சிக்கலில் குஷ்பு! பட்டியலின பெண்களின் போராட்டம் அறிவிப்பு!

குஷ்பு மன்னிப்பு கேட்கும் வரை ஓயுமாட்டோம் என்று பட்டியலினத்தைச் சேர்ந்த 500 பெண்கள் நாளை நடிகை குஷ்புவின் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். நடிகை திரிஷா, மன்சூர் அலிகான் விவகாரத்தில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு குரல் கொடுக்காதது ஏன் என்று நெட்டீசன் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்த நடிகை குஷ்பு, ‘சேரி’ என்ற வார்த்தையை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. சேரி என்ற […]
மாணவனின் கழுத்தை அறுத்த சக மாணவன்! தனியார் கல்லூரி வாகனத்தில் பயங்கரம்!

கல்லூரி வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த எம்.பி.ஏ.மாணவர் ஒருவர் திடீரென்று பொறியியல் மாணவரின் கழுத்தை அறுத்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முசிறியைச் சேர்ந்த நிதிஷ்குமார் என்பவர் தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு பொறியியல் படிப்பு படித்து வருகிறார். இவர் தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு கல்லூரியின் வாகனத்தில் செல்வது வழக்கம். அதன்படி வழக்கம் போல் மாணவன் நிதிஷ்குமார் கல்லூரி வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே கல்லூரியில் அண்ணாமலை என்ற […]
சீதை அமர்ந்திருந்த கல்! இலங்கையில் இருந்து இந்தியா வந்து சேர்ந்தது!

இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதை அசோகவனத்தில் அமர்ந்திருந்த கல் தற்போது ராமர் கோவில் வைத்து வழிபடுவதற்காக அரசு மரியாதையுடன் இந்தியா வந்து சேர்ந்தது. இலங்கை மன்னன் ராணவனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதை அங்கிருந்த அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தார். அப்போது சீதை அமர்ந்திருந்ததாக சொல்லப்படும் கல்லை இந்தியாவிற்கு கொண்டு வந்து வழிபட ராமஜென்ம பூமி அறக்கட்டளை முடிவு செய்தது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கும்பாபிஷேக விழா வருகிற (2024) […]
சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை! முதலமைச்சர் திறந்து வைத்தார்!

சென்னை மாநில கல்லூரியில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் 110வது விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் முன்னாள் இந்திய பிரதமர் வி.பி.சிங் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், சென்னையில் சிலை அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் மதிப்பில் வடிவமைக்கப்பட்ட முன்னாள் […]
கந்துவட்டி கொடுமை! 3 குழந்தைகளைக் கொன்று தம்பதி தற்கொலை!

கர்நாடக மாநிலத்தில் கந்துவட்டி கொடுமை தாங்காத தம்பதி தங்களது 3 குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தும்கூர் சதாசிவா நகரைச் சேர்ந்த கரீப்த சாப், தனது மனைவி சுமையா மற்றும் 3 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வந்த கரீப் சாப் போதிய வருமானம் கிடைக்காததால் அக்கம்பக்கத்தினரிடம் 1 லட்சம் ரூபாய் அளவுக்கு மீட்டர் வட்டியில் கடன் வாங்கி இருக்கிறார். […]
புஷ்பா-2வில் மிரட்டும் அல்லு அர்ஜூன்

புஷ்பா படத்தோட முதல் பாகத்த இன்னும் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்ல. இந்த படத்துல அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஒரு சாங்குக்கு சமந்தான்னு செம கலர்புல்லா நடிச்சிருந்தாங்க. வசூல்ல சாதன படச்ச புஷ்பா படத்தோட 2ம் பாகம் 2024 ஆகஸ்டு 15 தேதி ரிலீசாகுது. இந்த படம் உலகளவுல 1,000 கோடி ரூபாய்க்கு மேல வசூல் பண்ணும்னு சொல்லப்படுற நிலையில அல்லு அர்ஜூனுடைய சம்பளம் எகிறி போயிருக்கு. படத்தோட லாஸ்ட்ல வர்ற லாபத்துல இருந்து 33% […]
அடுத்த 24 மணிநேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுபகுதி! இந்திய வானிலை மையம் தகவல்!

அடுத்த 24 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெரிய அளவில் மழை பெய்யாத நிலையில் கடந்த ஒரு வாரமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது […]
பிரதமர் மோடி திருப்பதியில் சாமி தரிசனம்! வைரல் புகைப்படங்கள்!

140 கோடி மக்களின் நலன் வேண்டி பிரதமர் மோடி திருப்பதி கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடி தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்றிருந்த நிலையில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு நேற்று (நவ.26) இரவு 7.40 மணியளவில் திருப்பதி வந்து சேர்ந்தார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடியை ரேணிகுண்டா விமான நிலையத்தில் நேரில் சென்று வரவேற்றார். […]
அமைச்சர் உதயநிதியின் 46வது பிறந்தநாள்! பெற்றோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்!

அமைச்சர் உதயநிதி தனது 46வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (நவ.27) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பேசினார். தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதே போல் முன்னாள் முதலமைச்சரும் தனது தாத்தாவுமான கருணாநிதியின் நினைவிடத்திலும் […]
மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்! முக்கிய தகவல்கள்!

மெட்ரோ ரெயில் சேவையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னையில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பீக் அவர்ஸ் மட்டுமல்லாது சாதாரண நேரத்திலும் கூட பொது மக்கள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். டிராபிக், சிக்னல் உள்ளிட்ட பிரச்சினைகள் இன்றியும், விரைவான மற்றும் சவுகரியமான போக்குவரத்துக்காக பயணிகள் மெட்ரோ ரெயிலை தேர்வு […]

