன் பா.ஜ.க. கூட்டணி தாக்குப் பிடிக்குமா..?

பாஜகவுடன் கூட்டணி அமைந்ததில் இருந்து அதிமுகவில் எக்கச்சக்க குழப்பம் நடந்துவருகிறது. இதில் உச்சபட்சமாக மூத்த தலைவர் அன்வர் ராஜா கட்சியில் இருந்து வெளியேறி தி.மு.க.வில் இணைந்துள்ளார். மேலும் சில தலைவர்கள் விலகக்கூடும் என்று பேச்சு எழுகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆங்கில நாளிதழுக்குத் தெளிவாகப் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கேள்வி ; பாஜகவுடனான கூட்டணியை 2023-ம் ஆண்டில் முறித்துக்கொண்ட பிறகு, இப்போது மீண்டும் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளீர்கள். 2026-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு அமையவுள்ள கூட்டணி […]

விஜய் கட்சிக்கு இவ்வளவு ஓட்டு கிடைக்குமா..? திமுக சர்வே ரிப்போர்ட்

திமுக சார்பில் ஒவ்வொரு மாதமும் ஒரு சர்வே எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுகவினர் எடுத்திருக்கும் விஜய் குறித்த சர்வே அந்த கூடாரத்தையே அலற வைத்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்ட வகையில் நடிகர் விஜய் கட்சியின் நிலவரம் குறித்து தமிழகம் முழுவதும் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது முதல் முறையாக ஓட்டுப் போடும் இளைய வாக்காளர்களில் சுமார் 70% வாக்குகள் விஜய்க்குப் போகிறது. இவர்களில் சிறுபான்மை சமுதாயத்தினர் 38 சதவிகிதம் என்பது ஆச்சர்யமான […]

எடப்பாடியின் சர்ச்சை பேச்சுக்கு பாஜக கப்சிப்…. நெல்லையில் ஸ்பெஷல் விருந்து

ஒருவழியாக அதிமுக – பாஜக கூட்டணி அமைந்துவிட்டாலும் இன்னமும் தெளிவு கிடைக்கவே இல்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்வைத்த ”கூட்டணி ஆட்சி” என்ற கருத்து மீண்டும் மீண்டும் அதிமுக தரப்பை கோபப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு அதிரடியாகப் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாட் பழனிசாமி பேசுகையில், ‘’பாஜகவுடன் கூட்டணி ஆட்சி என்பது கிடையாது. அந்த அளவிற்கு ஏமாளிகள் நாங்கள் இல்லை. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்வோம்’’ என்று திட்டவட்டமாக தெரிவித்து […]

எடப்பாடிக்கு குஷியான சர்வே ரிசல்ட்… விஜய், சீமானுக்கு எத்தனை சீட் தெரியுமா?

தேர்தலுக்கு இன்னமும் 8 மாதங்கள் இருக்கும் நிலையில் சத்தியம் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள சர்வே தமிழகத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது. ஆளும் திமுகவுக்கு கடுமையான போட்டியாக அதிமுக இருக்கிறது என்பது திமுகவினரை அதிர வைக்கிறது. தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு அதிகம் உள்ளது, யார் மீண்டும் முதலமைச்சராக வர மக்கள் விருப்பம் தெரிவிக்கிறார்கள், எந்த கட்சி ஆட்சியமைக்கும், யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்றெல்லாம் கணிப்பு வெளியிட்டுள்ளது. அரசு ஊழியகள் ஆசிரியர்களின் வாக்குகள் யாருக்கு […]

விஜய் உருவாக்கும் மக்கள் நலக் கூட்டணி. திமுகவுக்கு நல்ல யோகமடா

அதிமுக கூட்டணியில் விஜய் சேரப்போவதில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. அவர் தனியே நின்று வாக்குகளைப் பிரிப்பார். அதோடு அவருடன் பெரிய கட்சிகள் யாரும் கூட்டணி சேர்வதாகவும் தெரியவில்லை. எனவே குட்டிக்குட்டி கட்சிகளுடன் இணைந்து மக்கள் நலக்கூட்டணி அமைக்கிறார். இது திமுகவுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்பதே அரசியல் நோக்கர்கள் கருத்தாக உள்ளது. இது குறித்து பேசும் பத்திரிகையாளர், ‘’இன்றைய சூழலில் தவெக இளையதலைமுறையினர் வாக்குகள் பெறுவதில் முன்னிலையில் இருந்தாலும் 35 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் கட்சியை கொண்டு சேர்ப்பதில் பலவீனமாக […]

ஜெயிலுக்குப் போகிறாரா நயினார் நாகேந்திரன்..? குஷியில் அண்ணாமலை

தமிழகத் தலைவர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட அண்ணாமலைக்கு இன்னமும் பதவி வழங்கப்படவில்லை. மீண்டும் தலைவர் பதவிக்கு அவர் குறி வைத்திருக்கிறார். இந்நிலையில் நயினார் நாகேந்திரனுக்குச் சிக்கல் ஏற்படும் வகையில் தேர்தலுக்குப் பிடிபட்ட பண விவகாரம் மாறிவகிறது. தமிழ்நாடு பாஜக தலைவர் மற்றும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மீது ஓட்டுக்குப் பணம் வாங்கிய வழக்கு இருக்கிறது. பாஜகவின் உயர்மட்ட தலைவர்களுக்கும், 2024 ஏப்ரலில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 3.98 கோடி பணத்திற்கும் தொடர்பு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக […]

விஜய், சீமான் கட்சிகளுடன் இபிஎஸ் பேச்சுவார்த்தை.? பிரமாண்டமாகும் கூட்டணி

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், நடிகர் விஜய், சீமான் ஆகியோருடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா என்ற கேள்விக்குப் பதில் கூறியிருக்கிறார்.  தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி குறித்து பேசியிருக்கிறார். அந்த பேட்டியில் இருந்து சில கேள்விகள் மட்டும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.   2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? 2026 தேர்தலில் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். […]