தொண்டை வலி சிகிச்சை எடுத்து வருகிறேன்! மன்சூர் அலிகான் போலீசாருக்கு கடிதம்!

நடிகர் தனக்கு தொண்டை வலி இருப்பதால் பேச மிகவும் சிரமமாக இருப்பதால் நாளை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக அனுமதி அளிக்குமாறு ஆயிரம் விளக்கு போலீசாருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில், நடிகை திரிஷா குறித்து மிகவும் ஆபாசமாக பேசி சர்ச்சையில் சிக்கினார். இதனால் கொதித்தெழுந்த திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்து, மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
முன்ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் மனுதாக்கல்!

நடிகை திரிஷா குறித்து ஆபாசமாக பேசிய வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில், நடிகை திரிஷா குறித்து மிகவும் ஆபாசமாக பேசி சர்ச்சையில் சிக்கினார். இதனால் கொதித்தெழுந்த திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்து, மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். […]
12 ஆண்டுகளுக்கு பிறகு! மதுரை கள்ளழகர் கோவில் குடமுழுக்கு விழா!

12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை கள்ளழகர் கோவிலில் இன்று குடமுழுக்கு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. மதுரை அருகே உலகப்பிரசித்தி பெற்ற அழகர்கோவிலில் கள்ளகழகர் கோவில் அமைந்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு இக்கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்ற நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு ரூ.2 கோடி செலவில் ராஜகோபுர திருப்பணிகள் நடத்தி முடிக்கப்பட்டன. திருக்கல்யாண மண்டப வளாகத்தில் நேற்று முன்தினம் (நவ.21) யாகசாலை பூஜைகளுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. […]
பாலகிருஷ்ணா இப்படிப்பட்டவரா? மற்றொரு பிரபலம் பகீர் தகவல்!

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா குறித்து மற்றொரு பிரபல நடிகை வெளியிட்ட தகவல் தற்போது திரையுலகத்தினர் மத்தியில் பேச்சுப் பொருளாக மாறியுள்ளது. நடிகை விசித்ரா பிக்பாஸ்7 நிகழ்ச்சியில் டாஸ்க் ஒன்றில் பேசும்போது, ‘‘கடந்த 20 வருடங்களுக்கு முன்பு பிரபல நடிகர் ஒருவர் தன்னை இரவு நேரத்தில் ஓட்டல் ரூமுக்கு அழைத்தார். நான் வராததால் கதவை தட்டி தகராறு செய்தார்’’ என்று தனக்கு நடந்த மோசமான சம்பவம் குறித்து பகிர்ந்து அழுதார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த நடிகர் பாலகிருஷ்ணாதான் […]
பஞ்ச ரதங்களின் தேரோட்டம்! திருவண்ணாமலையில் விழாக்கோலம்!

பஞ்சரதங்களின் தேரோட்டத்தை முன்னிட்டு திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 17ம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழாவின் 7ம் நாளான இன்று திருவண்ணாமலையில் பஞ்ச ரதங்களின் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முழு முதல் கடவுளான விநாயகரின் தேரை மாட வீதிகளில் பக்தர்கள் இழுச் சென்றனர். அதற்கு அடுத்தபடியாக 2வது வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானின் தேரோட்டம் நடைபெற்றது. விநாயகர் மற்றும் முருகப்பெருமானின் 2 […]
ஒரு போலீஸ்காரர் உட்பட 3 பேர் பலி! பதற்றத்தில் பஞ்சாப்!

குருத்வாராவை கைப்பற்றுவதில் ஏற்பட்ட மோதலில் சீக்கியர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு போலீஸ்காரர் உட்பட 3 பேர் பலியான சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் சீக்கியர்களின் புனித தலமான குருத்வார் அமைந்துள்ளது. இதனை கைப்பற்றுவதில் மோதல் ஏற்பட்டதால் நிஹாங் சீக்கியர் பிரிவைச் சேர்ந்த ஒரு நபர் திடீரென்று துப்பாக்கிசூடு நடத்தினார். இதில் ஒரு போலீஸ்காரர் ஒருவர் உட்பட 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. […]
இந்திய கிரிக்கெட் அணிக்கு பலமாக முழு நாடே உள்ளது! சோயிப் அக்தர் பாராட்டு!

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையிலும் அந்நாட்டு பிரதமர் மோடி வீரர்களுக்கு ஆறுதல் கூறிய சம்பவத்தை பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர் பாராட்டியுள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி, தன்னை எதிர்த்து விளையாடி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை இழந்த துக்கத்தை தாங்க முடியாத கேப்டன் ரோகித் சர்மா, முகமது சிராஜ் மற்றும் விராட் கோலி ஆகிய வீரர்கள் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதனர். இதில் விராட் […]
தி.மு.க. இளைஞரணி மாநாட்டை வெற்றி மாநாடு ஆக்குவோம்- அமைச்சர் உதயநிதி!

சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாட்டை வெற்றி மாநாடாக அனைவரும் மாற்றிக் காட்ட வேண்டும் என்று சேலத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். சேலம் மாவட்டத்தில் தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு இளைஞரணியினர் முன்பு உரை நிகழ்த்தினார். அவர் பேசும்போது, ‘‘மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாடு போன்று தி.மு.க. மாநாடு இருக்காது. மேலும் வரப்போகும் நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை எதிரொலிக்கும் […]
கலைஞர் நூற்றாண்டு விழா! புது சர்ச்சையால் பரபரப்பு!

எம்.ஜி.ஆர். நினைவுநாளன்று கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை நடத்துவதா என்று புதிய சர்ச்சை எழுந்துள்ளதால் தமிழ் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழா வருகிற டிசம்பர் மாதம் 24ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தென்னிந்திய நடிகர் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தி வருகிறது. விழா அழைப்பிதழ்களை ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, மோகன்லால், விஜய், அஜித், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட நட்சத்திரங்களுக்கும் கொடுக்கும் வேலையும் ஆரம்பமாகியுள்ளது. […]
‘குய்கோ’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

சென்னை சாலிகிராமத்தில் நடிகர் யோகிபாபு நடிப்பில் வெளியாக உள்ள ‘குய்கோ’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. நடிகர்கள் யோகிபாபு, விதார்த், நடிகை வினோதினி வித்யநாதன் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘குய்கோ’. இத்திரைப்படத்தை இயக்குனர் அருள்செழியன் இயக்கியுள்ள நிலையில், ஏ.எஸ்.டி. பிலிம்ஸ் தயாரிப்பில் தயாராகியுள்ளது. நாளை மறுநாள் (நவ.24) இத்திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று (நவ.22) சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விதார்த், நடிகை வினோதினி வித்யநாதன், […]

